Category ஆளுநர்

சட்டத்திற்குக் கட்டுப்படாத ஆளுநர்.
நீதிமன்றம் அல்ல மக்கள் மன்றமே சரியான தீர்ப்பை தரமுடியும்.

உச்ச நீதிமன்றத்தால் ஆளுநருக்கு எதிராக எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த விசயத்தில் கருத்துத் தெரிவிக்க மட்டுமே முடியும். அரசியல் சாசனத்தின் 361வது பிரிவு நீதிமன்ற உத்தரவுகளில் இருந்து மாநில ஆளுநர்களைப் பாதுகாக்கிறது. அந்தப் பிரிவின் படி ஆளுநரோ, ஜனாதிபதியோ தங்களது நடவடிக்கைகள் குறித்த எந்த நீதிமன்றத் தீர்ப்பிற்கும் கட்டுப்படத் தேவையில்லை.

மக்களால் புறந்தள்ளப்பட வேண்டியவர்கள் யார்?

மார்க்சியம், உலக பாட்டாளிவர்க்கத்தின் விடுதலைக்கான தத்துவம், மனிதனை மனிதன் சுரண்டும் சமூக அமைப்பைச் சிதைக்க வேண்டும் எனக் கூறும் தத்துவம். சாதியின் பெயரால் சக மனிதனை அடிமைக்கும் கீழாக அழுத்திவைக்கும் வர்ணாசிரம தர்மம்தான் பாரதிய தர்மம் என்றால் அதனை மார்க்சியம் சிதைக்கவே செய்யும்.

மாநில உரிமைகள் பறிப்பு: காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் தீர்வில்லை

‘சுதந்திர’ இந்தியாவின் அரசியல் சட்டம், இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் பல்வேறு கலாச்சாரங்களும், பழக்க வழக்கங்களும் இருந்தாலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை தேசிய மொழியாகவும், பார்ப்பனர்களின் அடையாளங்களை இந்தியாவின் அடையாளமாகவும், ஆளும் வர்க்கத்தினரால் இன்றுவரை முன்னிறுத்தப்பட்டு வருகிறது. தேசிய இனங்களின் உரிமையைப் பறிக்கின்ற இந்த இந்(து)திய தேசிய கட்டமைப்பு இயல்பாகவே காவி-கார்ப்பரேட் பாசிசம் வளர்வதற்கு ஏதுவாக உள்ளது.

ஆன்லைன் ரம்மியும்! R.N.ரவியும்! – தோழர் கோபிநாத்

  ஆன்லைன் ரம்மி தடை செய்வதில் ஆளும்வர்க்கம் தயக்கம் காட்டுவது ஏன் என்பது குறித்து தோழர் கோபிநாத்தின் உரை