செங்கனல்

செங்கனல்

தமிழக பா.ஜ.க.வின் பிழைப்புவாத பொறுக்கி அரசியல்

தேசத்தின் முன்னேற்றத்திற்காக மோடி வளர்த்த தியாகத் தீயில் வார்த்தெடுக்கப்பட்ட கொள்கைக் குன்றுகளான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்கள் கடந்த சில நாட்களாக நடத்திவரும் குழாயடிச் சண்டையில் அவர்களது தேசிய அரசியல் எனும் முகமூடி கழன்று பிழைப்புவாத அரசியல் பல்லிளிக்கிறது.

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ) – பத்திரிக்கை செய்தி

தேதி: 23.11.2022 பத்திரிக்கை செய்தி காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரத்தின் மைய முழக்கம் பற்றி அன்பார்ந்த தோழர்களே, உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ), தமிழ்நாடு எனும் எமது அமைப்பானது மக்கள்திரள் வழியில் பெருவாரியான மக்களை திரட்டி தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றியிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 1990களில்…

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்: கொலிஜியத்தை கலைக்க சதி செய்யும் காவி பாசிசம்

ஒரே இரவில் பணமதிப்பிழப்பை ஏற்படுத்தி வாழ்வுரிமையைப் பறித்த, ஆபத்துகாலத் தேவைக்கான சிறுசேமிப்பையும் சிறுவாடு சேகரிப்பையும் பிடுங்கிய பாசிச மோடி அரசால் என்றாவது ஒருநாள் ஒரு இரவில் முதலாளித்துவ ஜனநாயகம் பிடுங்கி எறியப்பட்டு முதலாளித்துவப் பாசிசம் நிறுவப்படலாம்

ஹோமியோபதி மாணவர்கள் போராட்டம்! மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி!

மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி! (22-11-2022). ஹோமியோபதி மருத்துவம் என்பது பக்கவிளைவுகள் ஏதும் இன்றி மிக மிக குறைந்த செலவில் எல்லோரும் பயன்பெறும் மருத்துவம் ஆகும். அது மட்டுமின்றி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி மக்களை இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நோய்வராமல் முன்னரே தடுக்கும் சிறந்த மருத்துவ முறை ஆகும்.…

முதலாளிகள் நடத்தும் பருவநிலை மாநாடு – ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை!

தன்னுடைய லாபவெறியினால் இயற்கையை அழிக்கும் முதலாளித்துவத்தால் அதன் சித்தாந்ததால் உலகில் மனித குலத்தையும், இயற்கையையும், பல் உயிரினச் சூழலையும் ஒரு போதும் காப்பாற்ற முடியாது. முப்பது ஆண்டுகள் என்ன? முந்நூறு வருடங்கள் பருவநிலை மாநாடு நடத்தினாலும், லாபவெறிக்காக இயற்க்கையை அழிக்கும் முதலாளித்து கார்பரேட் நிறுவனங்களால் இயற்கை பேரழிவிலிருந்து இவ்வுலகைக் காப்பாற்ற முடியாது. இயற்கையும், மனித குலமும் பிழைத்திருக்க வேண்டுமாயின் முதலாளித்துவம் ஒழிக்கப்பட வேண்டும்.

கட்டாய மதமாற்றம்! நீதிபதிகளின் கருத்து!! காவிகள் மூட்டிய தீயில் ஊற்றிய எண்ணெய்!!!

"கட்டாய மதமாற்றம் உண்மையிலேயே நடந்துள்ளது என்பதைக் கண்டறிய" என்று கருத்துக் கூறிய நீதிபதிகளே, கட்டாய மாதமாற்றம் நடந்துள்ளதா என்பதை விரிவாக விசாரித்து முடிவுக்கு வராமலே அவர்கள் தங்கள் சொந்த அபிப்பிராயத்தை, விருப்பத்தைக் கருத்தாக வெளிப்படுத்துவது எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும் எனபது நீதிபதிகளுக்கே வெளிச்சம்.

கால்பந்து வீராங்கணை பிரியா மரணம், யார் குற்றவாளி?

பிரியா போன்ற உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்த விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு, ஆக்கமும் ஊக்கமும்; உதவியும் அளித்து சர்வதேச தரத்திற்கு நிகராக விளையாட்டு வீரர்களின் ஆற்றலை வளர்த்தெடுக்க நேர்மையான அமைப்புகள் ஏன்  இங்கு இல்லை?

மோடி உருவாக்கிய குஜராத் யாருக்கானது?

அந்நிய முதலீடுகளைப் பெறுவதும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகளை வாரிக் கொடுப்பதும் முன்னேற்றமா? அடித்தட்டு உழைக்கும் மக்களின் வாழ்நிலை மிகவும் பின்தங்கி கிடக்கும் குஜராத்தே “மோடி உருவாக்கிய குஜராத்”

குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காவியில் புரளும் கேஜ்ரிவால்

காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கும் அதன் ஒடுக்குமுறை, சுரண்டலுக்கும் ஏற்ற வகையில் ஆட்சி செய்ப தங்களில் யார் சிறந்த பிரதிநிதிகள் என்று போட்டியிடுகிறார்கள் ஓட்டுக்கட்சிகள்

குஜராத் மோர்பி பாலம் அறுந்தது விபத்து அல்ல! படுகொலை!

குஜராத் மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டன் ஆட்சி காலத்தில் ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த சர்வாக்ஜி தாகூர் என்பவரால் கட்டப்பட்ட ஜீல்டோபூல் என்ற குலுங்கும் பாலமானது இன்று மோர்பி பாலம் என அழைக்கப்படுகிறது. இன்று இதன் வயது 143. இந்த குலுங்கும் பாலத்தைத் திறந்து வைத்தவர் அன்றைய பிரிட்டன் ஆளுநரான…