செங்கனல்

செங்கனல்

மின்சார சட்டத் திருத்தம் 2022
தனியார்மயம் மட்டுமல்ல மறுகாலனியாக்கம்

மின்சார சட்டத்திருத்தம் 2022 என்பது வெறுமனே தனியார்மய நடவடிக்கை என்ற அளவிலேயே பெரும்பாலும் எதிர்க்கப்படுகிறது. ஆனால் அது நாட்டையே ஏகாதிபத்தியங்களிடம் அடிமையாக்கும் மறுகாலனியாக்க நடவடிக்கை என்று “மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தைக் கொண்டு சென்று அதன்…

ஊதிய உயர்வுக்கான ஆடை உற்பத்தி தொழிலாளர்களின் போராட்டமும்
அதை அடக்கி ஒடுக்கும் வங்கதேச அரசும்

    வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான ஆடை உற்பத்தி தொழிலாளர்கள் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக ஊதிய உயர்வுக்காகப் போராடி வருகிறார்கள். மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாக உள்ள 8,000 டகா-வை ($70) (இந்திய மதிப்பில் சுமார் 5800 ரூபாயை) 23,000 டகா-வாக ($209) (சுமார் 17,300 ரூபாயாக) உயர்த்தப் போராடி வருகிறார்கள். வங்கதேசத்தின் 3500 ஆடை தொழிற்சாலைகள்…

தில்லி காற்று மாசுபாடு – காரணம் யார்: விவசாயிகளா? கார்ப்பரேட் நல அரசா?

சம்பா சாகுபடிக்கும் குறுவை விதைப்புக்கும் இடையில் மிகக் குறுகிய காலமே வரும் வகையில் மாநில அரசின் சட்டம் இருப்பதும், இரட்டைப் பயிர் விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருப்பதும் தான் தில்லி காற்றுமாசுபாடு பிரச்சனைக்கு மூல காரணம். பிரச்சனையின் மூல காரணத்தை தீர்ப்பதை விட அதைப் பயன்படுத்தி எப்படி கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை பெருக்கலாம் என்றே இந்த தனியார்மயதாசர்கள் சிந்திக்கிறார்கள்.

மோடி-அமித்ஷா கும்பலின் பொருளாதார வளர்ச்சி என்ற மோசடி!

கடந்த ஐந்து ஆண்டுகளில் (2017-18 மற்றும் 2022-23) இந்திய தொழிலாளர்களின் சராசரி மாத ஊதியம் அவர்களின் உண்மை ஊதியத்தை விட 20% க்கும் மேல் குறைந்துள்ளது. வருமானங்கள் குறைந்ததின் காரணமாக இந்தியக் குடும்பங்கள் தங்களது குடும்ப செலவினங்களுக்காக தங்கள் சேமிப்பை(பணம் மற்றும் சொத்துகள்) விற்பது அதிகரித்துள்ளதாக RBI அறிக்கை கூறுகிறது. பட்டதாரிகளின் வேலையின்மை விகிதம் 42 சதவீதமாக உள்ளது.

இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பாதே!
மதவெறி இஸ்ரேலின் இன அழிப்புக்கு துணை போகாதே!

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி கண்டன அறிக்கை பாலஸ்தீனத்தின் மீது இனஅழிப்புப் போரைத் தொடுத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களை, பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் படுகொலை செய்ததுடன், காசா பகுதியையே அழித்துவிடும் நோக்கத்தோடு தனது கொடூர தாக்குதல்களைத் தொடர்கிறது இஸ்ரேல். காசாவில் உள்ள மருத்துவமனைகளையும் கூட விட்டுவைக்காமல் குண்டுவீசித் தகர்த்ததுடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருந்து…

ஆதார் – ஊபா வரிசையில் அணிவகுக்கும் ஜி.பி.எஸ்!

மக்கள் பிரச்சனைக்காக போராடி சிறை செல்லும் போராளிகளுக்கும் கூட வரும் காலத்தில் ஜி.பி.எஸ். கருவியயைப் பொருத்தி அவர்களை எந்த நேரமும் கண்காணித்து முடக்கும் வேலையில் இந்தக் காவி கார்ப்பரேட் பாசிச சக்திகள் நிச்சயம் இறங்குவார்கள்.

புரட்சி வரும் இல்லையா அம்மா?

ஏய்… அம்மா! புரட்சியென்றால் என்ன? அது போராட்டமடா கண்ணா ! வீரர்கள் சண்டை போடுவார்களே… அதுவா? ஆமா குழந்தை! போரிடுவாங்க,கொல்லுவாங்க,சாவாங்க. நாம் அன்னியனை எதிர்த்துப் போர் செய்கிறோமா? ஆமாகண்னு! அப்படித்தான் நினைக்கிறேன். நாம் ஏன் அவங்களோட போரிடனும் அம்மா? ஏன் என்றால் அவங்கள் எங்களை ஏமாற்றினாங்கள். அப்போ நாம் இப்போது அடிமைகளா அம்மா? ஆமாண்டா அது…

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி வரும் RSS – BJP பாசிசக் கும்பல்!

    கர்நாடகாவில் பிஜேபி கூட்டணி வெற்றிப் பெறவில்லையெனில் கலவரம் நடக்கும் என கலவரக்குரல் எழுப்பினார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்காகவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். என்ன செய்வது? ஒன்றியத்தை ஆள்வது அவர்களாக இருப்பதால் அது நடக்கவில்லை. ஒரு மாநில தோல்விக்கே இந்த கலவரக் குரல் என்றால் நடைபெறவிருக்கும் 5…