Category காவி கார்ப்பரேட் பாசிசம்

குஜராத் படுகொலைக் குற்றவாளிகள் தொடர்ந்து விடுவிக்கப்படுவது ஏன்?

2002 குஜராத் கலவரத்தின் போது நரோதாகாமில் குறைந்தது 11 முஸ்லிம்களை படுகொலை செய்ததாக பாஜக–வின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி மற்றும் சங்கப் பரிவாரத்தின் ஒன்றான பஜ்ரங் தளத்தின் தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 66 பேரை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் இரண்டு வாரத்திற்கு முன்பு விடுதலை செய்துள்ளது. குஜராத் படுகொலையின் போது முஸ்லிம்களுக்கு எதிராக…

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் துயரம்:
அதானிக்காக சத்தீஸ்கர் பழங்குடி வனத்தைத்  தாரை வார்க்கும் மோடி !

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின்  போராட்டம் வெறும் வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமல்ல. அனைத்து ஓட்டுக்கட்சிகளின் துரோகத்திற்கும்,  நாட்டின் இயற்கை வளத்தை கொள்ளையிடும் அதானி போன்ற பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் மோடி அரசுக்கு எதிரான போராட்டமும் கூட.

இனப்படுகொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது
தங்களது சிறப்புரிமை எனக் கூறும் மோடி அரசு!

இனப்படுகொலையில் ஈடுபட்ட, கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த, பிஞ்சுக் குழந்தை உட்பட 7 பேரைப் படுகொலை செய்த கொடூர கொலைகாரர்கள் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் என கூற முடியாது, அது எங்களின் ‘சிறப்புரிமை’ (privilege) என்று ஒன்றிய அரசும், குஜராத் மாநில அரசும் உச்சநீதிமன்றத்திலேயே கூறுகின்றன.

நரோடா காம் படுகொலை வழக்கு: மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 67 ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர்கள் விடுதலை!

2002 குஜராத் இனப்படுகொலையில் நரோடா காம் பகுதியில் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் 11 முஸ்லீம்களை படுகொலைச் செய்த வழக்கில், குற்றச்சாட்டப்பட்ட 67 பேரையும் நிரபராதிகள் என  சிறப்பு SIT நீதிமன்ற நீதிபதி எஸ் கே பக்சி  தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பாஜக முன்னாள் எம்.எல்.எ மாயா கோட்னானி, பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி, விஷ்வ ஹிந்து பரிசத்…

இஸ்லாமியர்களின் ரம்ஜான் கூட்டுத்தொழுகைக்கு எதிராக
காவி கும்பலின் அட்டூழியம்

இஸ்லாமிய சமூகத்தினரை துன்புறுத்துவதற்கும், இழிவுபடுத்துவதற்கும் சித்திரவதை செய்வதற்கும் எந்த எல்லைக்கும் செல்ல, ஆளும் காவிகும்பல் தயாராகிவருகிறது.

நெருங்கும் கர்நாடக தேர்தல் – வெறிபிடித்து அலையும் காவிக் கும்பல்

கர்நாடக மாநிலத்தில் சென்ற முறை நடந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை நடத்தியே பாஜக வெற்றி பெற்றது. இம்முறையும் பாஜகவிற்கு ஆட்சியமைக்கும் அளவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவேதான் மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் தங்களது பாசிச நச்சு அரசியலைக் கையிலெடுத்துள்ளனர்.

நீதிமன்றங்களின் துணைகொண்டு இந்துராஷ்ட்ரத்தை நிறுவுவதற்கான காவி கும்பலின் செயல்திட்டம்

நீதிமன்றங்களின் துணைகொண்டு 2047க்குள் இந்து ராஷ்ட்ரத்தை அமல்படுத்துவதற்கான திட்டத்தினை இரண்டு பகுதிகளாக பாஜக அரசு செய்துவருகிறது. முதல் பகுதியில், இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவானவர்களை உச்சநீதிமன்ற/உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதும் இரண்டாவது பகுதியில் அந்நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகள் மற்றும் சட்டப் பிரிவுகளை பழங்கால இலக்கியங்கள், புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றின் துணையோடு விளக்கம் தருவது இறுதியில் இது போன்ற பல தீர்ப்புகளின் வாயிலாக அரசியல் சாசனத்தை இந்துத்துவா கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதை அதிகாரப்பூர்வமாக்குவது.

காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் வெறியாட்டம்; தற்போது திரிபுரா, அடுத்தது கேரளாவும், தமிழ்நாடும்!

திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சி அமையலாம் என்ற பரவலான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பாசிச பா.ஜ.க. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. வெற்றிபெற்ற களிப்பில் பாசிச வெறி தலைக்கேறி பதவியேற்று முடிப்பதற்குள் எதிர்க்கட்சிகள், குறிப்பாக, தனது பிரதான எதிரியான மார்க்சிஸ்ட் கட்சியின் அணிகள் மீது கொலைவெறித்…

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு – பாசிசத்தின் அடுத்த கட்ட தாக்குதல்.

“ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாக பேசினார் என்பதற்காக ராகுல்காந்தியின் எம்.பி. பதவியைப் பறிக்கலாம் என்றால் இஸ்லாமிய சமூகத்தின் மீது தொடர்ந்து வன்மத்துடன், அவதூறாக பேசி வரும் அமித்ஷா முதற்கொண்டு பல பாஜக தலைவர்களது பதவி இந்நேரம் பறிக்கப்பட்டிருக்க வேண்டும்.”