Category காவி கார்ப்பரேட் பாசிசம்

பாசிஸ்டுகளின் அணியில் அரசு அதிகாரிகள்!

மோடியின் மீதான குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் தேர்தல் ஆணையர், மோடியை எதிர்க்கும் கட்சித் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, வழக்கு போட்டு அவர்களைக் கைது செய்யும் அமலாக்கத்துறை அதிகாரிகள். தேர்தல் நடக்கும் முன்பாகவே மோடிதான் வெற்றி பெற்று பிரதமராக வரப்போகிறார் என்று அவருக்காக 100 நாள் திட்டத்தை உருவாக்க வேலை செய்யும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என இவர்கள் அனைவரும், அரசுத் தலைமை உத்தரவிடுகிறது அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே இந்த வேலையைச் செய்யவில்லை. இவர்கள் அனைவரும் பாசிசத்தின் அணியில் இணைந்து அதற்காக உளமார பணியாற்றுகின்றனர்.

ஒன்றியத்தில் ஆட்சிமாறினால் பாசிஸ்டுகளின் திட்டங்களை செயல்படுத்திய அதிகாரிகளை
தண்டிக்க முடியுமா?

ராகுல் காந்தி சொல்வதை நேர்மறையில் எடுத்துக் கொண்டால் கூட அவர் சொல்வது போல ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பாஜக வின் பாசிச அஜண்டாவிற்கு சேவைசெய்யும் இந்த அதிகாரிகளை தண்டிக்க முடியுமா? அதற்கு இந்த கட்டமைப்பில் வாய்ப்புகள் உண்டா? இல்லை என்றுதான் கூறவேண்டும்.

காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த
தேர்தல் என்பது ஏமாற்று!
மக்கள் படையே ஒரே மாற்று!

    அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! நமது நாடு ஒரு கொடிய இருண்ட காலத்தை நோக்கிப் பயனப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் வெட்டிப் புதைத்துவிட்டு முதலாளித்துவத்தின் அப்பட்டமான சர்வாதிகார ஆட்சியை, பாசிச ஆட்சியை நிறுவுவதை நோக்கி மோடி – ஆர்.எஸ்.எஸ்.  தலைமையிலான காவி பாசிசக் கும்பல் வெறித்தனமாக முன்னேறி வருகிறது.…

தேர்தல் என்பது ஏமாற்று!
தெருவில் இறங்குவதே ஒரே மாற்று!

  காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த தேர்தல் என்பது ஏமாற்று! தெருவில் இறங்குவதே ஒரே மாற்று! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம், பொதுக்கூட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி பென்னாகரம் ஏப்ரல் 14, மாலை 4 மணி அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியைத் தோற்கடித்துவிட்டால் “பாசிசம் வீழ்ந்து” வசந்தகாலம் வந்துவிடும் என்பதாக “இந்தியா”…

மீண்டும் சி.ஏ.ஏ. – மதவெறியே பாசிஸ்டுகளின் பிரதான ஆயுதம்

சிஏஏ என்பது மூன்று நாடுகளில் இருந்து மதஒடுக்குமுறை காரணமாக வெளியேறி இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது, இதனை எப்படி நீங்கள் தவறெனக் கூறலாம். தற்போது அமுலுக்குக் கொண்டுவந்திருக்கும் சட்டவிதிகளில் கூட இஸ்லாமியர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்துவது போல ஒன்றும் இல்லையே என்று ஏற்கெனவே கேட்கப்பட்டு முறியடிக்கப்பட்ட பழைய வாதத்தை மீண்டும் காவிகள் கடைவிரிக்கிறார்கள்.

“இந்தியா” கூட்டணியால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

பாசிசம் தங்களை திட்டமிட்டு ஒடுக்குகிறது என்பதை இந்தக் கட்சிகள் உணர்ந்திருந்தாலும், இதனை பாசிசம் தன்னை நிறுவிக்கொள்வதற்கு தனது எதேச்சதிகார ஆட்சியை நிலைநாட்டுவதற்கான நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாக பார்க்கத் தவறுகிறார்கள். அரசியல் விளையாட்டில் எதிரிகளை கையாளும் வகையாக சுருக்கிப் பார்க்கிறார்கள் இதனைத் தனிநபர்களின் ஆதிக்கமாக அவர்கள் முன்னெடுக்கும் செயலாக பார்க்கிறார்கள். பாசிசத்தின் வழிக்கு கொண்டுவரும் ஒத்திசைவாக்கம் என்ற நிகழ்ச்சிப் போக்கின் அங்கமாக இதனைப் பார்க்கவில்லை.

ஞானவாபி: மதவெறியைத் தூண்டி சமூகத்தைத் துண்டாட துடிக்கும் காவிகள்

இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருந்தால் அவர்களது பாசிச சித்தாந்தம் என்றைக்கும் காலூன்ற முடியாது. மதவெறியைக் கொண்டு சமூகத்தை இரண்டாகப் பிளப்பதுதான் அவர்களது நோக்கம். நாட்டை பதற்றத்திலேயே வைத்திருப்பதன் மூலம் அவர்கள் எப்போதும் வெற்றியடைகிறார்கள்.