Category காவி கார்ப்பரேட் பாசிசம்

உயர்நீதிமன்ற மொழியாக தமிழை ஏற்க மறுக்கும் உச்ச நீதிமன்றமும் அதன் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஒன்றிய அரசும்

    சமஸ்கிருதம் தேவ பாஷை, அதிலிருந்து தோன்றிய இந்தி தேசிய பாஷை, ஆனால் தமிழ் உட்பட மற்ற இந்திய மொழிகள் அனைத்தும் சூத்திர, நீஷ பாஷைகள் என மொழியிலும் கூட ஏற்றத்தாழ்வு கற்பித்து ஒடுக்கியது பார்ப்பனியம். தமிழ் மொழியில் பேசினால் தீட்டாகிவிடும், மீண்டும் குளிக்க வேண்டும், என்ற காரணத்தால் மாலை குளியலுக்குப் பிறகு சமஸ்கிருதத்தில்…

சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக மாற்றிடவே இந்தித் திணிப்பு

தங்களது இந்துராஷ்டிரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காவி பாசிஸ்டுகள் ஒரு வரையறை வைத்திருக்கின்றனர். சாதி/வர்ணப் படிநிலையைக் கொண்ட சனாதனத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறை, வேதங்களின்  அடிப்படையில் நீதி பரிபாலனை, புராணங்களையும் இதிகாசங்களையும் உண்மையெனக் கற்பிக்கும் கல்விமுறை. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய பார்ப்பனியக் கலாச்சாரமே இந்தியா முழுமைக்குமான ஒரே கலாச்சாரம். இதுதான் காவிக் கும்பல் நிறுவத்துடிக்கும்…

மாநில உரிமைகள் பறிப்பு: காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் தீர்வில்லை

‘சுதந்திர’ இந்தியாவின் அரசியல் சட்டம், இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் பல்வேறு கலாச்சாரங்களும், பழக்க வழக்கங்களும் இருந்தாலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை தேசிய மொழியாகவும், பார்ப்பனர்களின் அடையாளங்களை இந்தியாவின் அடையாளமாகவும், ஆளும் வர்க்கத்தினரால் இன்றுவரை முன்னிறுத்தப்பட்டு வருகிறது. தேசிய இனங்களின் உரிமையைப் பறிக்கின்ற இந்த இந்(து)திய தேசிய கட்டமைப்பு இயல்பாகவே காவி-கார்ப்பரேட் பாசிசம் வளர்வதற்கு ஏதுவாக உள்ளது.

நாடு முழுவதும் அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான காவிகளின் அட்டூழியங்கள்!

ஒரு முஸ்லீம் ஆண் தனது இந்து காதலியை வெட்டிக் கொன்று விட்டான் என்ற கோணத்தில் சாரதா வால்கர் கொலையை செய்தி-சமூக ஊடகங்களில் காவி கும்பல் பரப்பியது. இதன் பிறகுதான் மதம் மற்றும் சாதிகளுக்கு இடையேயான திருமணங்களைக் கண்காணிக்க மகாராஷ்டரா அரசு ஒரு குழுவை அமைத்தது. எனவே, இனி மாற்று மதம், மாற்று சாதிகளுக்கு இடையே நடக்கும் திருமணங்களில் காவிக் கும்பல்களின் பஞ்சாயத்துக்களும், கலவரங்களும் நடைபெறுவது திண்ணம்.

பசுக்களை காப்பாற்றுவதாக கூறி விவசாயிகளைப் பலியிடும் உ.பி. அரசு

உத்தரபிரதேசத்தில் 2017ல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற அம்மாநிலத்தின் மாடுகளும் ஒரு முக்கிய காரணம். அவ்வாண்டின் தேர்தல் அறிக்கையில்  பசுக்களைப் பாதுகாப்போம், பசுவின் புனிதத்தை பாதுகாப்பதற்கு கோசாலைகளை அமைப்போம் என்று பா.ஜ.க  விவசாயிகளிடம் வாக்குறுதி கொடுத்தது. ஆட்சிக்கு வந்த பின்பு பசு வதை தடை உத்தரவு, மாட்டிறைச்சிக்கு தடை என  பாஜக  சட்டம் இயற்றியது.…

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியால் லாபமடைவது யார்?

ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் முழுவதையும் ரிலையன்ஸ் நிறுவனமும், நயாரா நிறுவனமும் கொள்ளை லாபத்திற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.

தேர்தல் பாதையில் காவி பாசிசத்தை வீழ்த்த முடியாது: பாடமெடுக்கும் தேர்தல் முடிவுகள்

காவிக் கும்பலுக்கு போட்டியாக இந்துத்துவக் கொள்கைகளைப் பேசி பாஜகவை வீழ்த்த முடியாது. எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒன்று கூடி ஒரு தலைவரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும், பாஜக செய்தது போல பல நூறு கோடிகளை வாரி இறைத்து, மோடிக்கு நிகரான ஒரு ஆளுமையை, பிம்பத்தைக் கட்டியமைத்தாலும், இந்துத்துவ அரசியலைப் பேசும் வரை அது காவி பாசிச கும்பலுக்கான மக்கள் அடித்தளத்தை மேலும் அதிகரிக்கவே உதவும்.

100 நாள் வேலைத்திட்டத்தை ஊத்திமூட எத்தனிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசு

காங்கிரசாவது பிரச்சனையை தற்காலிகமாக சமாளிக்க ஏதாவது செய்ய வேண்டும் என முயற்சித்தது ஆனால் உழைக்கும் வர்க்கத்தின் கோவனத் துணியையும் உருவி முதலாளிகளுக்குக் கொடுக்க துடிக்கும் கார்ப்பரேட் அடிமை காவிக் கும்பலோ நூறு நாள் வேலைத்திட்டத்தையும் ஊத்தி மூட முயற்சிக்கிறது.

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -3

அவசர நிலை காலத்தை விட மோடியின் ஆட்சியில் ஜனநாயகத்தின் நிலை மிகமோசமாக இருப்பதாக அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர். நிகழ்காலத்தில் ஜனநாயகத்தை மயிரளவும் மதிக்காத காவி கும்பல், அதன் குரல்வலையை நெரித்ததோடு மட்டுமில்லாமல் அந்த உண்மையை மறைத்து அதனிடத்தில் வேதகாலத்தில் ஜனநாயகம் இருந்தது என்ற பொய்யை வைத்து மாணவர்களையும் மக்களையும் ஏமாற்றுகிறது.

பொது சிவில் சட்டம் – இந்துராஷ்டிரத்திற்கான ஒரு முன்னோட்டம்.

பாபர் மசூதி பிரச்சனை, ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய பிரச்சனைகளில் நீதிமன்றங்களில் சாதகமான தீர்ப்பை பெற்ற பாஜக தற்போது தனது அடுத்த இலக்கான பொது சிவில் சட்டப்பிரச்சனையை முன்தள்ளுகிறது