செங்கனல்

செங்கனல்

மின் கட்டண உயர்வும், அதானியின் நிலக்கரி திருட்டும்! தோழர் முத்துக்குமார்

நிலக்கரி இறக்குமதியில் அதானியின் கொள்ளையை அம்பலப்படுத்திய பைனான்சியல் டைம்ஸ். முழு தகவல்களுடன் மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார் அவர்களின் காணொளி.  

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல் – இஸ்ரேலின் இன அழிப்பு ஆக்கிரமிப்பு போர்

நாசிக்களின் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட யூதர்களைப் போல இன்றைக்கு நம் கண்முன்னே காசாவில் பல லட்சம் மக்கள் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள். தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக அமெரிக்காவும், பிரதேச ஆக்கிரமிப்பு நோக்கத்திற்காக இஸ்ரேலும் இணைந்து தொடுத்துள்ள அக்கிரமிப்புப் போர்தான் பாலஸ்தீனத்தின் மீதான இந்த தாக்குதல்.

இடஒதுக்கீட்டு அரசியலால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

இந்துராஷ்டிரம் என்ற பெயரில் பார்ப்பனிய மேலாதிக்கத்தை, சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாக கொண்ட சனாதனத்தின் ஆட்சியை நிறுவத்துடிக்கும் காவி பாசிச சக்தியான பாஜக, தனது சித்தாந்தத்திலும், நடைமுறையிலும் என்றைக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிராகவே இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம் பாஜகவின் இடஒதுக்கீட்டு வெறுப்பை மட்டும் வைத்து அதனை வீழ்த்திவிட முடியும் எனக் கருதுவதுதான் தவறு.

மின்துறை தனியார்மயத்துக்கு எதிரான ஓசூர் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகள் சார்பாக மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்கள் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஓசூரில் அக்டோபர் 8ம் தேதியன்று பொதுக்கூட்டம் மற்றும் புரட்சிகர கலைநிகழ்ச்சிகள்…

மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! – பொதுக்கூட்டம் – நேரலை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் சார்பாக மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்கள் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மற்றும் அதனை தொடர்ந்து அக்-8 – 2023 இன்று மாலை 4  மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி ஓசூர்…

காவிரி நீர் பங்கீடும்! இந்தியா கூட்டணியும்!

    காவிரி நீர் பங்கிட்டில் அடிமை இந்தியா முதல் ‘சுதந்திர’ இந்தியா வரை இழுபறிப் போராட்டமாகவே நீடிக்கிறது. தீர்ந்தபாடில்லை ஆனால், கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக தமிழ்நாட்டிற்கு 215 டிஎம்சி நீரை பெற்று வந்தது போய் இன்று 37.50 டிஎம்சிகே உன்னைப்பிடி என்னைப்பிடி என்ற கதையாகி விட்டது. இவற்றைக்கூட மாபெரும் போராட்டத்திற்கு பின்பே காவிரி நீர்-மேலாண்மை ஆணையத்தின் ‘கருணையால்’ படிப்படியாக வினாடிக்கு 5000 கன அடி நீரை 15 நாட்களுக்கு பெறுவதற்கான…

மின்சாரக் கட்டண உயர்வு
தனியார்மயத்திற்கு எதிராக போராடுவதே தீர்வு
தோழர் முத்துக்குமார் நேர்காணல்

1948ல் அம்பேத்கர் கொண்டு வந்த மின்சார விநியோகச் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சேவை என கூறப்பட்ட மின்சாரம், இன்றைக்கு தனியார்மய கொள்கைகளின் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் சாதனமாக மாற்றப்பட்டிருப்பது குறித்து பேசுவதுடன், தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடாமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதை, ஜீவா டுடே யூடியூப் சேனலில் வெளியான நேர்முகக்…

மகளிர் இடஒதுக்கீடு: பாசிஸ்டுகளிடம் நீதி கிடைக்குமா?

வரும் நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து பெண்களின் ஓட்டுகளை கைப்பற்றுவதற்காக, கேஸ்சிலிண்டர் விலையை இருநூறு ரூபாய் குறைத்த ஏமாற்றுவேலையைப் போல, தனது அடுத்த தேர்தல் குறியாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்துகிறது என்பதை இம்மசோதாவை ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இலட்சணத்தில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.

மின்சார தனியார்மயத்துக்கு எதிரான
ஓசூர் பொதுக்கூட்டம் – நிகழ்ச்சி நிரல்

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்!