செங்கனல்

செங்கனல்

பசுக்களை பாதுகாக்க கோசாலை மையங்கள் திறப்பு! குழந்தை தொழிலாளர் மீட்பு மையங்கள் மூடல்!

நாடு அதிகாரம் மாற்றமடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது; இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 நாளை அமிருத பெருவிழாவாக  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டது மோடிக்கும்பல். ஆனால், இந்தியா அதிகாரம் மாற்றமடைந்த இந்த 75 ஆண்டுகளில் பல்வேறு தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளது, இந்திய தரகு முதலாளிகள் உலக பணக்கார பட்டியலில்…

சமூக ஊடகத்தைக் கட்டுப்படுத்த துடிக்கும் காவி கார்ப்பரேட் பாசிசம்

விவசாயிகளின் போராட்டம் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றில் ஒன்றிய அரசினை அம்பலப்படுத்தும் விதமாக பதிவிடுபவர்களின் டிவிட்டர் கணக்குகளை முடக்குமாறு ஒன்றிய பாஜக அரசு, டிவிட்டர் நிறுவனத்தை நிர்பந்திதுள்ளது, இதனை எதிர்த்து தற்போது அந்நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

பரந்தூர் விமான நிலையம் – தமிழக மக்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?

“இந்த விமான நிலையம் பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்வாதார பிரச்சினை, நிலப்பிரச்சினை, ஏரி பிரச்சினை என்பதையும் தாண்டி இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை சுரண்டுவதற்காகவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்கு உழைக்கும் மக்கள் பலியிடப்படுவதை தீவிரப்படுத்தவுமே, கார்ப்பரேட்களின் கைப்பாவையான ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து கொண்டுவருகின்றன என்பதை உணர வேண்டியுள்ளது.”.

மின் கட்டண உயர்வால் விசைத்தறிக் கூடங்கள் இன்று நிசப்தம் ஆகி வருகின்றது! மனிதர்களின் மானங்காக்கும் ஆடைத் தொழில் இன்று கிழிந்து தொங்குகிறது!

“விசைத்தறித் தொழில் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் நலுனுக்காக ஒட்டுக்கட்சிகளால் பலி கொடுக்கப்படுகிறது. நெய்த துணிக்கான கூலியை முதலாளிகளே நிர்ணயிக்கிற அவலநிலை இங்கும் தொடர்கிறது. இதுவரையில் ஆட்சியாளர்களை நம்பி பயணித்தது போதும்.”

மருந்து, மாத்திரைகள் தனியார்மயம்: இதை வாங்க பணம் இல்லையேல் மக்கள் பிணம்:

”தனியார்மயம் என்ற பெயரில் உயிர்காக்கும் மருத்துவத்தை, இலாபத்தை மட்டுமே குறியாகக் (இலக்காகக்) கொண்டு செயல்படும், தனியார் முதலாளிகளிடம் தாரை வார்த்துவிட்டு, மனித உயிரைக் காக்கும் மருந்துகளின் பரிந்துரைகளுக்கு மட்டும் இலஞ்சம் தருவது மாபெரும் தவறு என்று குற்றம் சுமத்துவதும், வழக்குத் தொடர்வதும் பித்தலாட்டம் இல்லையா!”

இஸ்லாமிய அமைப்புகள் மீது நாடு முழுவதும் தொடுக்கப்படும் அடக்குமுறை – மக்கள் அதிகாரம் கண்டனம்

    ஒன்றிய பாஜக அரசின் என்ஐஏ (தேசிய பாதுகாப்பு முகமை), இஸ்லாமிய அமைப்புகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளின் அலுவலகங்கள் மீது ரெய்டு நடத்திக்கொண்டும் மற்றும் அதன் தலைவர்களை கைது செய்துகொண்டும் உள்ளது. இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கின்றோம். (22-09-2022) அன்று நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ, பி…

அன்று பாபர் மசூதி இன்று ஞானவாபி – வழிபாட்டுத் தலங்களை மதவெறியைத் தூண்டப் பயன்படுத்தும் காவி பாசிஸ்டுகள்

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிலைகளை தினமும் வழிபட அனுமதி கோரி தில்லியைச் சேர்ந்த 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மசூதிக்குள் ஆய்வு நடத்தி வீடியோ பதிவு செய்ய…

வேதாந்தா-பாக்ஸ்கான் சிப் உற்பத்தி ஆலை: மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கும் அனில் அகர்வால்

1.54 இலட்சம் கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ள வேதாந்த-பாஸ்கான் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் கோடிக்கு,அதாவது மூன்றில் ஒருபங்கிற்கு, சலுகைகளை வழங்கி முதலாளிகளின் தாசர்களாகவே காட்டிக்கொள்கின்றன ஒன்றிய-மாநில அரசுகள்.

நட்சத்திரம் நகர்கிறது : அடையாள அரசியல் எனும் புளித்த மாவில் சுட்ட ‘புரட்சிகர’ தோசை (பாகம் 2)

இந்த சினிமா மட்டுமல்ல, பொதுவில் பின்நவீனத்துவம், அடையாள அரசியல் பேசுபவர்கள் முன்வைக்கும் நச்சுக் கருத்துக்கள் கம்யூனிஸ்டு கட்சிகளின் அணிகளை அரித்துத் திண்கிறன. இரண்டு சினிமாவை எடுத்துவிட்டு, நாலு புத்தகம் போட்டுவிட்டு ‘கம்யூனிஸ்டுகள் என்ன கிழித்திவிட்டார்கள்’ என்று இவர்கள் அகங்காரமாகக் கேட்கிறார்கள்.