செங்கனல்

செங்கனல்

ஜனவரி 25, 2023 -ல் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் மாலை 4 மணியளவில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் – நிகழ்ச்சி நிரல்

இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! இந்தி-இந்து-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம். ஜனவரி 25, 2023 -ல் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் மாலை 4 மணியளவில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சி நிரல்: தலைமை: தோழர். சுந்தரராசு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி…

மாநில உரிமைகள் பறிப்பு: காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் தீர்வில்லை

‘சுதந்திர’ இந்தியாவின் அரசியல் சட்டம், இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் பல்வேறு கலாச்சாரங்களும், பழக்க வழக்கங்களும் இருந்தாலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை தேசிய மொழியாகவும், பார்ப்பனர்களின் அடையாளங்களை இந்தியாவின் அடையாளமாகவும், ஆளும் வர்க்கத்தினரால் இன்றுவரை முன்னிறுத்தப்பட்டு வருகிறது. தேசிய இனங்களின் உரிமையைப் பறிக்கின்ற இந்த இந்(து)திய தேசிய கட்டமைப்பு இயல்பாகவே காவி-கார்ப்பரேட் பாசிசம் வளர்வதற்கு ஏதுவாக உள்ளது.

இருமல் மருந்திற்கு பலியாகும் காம்பியா, உஸ்பெகிஸ்தான் குழந்தைகள்: துணை நிற்கும் இந்திய அரசு

200 ஆண்டுகளுக்கு முன்பு முதலாளித்துவத்தின் ஆன்மா இலாபத்தில் இயங்குகிறது என்றார் காரல் மார்க்ஸ். அது இன்றளவும் மெய்பிக்கபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே குழந்தைகளின் உயிரைக் குடித்து லாபம் பார்க்கும் மருந்து நிறுவனத்தின் செயல்பாடுகளும், அதற்கு துணை நிற்கும் அரசின் செயல்பாடுகளும் காட்டுகின்றன.

மரபினி பயிர்களுக்கு எதிராக உலக விஞ்ஞானிகளின் போர்க்குரல்

முதலாளித்துவமோ, தனக்கு லாபம் ஈட்டித்தராத இயற்கை, சுற்றுச்சூழல், விவசாயம் பற்றிய அறிவியலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. முதலாளித்துவத்தின்  ஒரே குறிக்கோள் சந்தையும், லாபமும்தான்!

இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! – ‘சமஸ்கிருதம்’ ஒரு செயற்கைக் கலவை

ஆரியர்களின் மொழியாகிய சமஸ்கிருதம் கங்கை நாட்டில் கி.மு.3 ஆம் நூற்றாண்டில் உருவாகி கி.பி.5 ஆம் நூற்றாண்டில் இலக்கிய வடிவம் பெற்ற ஒரு செயற்கைக் கலவை மொழி. சமஸ்கிருதம் என்னும் சொல் திருந்திய வழக்கு என்னும் பொருளுடையது; இதன் எதிர்வழக்கு பிராகிருதம், அதாவது திருந்தா மொழி, சமஸ்கிருதத்தில் புத்தர், அசோகர் கால இலக்கியம் இல்லை. அசோகர் காலத்தில்…

நாடு முழுவதும் அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான காவிகளின் அட்டூழியங்கள்!

ஒரு முஸ்லீம் ஆண் தனது இந்து காதலியை வெட்டிக் கொன்று விட்டான் என்ற கோணத்தில் சாரதா வால்கர் கொலையை செய்தி-சமூக ஊடகங்களில் காவி கும்பல் பரப்பியது. இதன் பிறகுதான் மதம் மற்றும் சாதிகளுக்கு இடையேயான திருமணங்களைக் கண்காணிக்க மகாராஷ்டரா அரசு ஒரு குழுவை அமைத்தது. எனவே, இனி மாற்று மதம், மாற்று சாதிகளுக்கு இடையே நடக்கும் திருமணங்களில் காவிக் கும்பல்களின் பஞ்சாயத்துக்களும், கலவரங்களும் நடைபெறுவது திண்ணம்.

மக்கள் போராட்டங்களை ஒடுக்க வரும் கொலைகார ரோபோக்கள்.

கொலைகார டிரோன்களை போர்க்களத்தில் மட்டும் பயன்படுத்தி வந்த அமெரிக்க அரசு தற்போது அதனை தனது சொந்த நாட்டு மக்கள் மீதும் பயன்படுத்த அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

பசுக்களை காப்பாற்றுவதாக கூறி விவசாயிகளைப் பலியிடும் உ.பி. அரசு

உத்தரபிரதேசத்தில் 2017ல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற அம்மாநிலத்தின் மாடுகளும் ஒரு முக்கிய காரணம். அவ்வாண்டின் தேர்தல் அறிக்கையில்  பசுக்களைப் பாதுகாப்போம், பசுவின் புனிதத்தை பாதுகாப்பதற்கு கோசாலைகளை அமைப்போம் என்று பா.ஜ.க  விவசாயிகளிடம் வாக்குறுதி கொடுத்தது. ஆட்சிக்கு வந்த பின்பு பசு வதை தடை உத்தரவு, மாட்டிறைச்சிக்கு தடை என  பாஜக  சட்டம் இயற்றியது.…

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் – கருத்தரங்கம்

இந்தி-சமஸ்கிருதத் திணிப்பைத் தகர்த்தெறிவோம்! இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!   அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! கல்வியாளர்களே! ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவானது, ஒன்றிய கல்வி நிலையங்களில் இந்தியைக் கட்டாயப் பயிற்று மொழியாகவும், மாநிலங்களுக்கிடையேயான இணைப்பு மொழியாகவும் திணிக்கும் நோக்கிலும்; ஒன்றிய அரசின்…

தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரையே நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம்

திமுக அரசு பொது வெளியில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டாலும் ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகளில் பள்ளி மேலாண்மைக் குழு, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், வானவில் மன்றம், நம்ம ஸ்கூல் பவுன்டேசன் என வெவ்வேறு பெயர்களில் தேசிய கல்விக் கொள்கையின் பல பரிந்துரைகளை அமல்படுத்தி வருகிறது