செங்கனல்

செங்கனல்

தொழிலாளர் விரோதச் சட்டங்களை இடியாய் இறக்கும்
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மே தினத்தில் சூளுரைப்போம்!

மே 1  உலகத் தொழிலாளர் தினம் பேரணி – ஆர்ப்பாட்டம் – ஓசூர்      அன்பார்ந்த தொழிலாளர்களே! உலக முதலாளித்துவ-ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் 1970களில் ஏற்பட்ட தேக்க-வீக்க நெருக்கடியிலிருந்து மீளுவதற்காக தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டன. அந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளும் இன்று மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள், கட்டமைப்பு நெருக்கடிக்குள் உலக முதலாளித்துவ-ஏகாதிபத்தியக்…

தொழிற்சாலைகள் சட்ட திருத்தம்:
பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு திமுக செய்யும் துரோகம்!

கடந்த மாதம் கர்நாடக மாநில அரசும் தொழிலாளர் நலச் சட்டத்தில் இதே போன்ற திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின், குறிப்பாக ஆப்பிள் – பாக்ஸ்கான் நிறுவனங்களின், கோரிக்கைகளுக்கு இணங்கவே கர்நாடக மாநில அரசு அந்த திருத்தங்களைக் கொண்டு வந்தது. தற்போது கர்நாடகத்தின் அடியொற்றி தமிழ்நாடும் தொழிலாளர் நலனைப் பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

நிலக்கரி திருடன் – கெளதம் அதானி!

மோடியின் கூட்டுக்களவானியான அதானிக்கு ஏற்ப மோடி அரசு, பல்வேறு சட்டத்திருத்தங்களை செய்து வருகிறது. அதன் ஒரு வெளிப்பாடு தான் அதானி குழுமமும் மோடி அரசும் சேர்ந்து நடத்திய நிலக்கரி வயல்களுக்கான இந்த ஏல முறைகேடு.

நீதித்துறையை மாற்றியமைக்கும் இஸ்ரேல் அரசு!
தொடரும் மக்கள் போராட்டங்கள்!

இதுவரை பாலஸ்தீன எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலில் வளர்ந்து வந்த வலதுசாரிகள், இன்று இஸ்ரேல் மக்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளுக்கும் கூட எதிராக நிற்கிறார்கள். தற்போது இஸ்ரேலின் ஜனநாயகத்திற்கு ஆபத்து என வீதியில் இறங்கும் மக்கள், பல ஆண்டுகளாக, பாலஸ்தீனர்களை ஒடுக்கும் அரசின் எந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் எதிர்த்து வீதியில் இறங்கவில்லை.

இஸ்லாமியர்களின் ரம்ஜான் கூட்டுத்தொழுகைக்கு எதிராக
காவி கும்பலின் அட்டூழியம்

இஸ்லாமிய சமூகத்தினரை துன்புறுத்துவதற்கும், இழிவுபடுத்துவதற்கும் சித்திரவதை செய்வதற்கும் எந்த எல்லைக்கும் செல்ல, ஆளும் காவிகும்பல் தயாராகிவருகிறது.

ஆருத்ரா கோல்டு நிறுவன பணமோசடி – அண்ணாமலையிலிருந்து ஆர். கே. சுரேஷ் வரை!

தொன்னூறுகளில் அனுபவ் தேக்குமரத் திட்டத்தில் தொடங்கி ஈமு கோழி வரை இதே கதைதான். இது தற்போது ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் பல்லாயிரம் கோடி மோசடியாக வளர்ந்து நிற்கிறது. நாங்கள் ஊழலற்றவர்கள், யோக்கியவான்கள் என வாய்ச்சவடால் அடிக்கும் பாஜக கும்பல்தான் (அண்ணாமலையிலிருந்து ஆர். கே. சுரேஷ் வரை) கொள்ளைக்காரக் கூட்டத்திற்கு பின்னால் இருக்கிறார்கள்.

ஐ.எம்.எப் – உலக வங்கியின் மறுகாலனியாக்க திட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர்கள் போராட்டம்

"நாம் கடனை திருப்பி செலுத்த வேண்டும். அரசு நிறுவனங்களை வைத்துக் கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது", “அரசு ஏன் வணிகத்தில் ஈடுபடவேண்டும்? இது எங்கள் பொறுப்பு அல்ல,” என்று ஐ.எம்.எப் ன் முகவராக பேசுகிறார் இலங்கையின் ஜனாதிபதி விக்கிரமசிங்க.

நெருங்கும் கர்நாடக தேர்தல் – வெறிபிடித்து அலையும் காவிக் கும்பல்

கர்நாடக மாநிலத்தில் சென்ற முறை நடந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை நடத்தியே பாஜக வெற்றி பெற்றது. இம்முறையும் பாஜகவிற்கு ஆட்சியமைக்கும் அளவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவேதான் மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் தங்களது பாசிச நச்சு அரசியலைக் கையிலெடுத்துள்ளனர்.

12 மணிநேர வேலை. ஆப்பிள்-பாக்ஸ்கானுக்காக கசக்கி பிழியப்படபோகும் தொழிலாளர்கள்!

கர்நாடக மாநில பாஜக அரசு, பாக்ஸ்கான் நிறுவனத்திற்காக செய்துள்ள தொழிற்சாலை சட்டத்திருத்தத்தின் படி தொழிலாளர் வேலை நேரம் 9 மணிநேரத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வேலை(over time) நேரம் மூன்று மாதத்திற்கு 75 மணி நேரம் என்று இருந்ததை 145 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பெண்களை இரவு நேர பணிக்கு அமர்த்திக்கொள்ளலாம் என்ற திருத்தமும் சேர்க்கப்பட்டுள்ளது.