Category இந்தி திணிப்பு

இந்தி-சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! – திருச்சி – கருத்தரங்கம்

இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய தோழமை அமைப்புகள் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கத்தைக் கொண்டு சென்றன. இதை ஒட்டி காவி கார்ப்பரேட்…

கட்டாய அலுவல் மொழி – பாட்டாளிவர்க்கத்தின் நிலைப்பாடு என்ன?

1950-களில் தொடங்கி இன்றுவரை இந்தியாவின் அலுவல் மொழி குறித்த விவாதங்கள் அனைத்தும் இந்தியை அலுவல் மொழியாக வைத்துக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்தே நடந்து வருகின்றன. இந்தியை அலுவல் மொழியாக திணிப்பதை எதிர்ப்பவர்கள் கூட ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடர வேண்டும் எனக் கோருகின்றனர். ஆனால் இந்தியாவிற்கு கட்டாய அலுவல் மொழி ஒன்று தேவையா என்ற விவாதம் என்றைக்கும் நடைபெறவில்லை.

சமஸ்கிருதத்தை விரட்டிய மெக்காலே கல்வி!

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியினர், தங்களது காலனியாதிக்கத் தேவைகளுக்குச் சேவை செய்கின்ற வேலையாட்களை உருவாக்குவதற்காக அன்றைக்கு இந்தியாவில் நிலவிவந்த கல்வி முறையை மாற்றியமைத்தனர். காலனியாதிக்கவாதிகள் தங்களது நலனுகாக இந்திய கல்விச் சூழலை மாற்றியமைத்த போது, அது – சாதி அடிப்படையில் சமூகத்தின் பெரும்பான்மையோருக்குக் கல்வி மறுக்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி…

செத்த மொழியான சமஸ்கிருதத்தை ஊட்டி வளர்க்கும் மோடி அரசு!

“தமிழ் மொழிக்கு ஆதியும் அந்தமும் கிடையாது” இது கடந்த மே மாதம் மோடி சென்னை வந்த போது பேசியது. திருவள்ளுவருக்கு சிலை வைக்கிறேன்; தாய் மொழியில் பாடங்கள் இருக்க வேண்டும் போன்ற வாய்சவடால்களின் மூலம் தமிழ் மொழியின் மீது அக்கறை கொண்டவர்களைப் போல பாஜக தலைவர்கள் தங்களைக் காட்டிக்கொள்கின்றனர். குறிப்பாக இவர்கள் தமிழகம் வரும் போதெல்லாம்…

உயர்நீதிமன்ற மொழியாக தமிழை ஏற்க மறுக்கும் உச்ச நீதிமன்றமும் அதன் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஒன்றிய அரசும்

    சமஸ்கிருதம் தேவ பாஷை, அதிலிருந்து தோன்றிய இந்தி தேசிய பாஷை, ஆனால் தமிழ் உட்பட மற்ற இந்திய மொழிகள் அனைத்தும் சூத்திர, நீஷ பாஷைகள் என மொழியிலும் கூட ஏற்றத்தாழ்வு கற்பித்து ஒடுக்கியது பார்ப்பனியம். தமிழ் மொழியில் பேசினால் தீட்டாகிவிடும், மீண்டும் குளிக்க வேண்டும், என்ற காரணத்தால் மாலை குளியலுக்குப் பிறகு சமஸ்கிருதத்தில்…

சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக மாற்றிடவே இந்தித் திணிப்பு

தங்களது இந்துராஷ்டிரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காவி பாசிஸ்டுகள் ஒரு வரையறை வைத்திருக்கின்றனர். சாதி/வர்ணப் படிநிலையைக் கொண்ட சனாதனத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறை, வேதங்களின்  அடிப்படையில் நீதி பரிபாலனை, புராணங்களையும் இதிகாசங்களையும் உண்மையெனக் கற்பிக்கும் கல்விமுறை. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய பார்ப்பனியக் கலாச்சாரமே இந்தியா முழுமைக்குமான ஒரே கலாச்சாரம். இதுதான் காவிக் கும்பல் நிறுவத்துடிக்கும்…

ஜனவரி 25, 2023 -ல் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் மாலை 4 மணியளவில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் – நிகழ்ச்சி நிரல்

இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! இந்தி-இந்து-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம். ஜனவரி 25, 2023 -ல் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் மாலை 4 மணியளவில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சி நிரல்: தலைமை: தோழர். சுந்தரராசு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி…

இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! – ‘சமஸ்கிருதம்’ ஒரு செயற்கைக் கலவை

ஆரியர்களின் மொழியாகிய சமஸ்கிருதம் கங்கை நாட்டில் கி.மு.3 ஆம் நூற்றாண்டில் உருவாகி கி.பி.5 ஆம் நூற்றாண்டில் இலக்கிய வடிவம் பெற்ற ஒரு செயற்கைக் கலவை மொழி. சமஸ்கிருதம் என்னும் சொல் திருந்திய வழக்கு என்னும் பொருளுடையது; இதன் எதிர்வழக்கு பிராகிருதம், அதாவது திருந்தா மொழி, சமஸ்கிருதத்தில் புத்தர், அசோகர் கால இலக்கியம் இல்லை. அசோகர் காலத்தில்…

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் – கருத்தரங்கம்

இந்தி-சமஸ்கிருதத் திணிப்பைத் தகர்த்தெறிவோம்! இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!   அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! கல்வியாளர்களே! ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவானது, ஒன்றிய கல்வி நிலையங்களில் இந்தியைக் கட்டாயப் பயிற்று மொழியாகவும், மாநிலங்களுக்கிடையேயான இணைப்பு மொழியாகவும் திணிக்கும் நோக்கிலும்; ஒன்றிய அரசின்…

இந்தித் திணிப்பு: எல்லா தேசிய இனங்களையும், மொழிகளையும் சமமாகப் பாவிக்கின்ற புதிய ஜனநாயகக் குடியரசை அமைப்பதே ஒரே தீர்வு!

இந்தியை எதிர்க்கும் திராவிடக் கட்சிகளோ, பிற இயக்கங்களோ இத்தகைய தீர்வுகளை முன்வைப்பதில்லை. பொதுவாக எல்லா மொழிகளையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்று கூறுகிறார்களே ஒழிய ஒரு தீர்வாக அதை வைப்பதில்லை. அவர்கள் முன்வைப்பதெல்லாம் ஆங்கிலத்தை இணைப்பு, அலுவல் மொழியாக்க வேண்டும் என்பதையே, இது தான் இருமொழிக் கொள்கை இது அடிப்படையிலேயே தவறானது ஆகும்.