செங்கனல்

செங்கனல்

மூடு டாஸ்மாக்கை! சாராயக்கடையை மூடு!
சாராய ஆலையை இழுத்து மூடு

    மூடு டாஸ்மாக்கை! சாராயக்கடையை மூடு! சாராய ஆலையை இழுத்து மூடு! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, 5.6.2023 மாலை 5 மணிக்கு திருச்சி ராமகிருஷ்ண மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தோழர் சுந்தரராசு மாவட்ட தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருச்சி, அவர்கள்…

காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் புதிய கூடாரமே நாடாளுமன்றம்

    பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் தனது சாம்ராஜ்ஜியத்தின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்புமுறையை “ஜனநாயக ஆட்சி முறையின் ஆன்மா” என்றும், ஜனநாயகத்தின் கோயில்” என்றும், “மக்களுக்கான மன்றம்” என்றும் கடந்த மே 28-க்கு முன்புவரை இந்திய நாடாளுமன்றவாதிகளால் அலங்கரிக்கப்பட்டு வந்துள்ளது. இவர்கள் சொல்லும் அர்த்தத்தில் இந்திய நாடாளுமன்றம் செயல்பட்டிருந்தால் கடந்த 75 ஆண்டுகளில் ஆகப்…

தி.மு.க. பிரச்சாரகர் மருதையனின் திண்ணை உபதேசங்களும்
பாட்டாளி வர்க்கக் கட்சியின் பாசிச எதிர்ப்பும்!

“பாசிசம்” “பாசிச எதிர்ப்பு” “பாசிசத்தை வீழ்த்த வேண்டும்” என்ற சொற்கள் பேஷனாகிவிட்ட இன்றைய காலத்தில், அதற்கான சாத்தியமான ஒரேயொரு மாற்றாக தேர்தலில் சரணடையச் சொல்லி பாசிச எதிர்ப்பை முனைமழுங்கடிக்க வைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிற இன்றைய காலத்தில், தேர்தலுக்கு வெளியேதான் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று ஒருவார்த்தை பேசினால் கூட ‘எதார்த்தம் புரியாதவர்கள்’ ‘கோமாளிகள்’ ‘பாசிச ஆதரவாளர்கள்’ என்று முத்திரை குத்தி தனிமைப்படுத்த தீவிரமான முயற்சிகள் நடக்கிற இன்றைய காலத்தில் கீழ்க்காணும் நமது நிலைப்பாட்டை எல்லா இடங்களிலும் திரும்பத் திரும்ப வலியுறுத்திப் பேச வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். பாசிச எதிர்ப்பு பற்றிய சகிக்கவொண்ணாத வெற்றுக்கூச்சல்களுக்கு நடுவே, ஆக்கப்ப்பூர்வமான நம் நிலைப்பாட்டை ஓங்கிக் கத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இல்லையென்றால் தேர்தல் மாயை என்ற ஆழிப்பேரலை பாசிச எதிர்ப்பு முனையைமழுங்கடித்து பாசிச ஆட்சியதிகாரம் நிறுவப்படுவதற்கு இட்டுச் சென்றுவிடும் பேரபாயம் நம்முன் உள்ளது.

20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயத்தால் பலி!
ஊழல் போலிசு அதிகாரிகளை தூக்கில் போடு!

  மக்கள் அதிகாரம் – கண்டனம் 20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயத்தால் பலி!  ஊழல் போலிசு அதிகாரிகளை தூக்கில் போடு!  டாஸ்மாக் கடைகளை மூடு! போதையிலிருந்து மக்களை மீட்டெடு! 16.05.2023. செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 20 க்கும் மேற்பட்டோர் பலி! இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மரணங்கள் அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் வெளிக்கொண்டுவருகின்றன.…

தேசிய கல்வி கொள்கை 2020
தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு ccce.eduall@gmail.com – 9444380211 16-05-2023 NEP–2020: தமிழ்நாடு அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்! மாநிலக் கல்விக் கொள்கையைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில உயர்நிலைக் கல்விக் குழுவிலிருந்து பேரா. ஜவகர் நேசன் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது பத்திரிக்கை செய்தியில் “இரகசியமாகவும், ஜனநாயகமற்ற முறையிலும் செயல்படும் தலைமையைக் கொண்டுள்ளதாலும், சில…

ஒரு ஐபோனிற்காக மரணித்தல் – Dying for an iphone – நூல் விமர்சனம்

இது இன்று சீன தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் என்று நாம் ஒதுக்கி விட முடியாது. நாளை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இலாப வேட்கைக்காக குறைந்த கூலி பெறும் இந்தியா போன்ற நாடுகள் நோக்கி தங்கள் உற்பத்தி தளங்களை மாற்றலாம். அப்போது மோடி அரசும் கார்ப்பரேட் கூட்டுகளும் தொழிலாளர்களை சுரண்டுவதில் ஓரணியில் நிற்பார்கள்.

தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது
புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு!

எட்டு மணி நேர வேலை கிடையாது! குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் கிடையாது! நிரந்தர வேலை, பணிப்பாதுகாப்பு கிடையாது! தொழிற்சங்க உரிமைகள் கிடையாது!

இனப்படுகொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது
தங்களது சிறப்புரிமை எனக் கூறும் மோடி அரசு!

இனப்படுகொலையில் ஈடுபட்ட, கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த, பிஞ்சுக் குழந்தை உட்பட 7 பேரைப் படுகொலை செய்த கொடூர கொலைகாரர்கள் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் என கூற முடியாது, அது எங்களின் ‘சிறப்புரிமை’ (privilege) என்று ஒன்றிய அரசும், குஜராத் மாநில அரசும் உச்சநீதிமன்றத்திலேயே கூறுகின்றன.

தீவிரமாகும் விவசாயிகளின் வறுமை! அம்பலமாகும் மோடியின் அண்டப்புளுகு!

சுட்டெரிக்கும் வெயிலிலும், மழையிலும் தங்களது விவசாய நிலத்தில் அரை குறை பட்டினியோடு வேலைப் பார்க்கும்  விவசாயிகள், தங்களது பிழைப்பை நடத்த பிற வேலைகளை கூலிக்காக, ஓய்வு ஒழிச்சலின்றி, விடுமுறை இன்றி பார்த்து வருகின்றனர். இது தான் நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் நிலைமை.