செங்கனல்

செங்கனல்

ஆனந்த் அம்பானியின் திருமணம் – மக்களின் வறுமையை ருசிக்கும் வக்கிரமே!

இந்த வக்கிரத்திற்கு செலவுச் செய்யப்பட்ட ரூ.5000 கோடியில், சுமார் 250,000 குடும்பங்கள் மாதம் முழுவதும் வாழ முடியும். அதாவது, 250,000 குடும்பங்கள் ஒரு மாத வாழ்வை, ஒரு நாள் கூத்துக்காக வாரி இறைக்கப்பட்டதை வக்கிரம் என்று சாடாமல், எளிமையான நிகழ்வாக, பெருமைப்படத்தக்கதாக வர்ணிக்கும் ஊடகங்களின் செயல் வக்கிரத்தின் உச்சம்

மின்துறை தனியார்மயமாவதைத் தடுக்காமல்,
கட்டண உயர்வைத் தடுக்க முடியாது

“மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்படும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை, ஒன்றிய அரசு மேலிருந்து மாநிங்களின் மீது திணிக்கும் நடவடிக்கையாக மட்டுமே திமுக அரசு காட்டுகிறது. அதன் பின்னால் ஒளிந்துள்ள கார்ப்பரேட் நலனை திமுகவும் சரி அதனை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளும் சரி மக்கள் முன்னாள் கொண்டு வருவதேயில்லை.”

எதேச்சதிகாரத்திற்கு எதிராக போராடும்
வங்காளதேச மாணவர்கள்!

வங்காளதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாணவர்களின் எழுச்சியை வெறும் இட ஒதுக்கீட்டிற்கானப் போராட்டம் என்று சுருக்கி பார்க்கக் கூடாது, அங்கு பல ஆண்டுகளாக நிலவி வரும் சமூகப் பொருளாதார நெருக்கடிகளுக்கும், அரசின் ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான வெளிப்பாடு என்கிறார் டாக்கா பல்கலைக்கழகத்தின் ஒரு பேராசிரியர். மேலும் பிரதமர் சேக் ஹசீனா ஆட்சியின் அளவில்லாத ஊழல், விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் என்கின்றன பத்திரிக்கைகள்.

மறுகாலனியாக்கத்தை மறுதலிக்காமல், மாநில மக்களின் வேலை வாய்ப்பு என்பது வெற்றுக் கனவே!

தொழிற்சாலைகள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களில், சொந்த மாநில மக்களுக்கு, 100% இட ஒதுக்கீடு வழங்குவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்கிற மசோதாவை, கர்நாடகப் பேரவையில் கொண்டு வருவதற்கு முன்பாக, கடந்த 15-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப் பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இம் மசோதாவானது, ‘பத்தாம் வகுப்புத் தேர்வில் மொழிப் பாடமாக கன்னடம் படித்தவர்கள், கன்னடம்…

சிறுபான்மையினரைப் படுகொலை செய்யும்
பசுக் குண்டர்களையும் – சங்கப்பரிவாரையும்
பாதுகாக்கும் சட்டீஸ்கர் போலிசு!

“53 கிலோமீட்டர் தூரத்திற்கு தங்களைத் துரத்திக் கொண்டு வந்தவர்களிடமிருந்து தப்பி ஓடிய மூவரும், குறிப்பாக இந்த பாலத்தில் வந்து வண்டியை நிறுத்திவிட்டு கீழே குதித்து செத்துப்போனது ஏன்? இறந்து போனவர்களது உடலில் உள்ள காயங்கள் கீழே குதித்ததால் ஏற்பட்டவையா அல்லது அதற்கு முன்னதாக ஏற்பட்டதா என்பதை எதை வைத்து முடிவு செய்தார்கள்? பாலத்தில் இருந்து விழுந்ததால் மரணம் என்றால் அவர்களை யாரேனும் வலுக்கட்டாயமாக தூக்கி வீசியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறதே? என பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து கேட்ட கேள்விக்கு போலீசாரிடம் பதில் எதுவும் இல்லை.”

ஜப்பான் வங்கியின் கட்டுப்பாட்டில் இந்திய ரயில்வே
பாசிச மோடியின் ஆட்சியில் துரிதமாகும் மறுகாலனியாக்கம்

“இந்திய ரயில்வேத் துறையில் எந்தப் பாதையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும், என்ன திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும், எதற்கு நிதி ஒதுக்க வேண்டும், அதனை எந்த நிறுவனத்திற்குக் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது ஒன்றிய அரசோ, ரயில்வேத் துறையின் நிர்வாகமோ அல்ல. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் என்று தற்போது அழைக்கப்படும், ஜப்பான் வங்கியின் மூலமாக ஜப்பான் ஏகாதிபத்தியம்தான் அதனைத் தீர்மானிக்கிறது, கட்டுப்படுத்துகிறது.”

குஜாபூர் கலவரம்: சரிந்த செல்வாக்கை ஈடுகட்ட இஸ்லாமியர்களைத் தாக்கும் காவி கும்பல்

குஜாபூர் கிராமம் விஷால்காட் கோட்டையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விஷால்காட் கோட்டையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை வலியுறுத்தி பேரணி என்று அறிவித்துவிட்டு கோட்டைக்கு பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸ்லீம் வீடுகளையும் மசூதியையும் சூறையாடியதிலிருந்தே பேரணிக்கு பின்னால் காவிகும்பலின் திட்டம் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும். 

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? – பாகம் 1

வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும் அன்பார்ந்த வாசகர்களே! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தின் வரலாற்றில் முதன் முறையாக தி்ருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. வென்றுள்ளது; அதுமட்டுமல்ல, அம்மாநிலத்தில் அதன் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. கேரளத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 15.64% வாக்குகளைப் பெற்றிருந்த பா.ஜ.க., மோடி எதிர்ப்பலை வீசியதாகப் பீற்றிக் கொள்ளப்பட்ட…

வர்க்க உணர்வை சீரழிக்கும் – சிதைக்கும்
மது போதையும் – மத போதையும்
ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றே!

உத்தரப்பிரதேச ஹத்ராஸ் மாவட்டத்தின் அருகில் உள்ள புல்ராய் முகல்குடி கிராமத்தில் போலே பாபா என்கிற இந்து ஆன்மீக சாமியார் நடத்திய நிகழ்வில் 120-க்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் சிக்கி சாவைத் தழுவியுள்ளனர் என்ற கொடூரத்தை எவரும் அறியாமல் இருக்க முடியாது. இது போன்ற சாவுகள், கொலைகள் நீக்கமற நடந்து வருவதோடு, இது வரை 2000-க்கும் மேற்பட்டவர்களின் மரண…