செங்கனல்

செங்கனல்

பிபிசி ஆவணப்படமும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையும்
அம்பலமாகுது பாசிச கும்பல்!
அடித்து வீழ்த்து!

மார்ச் 19 அரங்கக் கூட்டம் – சென்னை  அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! கடந்த ஜனவரி மாதம் குஜராத் இனப்படுகொலையை மீண்டும் அம்பலப்படுத்தும் விதமாக பிபிசி ஆவணப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து அதானியின் பங்குச் சந்தை மோசடியை அம்பலப்படுத்தி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. இவைகளால் அம்பலாமவதைப் பொறுக்கமுடியாத காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பல் பிபிசி படத்துக்குத்…

போக்குவரத்து துறையை, கார்ப்பரேட்டு கொள்ளைக்கு திறந்துவிடும் திமுக அரசு

மும்பையில் சாதாரண பேருந்துகளை இயக்க தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.55 செலவாகிறது. ஆனால் மின்சார பேருந்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.125 தனியாருக்கு வழங்கபடுகிறது. இவ்வாறு அதிக தொகையை கொடுப்பதால் ஏற்படும் சுமை மக்கள் தலையில் ஏற்றப்படும். பேருந்துகளை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் இந்த ஒப்பந்தத்தின் விளைவாக மக்கள் பேருந்துகளில் பயணிக்கவே முடியாத சூழல் ஏற்படும். முதியவர்கள், மாணவர்கள், ஊனமுற்றோருக்கு கிடைக்கும் இலவச பயணம் உள்ளிட்ட சலுகைகள் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

அதானியைக் காப்பாற்றும் தேசிய பங்குச் சந்தை(NSE)

தேசிய பங்குச் சந்தையோ ஒருபடி மேலே சென்று அதானியின் பங்குச் சந்தை இழப்புகளை சரிகட்டுவதற்கான தற்காலிகத் தீர்வை அதானி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. கடந்த மாதம் தேசிய பங்குச் சந்தை (NSE) வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமத்தின்  ஐந்து நிறுவனங்களை தேசியப் பங்குச் சந்தையின் 14 குறியீடுகளில் பட்டியலிட அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.

உலக உழைக்கும் பெண்களின் போராட்ட நாளான மார்ச் 8-ஐ உயர்த்திப் பிடிப்போம்!

சமத்துவம், சுதந்திரம், வாக்குரிமை, 8 மணிநேர வேலை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, ஆணும் பெண்ணும் சமம், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், ஒரே வேலை நேரம் போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடிய நாளே மார்ச்-8. 1917 மார்ச் 8-இல் தான் ரசிய பெண்-தொழிலாளர்கள் அன்றைய ஆட்சியர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராகப் புரட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து இடைவிடாமல் பாட்டாளி வர்க்கப்…

பிபிசி ஆவணப்படமும்
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையும்
அம்பலமாகுது பாசிச கும்பல்! அடித்து வீழ்த்து!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நாஜிச ஹிட்லரின் யூத இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத கொடூரம்தான் பாசிச மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பல் 2002-இல் குஜராத்தில் நடத்திய இனப்படுகொலை. 2000 இசுலாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 2 இலட்சம் பேர் உடைமையிழந்து, சொந்தபந்தங்களை இழந்து சொந்த நாட்டிலேயே அனாதைகளாயினர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துக்களெல்லாம் குறிவைத்துச் சூறையாடப்பட்டன. மிருகவெறி கொண்டு இசுலாமியப்…

ஒருவேளை பாசிஸ்டுகள் தேர்தலில் தோல்வியுற்றால்?

தேர்தலில் பங்கேற்கும் ஓட்டுக் கட்சிகள் மட்டுமன்றி, புரட்சிகர இயக்கங்களில் சிலவும் கூட தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பதன் மூலம் பாசிசத்தின் வெற்றியைத் தடுத்து நிறுத்தி வீழ்த்திவிடலாம் என கூறுகின்றன. பாசிசத்திற்கு எதிராக மக்களைத் திரட்டுவது என்றால் திமுகவிற்கு ஆதரவாக தங்களது நடைமுறையை அமைத்துக் கொள்வது என்று கூறுகிறார்கள். தேர்தல் பங்களிப்பிலும் கூட ஒரு மாற்றை முன்வைக்க வேண்டும் என்ற பொது சூத்திரத்தை வைத்துக் கொண்டு தங்களது திமுக ஆதரவை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர். பாசிசத்திற்கு எதிராக பலமான தேர்தல் கூட்டணி அமைப்பதன் மூலம் மூச்சுவிடும் அவகாசம் (Breathing Space) கிடைக்கும், என்ற ‘புகழ்பெற்ற’ வாதமும் முன்வைக்கப்படுகிறது. 

அதானி மோசடி : தொடர்ந்து இழப்பை சந்திக்கும் எல்.ஐ.சி.

அதானி மோசடி அம்பலமானதால் அவரது நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துவரும் நிலையில், கீழே விழும் போது அதானி தனியாக விழாமல் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. போன்ற பொதுத்துறை நிறுவனங்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டு விழுகிறார்.

JNU மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம்

  டெல்லி JNU பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்! காரல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர், பூலே  படங்கள் உடைப்பு – காரல் மார்க்ஸை அவதூறாக விமர்சித்த தமிழக ஆளுநர் ரவியின் திமிர்த்தனத்திற்கு முடிவு கட்டுவோம், என்ற முழுக்கத்தின் கீழ் 27.02.2023 அன்று மாலை 4 மணிக்கு, தர்மபுரி BSNL அலுவலகம் அருகில், மக்கள் அதிகாரம் சார்பாக…

மக்களால் புறந்தள்ளப்பட வேண்டியவர்கள் யார்?

மார்க்சியம், உலக பாட்டாளிவர்க்கத்தின் விடுதலைக்கான தத்துவம், மனிதனை மனிதன் சுரண்டும் சமூக அமைப்பைச் சிதைக்க வேண்டும் எனக் கூறும் தத்துவம். சாதியின் பெயரால் சக மனிதனை அடிமைக்கும் கீழாக அழுத்திவைக்கும் வர்ணாசிரம தர்மம்தான் பாரதிய தர்மம் என்றால் அதனை மார்க்சியம் சிதைக்கவே செய்யும்.