Category காவி கார்ப்பரேட் பாசிசம்

ஜக்கிக்கு வக்காலத்து வாங்கும் ஒன்றிய அரசு

காட்டை அழித்து, யானை வழித்தடத்தில் ஜக்கி கட்டிடம் கட்டியதும், சிலை அமைத்ததும் தவறில்லை, ஈஷா அறக்கட்டளை கல்வி வழங்கும் நிறுவனமாக இருப்பதால் அவர்கள் அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜ ராஜ சோழன் – சனாதனத்திற்கு சேவை செய்த பார்ப்பனிய அடிமை!

அவனது ஆட்சியில்தான் பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.

கார்ப்பரேட்டுகளின் சொத்துக்களைப் பெருக்க ஒரே கட்சி, ஒரே ஆட்சி!

“மக்கள் சேவையை மட்டுமே பா.ஜ.க. நோக்கமாகக் கொண்டுள்ளது” என்பதற்கு உலகமகா சாதனைகளாக குஜராத்தில் அணைகள் கட்டியது, கடற்கரை பகுதியை மேம்படுத்தியது, அருங்காட்சியகம் அமைத்தது, துறைமுகங்களை நவீனப்படுத்தியது, இமாச்சலப் பிரதேசத்தில் வளர்ச்சியை எட்டியது அனைத்திற்கும் காரணம் ஒன்றியத்திலும் இரு மாநிலங்களிலும் பா.ஜ.க.வான ஒரே கட்சி ஆட்சியில் இருந்ததுதான். எனவே ‘ஒன்றியத்திலும், அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தால்தான்…

பி.எப்.ஐ மீதான ஒடுக்குமுறை/தடை – ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பலின் காவி பாசிச நடவடிக்கையின் அடுத்தக் கட்ட நகர்வு : பாகம் – 2

"குண்டுவெடிப்புகள் மட்டுமில்லாது குஜராத் கலவரம், மும்பைக் கலவரம் முதல் சமீபத்திய டெல்லி கலவரம் வரை பல கலவரங்களை ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பல் தலைமை தாங்கி நடத்தியுள்ளது. இக்கலவரங்களை முன்னின்று நடத்திய பலர் தற்போது மோடி அரசில் அமைச்சர்களாகவும் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர்."

பாசிச மோடி அரசின் அடுத்தகட்ட இலக்கு நகர்ப்புற நக்சல்களும் – மக்களுமே!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டின் ‘வளர்ச்சித்’ திட்டங்களுக்கு  ‘நகர்ப்புற நக்சல்கள்’ தடையாக உள்ளனர் என்று மாநில சுற்றுச் சூழல் அமைச்சர்கள்  மாநாட்டில் திருவாய் மலர்ந்துள்ளார் பாசிச மோடி. மேலும் அரசின் ஏனைய திட்டங்களுக்குத் தடையாக இருப்பதால், அவர்களின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டும் என மாநில சுற்றுச் சூழல் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இத்துடன், குஜராத்…

சமூக ஊடகத்தைக் கட்டுப்படுத்த துடிக்கும் காவி கார்ப்பரேட் பாசிசம்

விவசாயிகளின் போராட்டம் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றில் ஒன்றிய அரசினை அம்பலப்படுத்தும் விதமாக பதிவிடுபவர்களின் டிவிட்டர் கணக்குகளை முடக்குமாறு ஒன்றிய பாஜக அரசு, டிவிட்டர் நிறுவனத்தை நிர்பந்திதுள்ளது, இதனை எதிர்த்து தற்போது அந்நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீதான தடை – ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பல் காவி பாசிச நடவடிக்கையின் அடுத்தக் கட்ட நகர்வு

பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா(PFI)  மற்றும் அதோடு சேர்ந்த எட்டு அமைப்புகளை ஊபா சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒருவாரமாக பி.எப்.ஐ,  எஸ்.டி.பி.ஐ அலுவலங்களில் நடந்து வரும் சோதனைகளை அடுத்து இத்தடையை அறித்துள்ளது. கடந்த வாரம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ )மற்றும்  அமலாக்கத் துறை பத்து…

மதவெறியைக் கிளப்புவதன் மூலம் தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் காவி கும்பல்

மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற வேண்டும் என்றால் பாஜக மக்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்துப் போராட வேண்டும். ஆனால் விலைவாசி உயர்வு தொடங்கி வேலைவாய்ப்பின்மை வரை எந்தப் பிரச்சனையை எடுத்தாலும் ஒன்றியத்தில் தாங்கள் காவி கார்ப்பரேட் நலனுக்காக கொண்டுவந்த திட்டங்கள்தான் அதற்கு மூல காரணமாக இருக்கிறது அவற்றைப் பேசினால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போவோம் என்று மக்கள் பிரச்சனைகள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.

தமிழகம் முழுவதும் கலவரத்தை தூண்டும் நோக்கில் நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தடை செய் – மக்கள் அதிகாரம்.

    வருகிற அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும், 51 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு செப்டம்பர் 28ம் தேதிக்குள் ஊர்வலம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்குமாறு தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நடந்த வழக்கு விசாரணையில் ஆர்.எஸ்.எஸ்.…

அன்று பாபர் மசூதி இன்று ஞானவாபி – வழிபாட்டுத் தலங்களை மதவெறியைத் தூண்டப் பயன்படுத்தும் காவி பாசிஸ்டுகள்

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிலைகளை தினமும் வழிபட அனுமதி கோரி தில்லியைச் சேர்ந்த 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மசூதிக்குள் ஆய்வு நடத்தி வீடியோ பதிவு செய்ய…