அழகு

அழகு

திராவிட மாடலின் பெருமைக்குப் பின்னால் ஒளிந்திருப்பது கல்வி முதலாளிகளின் பகற்கொள்ளையே!

திராவிடப் பெருமை பேசிக்கொண்டு தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதிலும் தீவிரமாக தனியார்மயத்தைக் திணிப்பதிலும் முனைப்புடன் வேலை செய்கின்றனர். வரலாற்று ரீதியாகவே பார்ப்பனியத்தை எதிர்த்த மரபு நமக்குண்டு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேவேளையில் திராவிட பெருமைகளைப் பேசி தனியார்மயத்தை திணிக்கின்ற உத்தியை நாம் அம்பலப்படுத்த வேண்டும். நாம் எழுப்ப வேண்டியக் கேள்வி, திராவிட மாடல் ஆட்சி கல்வியில் தனியார்மயத்தையும்/கார்பரேட்டுகள் நுழைவதையும் ஒழிக்கப்போகிறதா அல்லது ஆதரிக்கிறதா என்பதே!  

வரலாற்றுப் புரட்டுகளே காவி பாசிஸ்டுகளின் அடிப்படை

சாகாக்கள் மற்றும் பைடக்களில் இந்திய வரலாறு என்ற பெயரில் பேசிவந்த புனைவுக் கதைகளையும் தாண்டி தற்போது பொய்யான வரலாற்றை உருவாக்கி இந்துத்துவா முலாம்பூசி அதற்கு அரசு அங்கீகாரம் கொடுத்து அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மதவெறி ஊட்டுகின்ற வேலையை செய்துவருகின்றது ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பல்.

பில்கிஸ்பானு வழக்கின் கொலைக்குற்றவாளிகளை காப்பாற்றும் காவி பாசிஸ்டுகள்!

பில்கிஸ்பானு வழக்கின் குற்றவாளிகளுக்கு, குஜராத் அரசின் ஆதரவு, முழுமையான பொருளாதார மற்றும் சட்ட உதவிகள், சிறையில் ராஜகவனிப்பு என ஆர் எஸ் எஸ்-பாஜக வின் பேராதரவோடு உள்ளனர். கடந்த 15 வருட சிறைதண்டனையில் 3 வருடம் பரோலில் இருந்துள்ளனர். இதிலிருந்து குஜராத் அரசு, இக்குற்றவாளிகளை கையாண்ட விதத்தை நாம் புரிந்துகொள்ளலாம்

தகவல் தொழில்நுட்ப சட்டத்திருத்தம் – 2023 :
இணையச் செய்தி ஊடகங்களை ஒடுக்கும்
மோடி அரசின் பாசிச தாக்குதல் – பாகம் – 1

இச்சட்டத்திருத்தத்தின் மூலம், எது சரி எது போலியானது என்பதை தீர்மனிக்கும் முழு அதிகாரத்தையும் மோடி அரசு தனக்குத் தானே கொடுத்துள்ளது. பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைளை அம்பலப்படுத்துவதே சட்டப்படியே குற்றமாகலாம். ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் தனது அரசியல் லாபத்திற்காக கட்டவிழ்த்து விடும் பொய்களை இனி, சட்ட ரீதியாகவே உண்மையென மக்களிடம் பரப்ப முடியும்.

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் வேலை நேர சட்டத் திருத்தம்!
பின்புலம் என்ன?

ஐபோன் தயாரிப்பாக இந்தியத் தொழிலாளர்களுக்கான மாதச் சம்பளம் சராசரியாக 11000 ரூபாய். இது சீனத் தொழிலாளர்களுக்கு (3500 யென் = 41000 ரூபாய்) வழங்கப்படும் கூலியில் மூன்றில் ஒரு பங்குதான். இப்படி ஆப்பிள், பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் கொழிக்கவும், இந்திய தொழிலாளர்களை குறைந்த கூலியில் ஒட்டச் சுரண்டவும் வேலை நேர சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.