Category காவி கார்ப்பரேட் பாசிசம்

காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த
தேர்தல் என்பது ஏமாற்று!
மக்கள் படையே ஒரே மாற்று!

    அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! நமது நாடு ஒரு கொடிய இருண்ட காலத்தை நோக்கிப் பயனப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் வெட்டிப் புதைத்துவிட்டு முதலாளித்துவத்தின் அப்பட்டமான சர்வாதிகார ஆட்சியை, பாசிச ஆட்சியை நிறுவுவதை நோக்கி மோடி – ஆர்.எஸ்.எஸ்.  தலைமையிலான காவி பாசிசக் கும்பல் வெறித்தனமாக முன்னேறி வருகிறது.…

தேர்தல் என்பது ஏமாற்று!
தெருவில் இறங்குவதே ஒரே மாற்று!

  காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த தேர்தல் என்பது ஏமாற்று! தெருவில் இறங்குவதே ஒரே மாற்று! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம், பொதுக்கூட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி பென்னாகரம் ஏப்ரல் 14, மாலை 4 மணி அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியைத் தோற்கடித்துவிட்டால் “பாசிசம் வீழ்ந்து” வசந்தகாலம் வந்துவிடும் என்பதாக “இந்தியா”…

மீண்டும் சி.ஏ.ஏ. – மதவெறியே பாசிஸ்டுகளின் பிரதான ஆயுதம்

சிஏஏ என்பது மூன்று நாடுகளில் இருந்து மதஒடுக்குமுறை காரணமாக வெளியேறி இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது, இதனை எப்படி நீங்கள் தவறெனக் கூறலாம். தற்போது அமுலுக்குக் கொண்டுவந்திருக்கும் சட்டவிதிகளில் கூட இஸ்லாமியர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்துவது போல ஒன்றும் இல்லையே என்று ஏற்கெனவே கேட்கப்பட்டு முறியடிக்கப்பட்ட பழைய வாதத்தை மீண்டும் காவிகள் கடைவிரிக்கிறார்கள்.

“இந்தியா” கூட்டணியால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

பாசிசம் தங்களை திட்டமிட்டு ஒடுக்குகிறது என்பதை இந்தக் கட்சிகள் உணர்ந்திருந்தாலும், இதனை பாசிசம் தன்னை நிறுவிக்கொள்வதற்கு தனது எதேச்சதிகார ஆட்சியை நிலைநாட்டுவதற்கான நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாக பார்க்கத் தவறுகிறார்கள். அரசியல் விளையாட்டில் எதிரிகளை கையாளும் வகையாக சுருக்கிப் பார்க்கிறார்கள் இதனைத் தனிநபர்களின் ஆதிக்கமாக அவர்கள் முன்னெடுக்கும் செயலாக பார்க்கிறார்கள். பாசிசத்தின் வழிக்கு கொண்டுவரும் ஒத்திசைவாக்கம் என்ற நிகழ்ச்சிப் போக்கின் அங்கமாக இதனைப் பார்க்கவில்லை.

ஞானவாபி: மதவெறியைத் தூண்டி சமூகத்தைத் துண்டாட துடிக்கும் காவிகள்

இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருந்தால் அவர்களது பாசிச சித்தாந்தம் என்றைக்கும் காலூன்ற முடியாது. மதவெறியைக் கொண்டு சமூகத்தை இரண்டாகப் பிளப்பதுதான் அவர்களது நோக்கம். நாட்டை பதற்றத்திலேயே வைத்திருப்பதன் மூலம் அவர்கள் எப்போதும் வெற்றியடைகிறார்கள்.

இந்தியத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக இஸ்ரேலுக்கு அனுப்பும் பாசிச மோடி அரசு.

இந்தியத் தொழிலாளர்களை எவ்வித பாதுகாப்பும் இல்லாத கொத்தடிமைகளாக இஸ்ரேலுக்கு அனுப்புவது என்பது அதிகாரிகளின் கவனக்குறைவால் அல்லது அலட்சியத்தால் நடப்பது அல்ல, தொழிலாளர் நலன் சார்ந்த கெடுபிடிகள் எதுவும் இருக்கக் கூடாது என்ற இஸ்ரேலின் கோரிக்கை ஏற்று பாசிச மோடி அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இது நடைபெறுகிறது.

காவிகளின் இந்துராஷ்டிரத்தில் பெண்கள் வெறும் பொம்மைகளாக, உயிரற்ற பொருளாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமா?

தன்னுடைய அனுபவத்திலிருந்து இந்திய உழைக்கும் மகளிருக்கு பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி கூறியிருக்கும் அறிவுரை இதுதான், “இந்த அமைப்புக்கு எதிராக போராட முடியும் என நினைக்கும் பெண்களிடம் நான் கூற விரும்புவதெல்லாம், என்னால் முடியவில்லை, ஒரு நீதிபதியாக, மற்றவர்களுக்கு நீதிவழங்கும் பொறுப்பில் இருக்கும் என்னால் எனக்கு நீதிகிடைக்க போராட முடியவில்லை. நீங்கள் ஒரு பொம்மையாக உயிரற்ற பொருளாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்”

நாடாளுமன்றத்தில் வண்ணகுப்பி புகைவீச்சு: மக்கள் எழுச்சி மட்டுமே பாசிசத்தை வீழ்த்தும்!

நாடாளுமன்ற கட்சிகள் உண்மையில் பகத்சிங்கை வருடா வருடம் சிறப்பிப்பது நடிப்பாக இல்லாமல் இருந்தால் இந்நேரம் இளைஞர்களின் செயலை அங்கீகரித்து வரவேற்று இருக்க வேண்டும். மேலும் இளைஞர்களின் முழக்கத்தின் நியாயத்தை அங்கீகரித்து அதற்காகப் போராடி இருக்க வேண்டும். அதை விடுத்து பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு இல்லை என்று அலறி, ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்
பாசிசத்தின் தாக்குதலைக் கண்டு புலம்பும் எதிர்க்கட்சிகள்.

தங்கள் மீதான பாஜகவின் இந்த பாசிசத் தாக்குதலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் என்ன நடவடிக்கையை எடுத்துள்ளன என்று பார்த்தால், கண்டனம் தெரிவிப்பது, போட்டி நாடாளுமன்றம் நடத்துவது என வழமையாகச் செய்வதைத் தாண்டி அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. குறைந்தபட்சமாக இடைநீக்கத்தைத் திரும்பப் பெறக்கோரி மோடி, அமித்ஷா வீட்டையோ, துணை ஜனாதிபதியின் வீட்டையோ முற்றுகையிட்டிருந்தால் கூட பாஜகவிற்கு ஒரு நெருக்கடியினைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைப்பற்றியெல்லாம் சிந்திப்பதாகக் கூடத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேட்டிகள் பாஜகவின் பாசிச நடவடிக்கைகள் குறித்த புலம்பல்களாக மட்டுமே உள்ளன.