செங்கனல்

செங்கனல்

பெரியார் பல்கலைக் கழக ஊழல் துணை வேந்தரைப் பாதுகாக்க துடிக்கும் காவிக் கும்பல்

பெரியார்/மெக்காலே குறித்து புத்தகம் வெளியிட்டதற்கு, அனுமதி பெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி பேரா. சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்த துணைவேந்தர் ஜெகநாதன், தற்போது அரசு வழங்கக்கூடிய இலவசக் கல்வியை தான் காசாக்க முயற்சித்திருப்பதற்கு தண்டனையாக அவரை பணிநீக்கம் செய்து ஜெயிலுக்கு அனுப்பாமல் வேறு என்ன செய்வது?

நாடாளுமன்றத்தில் வண்ணகுப்பி புகைவீச்சு: மக்கள் எழுச்சி மட்டுமே பாசிசத்தை வீழ்த்தும்!

நாடாளுமன்ற கட்சிகள் உண்மையில் பகத்சிங்கை வருடா வருடம் சிறப்பிப்பது நடிப்பாக இல்லாமல் இருந்தால் இந்நேரம் இளைஞர்களின் செயலை அங்கீகரித்து வரவேற்று இருக்க வேண்டும். மேலும் இளைஞர்களின் முழக்கத்தின் நியாயத்தை அங்கீகரித்து அதற்காகப் போராடி இருக்க வேண்டும். அதை விடுத்து பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு இல்லை என்று அலறி, ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்
பாசிசத்தின் தாக்குதலைக் கண்டு புலம்பும் எதிர்க்கட்சிகள்.

தங்கள் மீதான பாஜகவின் இந்த பாசிசத் தாக்குதலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் என்ன நடவடிக்கையை எடுத்துள்ளன என்று பார்த்தால், கண்டனம் தெரிவிப்பது, போட்டி நாடாளுமன்றம் நடத்துவது என வழமையாகச் செய்வதைத் தாண்டி அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. குறைந்தபட்சமாக இடைநீக்கத்தைத் திரும்பப் பெறக்கோரி மோடி, அமித்ஷா வீட்டையோ, துணை ஜனாதிபதியின் வீட்டையோ முற்றுகையிட்டிருந்தால் கூட பாஜகவிற்கு ஒரு நெருக்கடியினைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைப்பற்றியெல்லாம் சிந்திப்பதாகக் கூடத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேட்டிகள் பாஜகவின் பாசிச நடவடிக்கைகள் குறித்த புலம்பல்களாக மட்டுமே உள்ளன.

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் : பாசிச கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவு!

இதற்கு முன்னர் நடைப்பெற்ற குஜராத், உபி மாநிலங்களில் பெற்ற தேர்தல் வெற்றிகளைப் போலவே இந்த சட்டமன்ற தேர்தல்களிலும், பாஜக வெற்றியடைய, இரண்டு பிரதான காரணிகள் இருக்கின்றன. முதலாவதாக பாஜக மேற்கொள்ளும் இந்துத்துவ கருத்தியல் நிகழ்ச்சி நிரல், அதற்கு பெருகிவரும் மக்கள் ஆதரவு. இரண்டாவதாக மோடியை முன்னிறுத்தும் கவர்ச்சிவாதம் எனும் இழிநிலை அரசியல்.

போர் குற்றவாளி – அமெரிக்க அதிகாரி ஹென்றி கிஸிஞ்சரின் மரணம் உலக உழைக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியே..!

    அமெரிக்க அணு – ஆயுத வெளியுறவுக் கொள்கை அதிகாரியும் ஆளும் வர்க்கத்தின் அடிவருடியான ஹென்றி கிஸிஞ்சரின் மரணம், உலகம் முழுவதும் தனது மேலாதிக்கத்தை நிறுவிவரும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அடியாளான அதிபர்களுக்கும் ஒரு இழப்பே என்றால் அவற்றை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், அமெரிக்க போர் வெறியால் உயிரை, உடல் உறுப்புகளை, வாழ்வுரிமையை இழந்து அகதிகளாக அன்றாடம் அவதிப்படும்…

நாட்டு மக்களுக்கே பாதுகாப்பில்லை நாடாளுமன்றத்திற்கு என்ன கேடு !
தோழர் கோபிநாத் உரை

4 பேர் எழுப்பிய நாட்டின் பிரச்சனைகளைப் பேச வக்கில்லாத எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களுக்கே பாதுகாப்பில்லை.. நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்பில்லை என்றால் என்ன கேடு !   உரை : தோழர் கோபிநாத் மக்கள் அதிகாரம் மாநில இணை செயலாளர்.    

சென்னையில் தொடரும் மழை வெள்ளம்: இயற்கையின் பேரிடரா? தனியார்மயம் உருவாக்கிய அழிவா?

ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் செயல்படும் உற்பத்திசார் கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி வியாபாரிகள், மத்திய மற்றும் உயர் வருவாய் பிரிவைச் சேர்ந்த புதுப் பணக்கார கும்பல்- இவர்கள் தான் சென்னையின் இரத்த நாளங்களாக இருந்த நீர்வழித் தடங்களை அழித்த குற்றவாளிகள் என்றால், மாஸ்டர் பிளான் II என்ற பெயரில் அதனைத் திட்டமிட்டுப் பின்னிருந்து இயக்கிய அரசும், உலகவங்கியும் இந்த அழிவின் சூத்திரதாரிகள்.

பல ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களால்
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட
ஜம்மு-காஷ்மீர் பின்தங்கிய நிலையில் உள்ளதா?
[ஜம்மு-காஷ்மீரின்] சமூக-பொருளாதாரம் பற்றிய
அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

குழந்தை பாலின விகிதம் (child sex ratio), பெண்கல்வி போன்ற பல முக்கியக் குறியீடுகளில் அனைத்து இந்திய சராசரியை விட ஜம்மு-காஷ்மீரானது முன்னேறிச் சென்றுள்ளதைக் காட்டுகிறது. இப்புள்ளிவிவரங்கள் [காஷ்மீர் பின்தங்கியுள்ளது என்ற] பொதுக் கருத்தை அடியோடு மறுக்கின்றன.

ரேசன் கடைகளை மூடும் நயவஞ்சக நாடகம்!

அரைகுறைப் பட்டினியோடு போராடும் மக்களும், சத்தான உணவு கிடைக்காத கர்ப்பிணிப் பெண்களும், ஊட்டச்சத்து குறைப்பாடுள்ள குழந்தைகளும் நிறைந்திருக்கும் நமது நாட்டில், அவர்களுக்கு உரிய உணவுப் பாதுகாப்பை வழங்காமல், ரேசன் கடையை ஒழித்து விட்டு, ஏதோ கொஞ்சம் பணத்தை வீசியெறிந்து, அவர்களை சந்தைச் சூதாட்டத்தில் சிக்க வைப்பது எத்தனை பயங்கரமானது?