Category காவி கார்ப்பரேட் பாசிசம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பொற்காலத்தை அழித்தார்களா?

ஈராயிரம் ஆண்டுகள் நம்மை அழுத்தி வைத்திருந்த சாதிய ஒடுக்குமுறையை, பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பித்து, பெரும்பான்மையினருக்கு கல்வியை வழங்க மறுத்த சமூக அமைப்பை பொற்காலம் என்று நம்மை நம்பச் சொல்கிறது இந்தக் காவிக் கூட்டம். அந்த பொற்காலத்தை ஆங்கிலேயர்கள் அழித்துவிட்டார்கள் என பிரச்சாரம் செய்கிறது.

தேர்தல் ஆணையம்: பாஜக-வின் மற்றொரு நிர்வாகப் பிரிவு

பாஜக வை பொறுத்தவரை, கட்சியின் மருத்துவப் பிரிவு, வழக்குரைஞர் பிரிவு உள்ளதுபோல தேர்தல் ஆணையம் என்பது பாஜக கட்சியின் தேர்தல் நிர்வாகப் பிரிவு. அப்பிரிவின் தலைவர் பிரதமர் (மோடி-அமித்ஷா) அலுவலகத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். பாஜக தேர்தல்களில் ஜெயிப்பதற்குத் தேவையான சட்ட ரீதியான உதவிகளைச் செய்யக்கூடிய பாஜகவின் தேர்தல் பிரிவு தேர்தல் ஆணையம் என்பதை சமீபத்திய பல நிகழ்வுகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

வக்பு வாரிய நிலங்களை – அதன் சொத்துக்களை பறித்தெடுப்பதற்கான நகர்வே சட்டத்திருத்த மசோதா!

வக்பு வாரியத்தின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொத்துக்கள், எஸ்டேட்டுகளை கார்ப்பரேட்டுகளுக்கும், ரியல் எஸ்டேட் பேர்வழிகளுக்கும் தாரை வார்ப்பதற்கான நகர்வே இம்மசோதா.

பட்ஜெட்டில் உணவு மானியம் குறைப்பு: மக்களை பட்டினியில் தள்ளும் மோடி-அமித்ஷா கும்பல்

வீட்டு உபயோக செலவு கணக்கெடுப்பின் படி (NHES) இந்திய மக்கள் தொகையில் 54 % பேருக்கு மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கிறது. மீதமுள்ள 46% மக்களுக்கு மூன்றுவேளை உணவு கிடைப்பதில்லை. ஒருவேளை பட்டினியாக இருக்கிறார்கள். அதேவேளையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 84,000 கோடி ரூபாய் அளவில் உணவு மானியத்தை (29.7%) குறைத்துள்ளது மோடி அரசு. இதன் விளைவு பெரும்பான்மை மக்களுக்கு பட்டினியும் ஊட்டசத்துக் குறைபாடும் தான்.

சிறுபான்மையினரைப் படுகொலை செய்யும்
பசுக் குண்டர்களையும் – சங்கப்பரிவாரையும்
பாதுகாக்கும் சட்டீஸ்கர் போலிசு!

“53 கிலோமீட்டர் தூரத்திற்கு தங்களைத் துரத்திக் கொண்டு வந்தவர்களிடமிருந்து தப்பி ஓடிய மூவரும், குறிப்பாக இந்த பாலத்தில் வந்து வண்டியை நிறுத்திவிட்டு கீழே குதித்து செத்துப்போனது ஏன்? இறந்து போனவர்களது உடலில் உள்ள காயங்கள் கீழே குதித்ததால் ஏற்பட்டவையா அல்லது அதற்கு முன்னதாக ஏற்பட்டதா என்பதை எதை வைத்து முடிவு செய்தார்கள்? பாலத்தில் இருந்து விழுந்ததால் மரணம் என்றால் அவர்களை யாரேனும் வலுக்கட்டாயமாக தூக்கி வீசியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறதே? என பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து கேட்ட கேள்விக்கு போலீசாரிடம் பதில் எதுவும் இல்லை.”

ஜப்பான் வங்கியின் கட்டுப்பாட்டில் இந்திய ரயில்வே
பாசிச மோடியின் ஆட்சியில் துரிதமாகும் மறுகாலனியாக்கம்

“இந்திய ரயில்வேத் துறையில் எந்தப் பாதையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும், என்ன திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும், எதற்கு நிதி ஒதுக்க வேண்டும், அதனை எந்த நிறுவனத்திற்குக் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது ஒன்றிய அரசோ, ரயில்வேத் துறையின் நிர்வாகமோ அல்ல. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் என்று தற்போது அழைக்கப்படும், ஜப்பான் வங்கியின் மூலமாக ஜப்பான் ஏகாதிபத்தியம்தான் அதனைத் தீர்மானிக்கிறது, கட்டுப்படுத்துகிறது.”

குஜாபூர் கலவரம்: சரிந்த செல்வாக்கை ஈடுகட்ட இஸ்லாமியர்களைத் தாக்கும் காவி கும்பல்

குஜாபூர் கிராமம் விஷால்காட் கோட்டையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விஷால்காட் கோட்டையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை வலியுறுத்தி பேரணி என்று அறிவித்துவிட்டு கோட்டைக்கு பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸ்லீம் வீடுகளையும் மசூதியையும் சூறையாடியதிலிருந்தே பேரணிக்கு பின்னால் காவிகும்பலின் திட்டம் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும். 

பாரதிய குற்றவியல் சட்டம்:
காலனிய ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு
பெயரை மாற்றி ஏமாற்றும் காவி கும்பல்!

புதிய மூன்று சட்டங்களில் உள்ள சரத்துக்களில் 95% பழைய சட்டங்களே உள்ளன. அதன் தலைப்புகளும, உட்பிரிவுகளும், பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் பிரிட்டீஷ் காலனியாதிக்கவாதிகளின் பழைய குற்றவியல் சட்டங்களில் உள்ள பல்வேறு ஒடுக்குமுறைக் கூறுகளையும் சேர்த்துக் கொண்டு ‘பாரதிய’ சட்டம் என்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதுபோல் வாய்சவடால் அடித்து வருகிறது மோடி-அமித்ஷா கும்பல். 

அருந்ததி ராய் மீது பாயும் UAPA சட்டம் :
மோடியரசின் பாசிச ஒடுக்குமுறை 3.0

மோடி 3.0 ஆட்சியில் அவர் முன்புபோல நடந்துகொள்ள முடியாது. சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் மோடியின் பாசிச திட்டங்களை அமல்படுத்த விடமாட்டார்கள் என்று பலரும் ஜோசியம் சொல்லுகின்றனர். மாறாக தான் ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குள்ளேயே அருந்ததிராயின் மீதான கரையான் அரித்துப் போன ஒரு வழக்கை எடுத்து கொண்டு அவரை UAPA சட்டத்தில் கைது செய்ய ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் அறிவுத்துறையினரின் மீதான தங்களுடைய பாசிச நடவடிக்கைகள் மோடி 3.0 விலும் தொடரும் என மோடி-அமித்ஷா கும்பல் அறிவித்துள்ளது.

பாசிசத்தை வீழ்த்த :
தேர்தல் மாயையை புறக்கணிப்போம்!
பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!

  நடந்து முடிந்த 18-வது நாடாளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே, நாடும் நமதே என்கிற முழக்கத்தை முன்வைத்து, பிரச்சாரத்தை முன்னெடுத்து வென்றன, திமுகவும், இந்தியா கூட்டணியும். நாடு தமதாகவில்லையென்றாலும், தமிழகத்தில் 40-தையும் சிந்தாமல், சிதறாமல் அள்ளியெடுத்து தமதாக்கிக் கொண்டன. இதையே பாசிசத்திற்கெதிரான பெரும் வெற்றி எனக் கொண்டாடி வருகின்றன. ஆனால் இவை கூட அதிமுக, பாஜகவுடன்…