Category காவி கார்ப்பரேட் பாசிசம்

குஜாபூர் கலவரம்: சரிந்த செல்வாக்கை ஈடுகட்ட இஸ்லாமியர்களைத் தாக்கும் காவி கும்பல்

குஜாபூர் கிராமம் விஷால்காட் கோட்டையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விஷால்காட் கோட்டையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை வலியுறுத்தி பேரணி என்று அறிவித்துவிட்டு கோட்டைக்கு பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸ்லீம் வீடுகளையும் மசூதியையும் சூறையாடியதிலிருந்தே பேரணிக்கு பின்னால் காவிகும்பலின் திட்டம் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும். 

பாரதிய குற்றவியல் சட்டம்:
காலனிய ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு
பெயரை மாற்றி ஏமாற்றும் காவி கும்பல்!

புதிய மூன்று சட்டங்களில் உள்ள சரத்துக்களில் 95% பழைய சட்டங்களே உள்ளன. அதன் தலைப்புகளும, உட்பிரிவுகளும், பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் பிரிட்டீஷ் காலனியாதிக்கவாதிகளின் பழைய குற்றவியல் சட்டங்களில் உள்ள பல்வேறு ஒடுக்குமுறைக் கூறுகளையும் சேர்த்துக் கொண்டு ‘பாரதிய’ சட்டம் என்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதுபோல் வாய்சவடால் அடித்து வருகிறது மோடி-அமித்ஷா கும்பல். 

அருந்ததி ராய் மீது பாயும் UAPA சட்டம் :
மோடியரசின் பாசிச ஒடுக்குமுறை 3.0

மோடி 3.0 ஆட்சியில் அவர் முன்புபோல நடந்துகொள்ள முடியாது. சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் மோடியின் பாசிச திட்டங்களை அமல்படுத்த விடமாட்டார்கள் என்று பலரும் ஜோசியம் சொல்லுகின்றனர். மாறாக தான் ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குள்ளேயே அருந்ததிராயின் மீதான கரையான் அரித்துப் போன ஒரு வழக்கை எடுத்து கொண்டு அவரை UAPA சட்டத்தில் கைது செய்ய ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் அறிவுத்துறையினரின் மீதான தங்களுடைய பாசிச நடவடிக்கைகள் மோடி 3.0 விலும் தொடரும் என மோடி-அமித்ஷா கும்பல் அறிவித்துள்ளது.

பாசிசத்தை வீழ்த்த :
தேர்தல் மாயையை புறக்கணிப்போம்!
பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!

  நடந்து முடிந்த 18-வது நாடாளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே, நாடும் நமதே என்கிற முழக்கத்தை முன்வைத்து, பிரச்சாரத்தை முன்னெடுத்து வென்றன, திமுகவும், இந்தியா கூட்டணியும். நாடு தமதாகவில்லையென்றாலும், தமிழகத்தில் 40-தையும் சிந்தாமல், சிதறாமல் அள்ளியெடுத்து தமதாக்கிக் கொண்டன. இதையே பாசிசத்திற்கெதிரான பெரும் வெற்றி எனக் கொண்டாடி வருகின்றன. ஆனால் இவை கூட அதிமுக, பாஜகவுடன்…

பாசிச ஆட்சி நிறுவப்படுவதற்கான அபாயம் நெருங்குகிறது!

தான் மட்டுமே எப்போதும் முக்கியத்துவம் பெறுபவராக இருக்க வேண்டும், மற்றவர்கள் எல்லாம் தனது கட்டளைக்குக் கீழ்படிந்து பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் மோடியின் இயல்பு.... இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசுவதும் செயல்படுவதும் மோடியின் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது அதனை கூட்டணிக் கட்சிகளுக்காக மாற்றிக்கொள்ள அவரால் முடியாது.... இப்படிப்பட்ட ஒரு நபரால் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு ஆட்சியை வழிநடத்திச் செல்லவே முடியாது

மோடியும் – கடவுளும்: கடவுள்கள் ஒரு போதும் மக்களைக் காப்பாற்றுவதில்லை
மாறாக மக்கள் தான் கடவுளைக் காப்பாற்றி வருகிறார்கள்.

சமீபத்தில் பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டில் “நான் உயிரியல் ரீதியில் பிறக்கவில்லை”- “கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளதாக கருதுகிறேன்” என்று கூறியிருப்பதன் மூலம் இந்தியாவின் நிரந்தரப் பிரதமராக தன்னை அறிவித்துள்ளார். ஒருவேளை மோடி அரசுக்கு தோல்வி ஏற்பட்டால் அவர்கள் அமைதியாக பதவியை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பது பாசிஸ்டுகளுக்கே (Fascist) உரித்தான…

2024 தேர்தலில் மோடி அரசுக்கு சத்தமின்றி அதேசமயம் வலிமையான எதிர்ப்பாக குடிமைச் சமூகம் உருவாகிறது! – பரகலா பிரபாகர்

எவ்வாறாயினும், மோடி அரசைப் பொறுத்தவரை, தற்போதைய ஆட்சியை இழப்பது மிகவும் ஆபத்தானது என்பதால் தோல்வி ஏற்பட்டால் அவர்கள் அமைதியாக பதவியை விட்டு வெளியேற வாய்ப்பில்லை. தோல்வியைத் தடுக்கும் பல நகர்வுகளை அவர்கள் மேற்கொண்டு வருவது நம் கண்முன்னே தெரிகிறது.

பரகலா பிரபாகரின் கட்டுரையைத் திரிக்கும் தீக்கதிர்:
பாசிச எதிர்ப்பில் மக்கள் மீது நம்பிக்கையற்று,
ஆளும் வர்க்கக் கட்சிகளிடம்
சரணடைந்து கிடப்பதன் வெளிப்பாடே!

“அத்தகைய சந்தர்ப்பத்தில் [அதாவது அந்த அமளிதுமளியான வாரங்களில்] மக்கள் சமூகம்தான் தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மோடி அரசு தேர்தலைத் திருடிக் கொண்டு போவதைத் தடுக்கவும், நமது ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் தயாராகவும் வேண்டும்”

பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பல், தலித் – இஸ்லாமிய – கிருத்துவ மக்களுக்கும் மட்டுமல்ல, இந்து மக்களுக்கே எதிரானது!

    18 ஆண்டுகளுக்கு முன் அதாவது, கடந்த 2006 -ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், அன்றைய இந்திய ஒன்றிய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் ‘பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்,’ புதிய திட்டங்கள் கொண்டு வருவதன் மூலம் சிறுபான்மையினர், குறிப்பாக இசுலாமியர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளவும், வளர்ச்சியின்…