செங்கனல்

செங்கனல்

கொரோனாவைப் பயன்படுத்திக் கொள்ளையடித்த வேதாந்தாவின் அனில் அகர்வால்!
வேதாந்தாவுடன் பாஜக கள்ளக்கூட்டு!

நாட்டின் தலைவிதியை அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் தீர்மானிக்கிறார்கள் என்று நாடாளுமன்ற ஜனநாயகத்தை பற்றி முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் அது கார்ப்பரேட் முதலாளிகளால் தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு அனில் அகர்வால் போன்றவர்கள் இலக்கணமாக திகழ்கிறார்கள்

பீக் ஹவர் கட்டண கொள்ளைக்கே ஸ்மார்ட் மீட்டர்.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அரசு மின்கட்டணத்தை நிர்ணயம் செய்வது என்ற முறையை ஒழித்து விட்டு, சந்தைக்கேற்ப மின்கட்டணத்தை உயர்த்துவது என்பது ஸ்மார்ட்மீட்டர் மூலம் எளிதாக நடைபெறும்.

மின் கட்டண உயர்வுக்கு எதிராக சிறு குறு உற்பத்தியாளர்கள் போராட்டம்

ஒன்றிய அரசின் முடிவை மீறி மாநில அரசால் கட்டண உயர்வைத் திரும்ப பெறவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது என்பது சிறு தொழில் முதலாளிகளுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் மாநில அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைப்பதன் மூலமும், முதலமைச்சரையும், மின்சாரத் துறை அமைச்சரையும், தங்களது தொகுதி எம்.எல்.ஏ.க்களையும் தொடர்ந்து சந்தித்து மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் மூலமும் குறைந்தபட்ச நிவாரணத்தை மட்டுமாவது வாங்கிவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.

தீட்டையும் – தீண்டாமையையும் நியாயப்படுத்தும் சனாதன இந்து மத பார்ப்பனியத்தை ஒழித்துக்கட்டுவோம்!

சனாதன தத்துவம் தான் பிறக்கும் ஒவ்வொரு உயிரையும், சாதி முத்திரைக் குத்தி பிளவுபடுத்தி தீண்டாமை - தீட்டைப் புகுத்தி, அவற்றை நியாயப்படுத்தி வருகின்றது. இந்த சனாதன இந்து மத பார்ப்பனியத்தை பரப்பி வரும் காவிகளும், இவற்றை அங்கீகரித்து வர்க்க ஒடுக்குமுறையை-ஏற்றத்தாழ்வை தீவிரப்படுத்தி வரும் கார்ப்பரேட்டுகளும், ஒரு நாணயத்தின் (பாசிசத்தின்) இரு பக்கங்கள்.

மின்துறை தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட கதை தோழர் கோபிநாத் உரை

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன. வரும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று ஓசூரில் பொதுக்கூட்டமும் நடக்கவிருக்கிறது. இதனை ஒட்டி ஒரு…

எரிவாயு விலைகுறைப்பு! வாக்குக்கு விரிக்கும் வஞ்சக வலை!

கிள்ளித்தரும் இந்த குறைப்பு அன்றாடம் ஏறிவரும் பருப்பு, கோதுமை, அரிசி, தக்காளி, வெங்காயம், காய்கறிகள் மற்றும் எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களின் 11.5% விலையேற்றமும், GST இன் வரி உயர்வும் அள்ளிச்செல்லும் மொத்த செல்வத்தை விட இவை மிக மிக சொற்பமானது.

மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி! – பொறியாளர் சா.காந்தி நேர்காணல்

மாநில மின்வாரியங்கள் கார்ப்பரேட்டுகளால் எவ்வாறு நட்டத்தில் வீழ்ந்தது என்பதையும், மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதே, மின் கட்டண உயர்வின் பின்னால் ஒளிந்திருக்கும் சதி என்பதையும் அம்பலப்படுத்துகிறார், தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர், பொறியாளர் சா.காந்தி

உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்(PLI): கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஒரு சட்டபூர்வத் திட்டம்!

கைபேசிகளின் பல்வேறு உதிரிபாகங்களை பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் வெறுமனே அசெம்பிள் செய்வதற்கு மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு போனுக்கான விலையில் 4% செலவாகிறது என்று வைத்துக்கொண்டால் அதே போனுக்கு மோடி அரசு பி.எல்.ஐ திட்டத்தின் கீழ் போனுக்கான விலையில் 6% த்தை உற்பத்தி ஊக்கத்தொகையாக ஒரு போனுக்கு வழங்குகிறது.

சாமானிய மக்களும் – சந்திராயன் -3ம்!

  சந்திராயன் – 3, நிலவில் கால் பதித்த சாதனைகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் அணிவகுத்திருந்தாலும், இதிலும் குறிப்பாக நிலாவின் தென்துருவ பகுதியில் கால் பதித்ததில் முதன்மை என்கிற பெருமைக்குரிய செயலை வரவேற்போம்; பாராட்டுவோம். இதற்கு மூளையாக செயல்பட்ட விஞ்ஞானிகளின் அயராத உழைப்பும், 1000 க்கும் மேலான தொழிற்நுட்ப…

மோடி ’வித்தையும்’ மோடியின்
‘சுதந்திரதின’ உரையும்!

    77வது “சுதந்திர தின” விழாவில் பாசிச RSS, BJP கும்பலின் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஒன்றிய அரசின் தலைமை அமைச்சாரான மோடி ஆற்றிய அளப்பரையில் நடைமுறைக்கு உதாவாத கற்பனைகளுக்கும், அதன் பாசிசக் கொள்கைக்கு ஒத்து வராத பொய்யான வாக்குறுதிகளும் மோடி ‘வித்தைக்கு’ ஒப்பானதே. “வளர்ச்சியின் பொற்காலமாக அடுத்த 5 ஆண்டுகளில் அமையும், முன்னேற்றமானது 1000…