செங்கனல்

செங்கனல்

“இந்தியா” கூட்டணியால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

பாசிசம் தங்களை திட்டமிட்டு ஒடுக்குகிறது என்பதை இந்தக் கட்சிகள் உணர்ந்திருந்தாலும், இதனை பாசிசம் தன்னை நிறுவிக்கொள்வதற்கு தனது எதேச்சதிகார ஆட்சியை நிலைநாட்டுவதற்கான நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாக பார்க்கத் தவறுகிறார்கள். அரசியல் விளையாட்டில் எதிரிகளை கையாளும் வகையாக சுருக்கிப் பார்க்கிறார்கள் இதனைத் தனிநபர்களின் ஆதிக்கமாக அவர்கள் முன்னெடுக்கும் செயலாக பார்க்கிறார்கள். பாசிசத்தின் வழிக்கு கொண்டுவரும் ஒத்திசைவாக்கம் என்ற நிகழ்ச்சிப் போக்கின் அங்கமாக இதனைப் பார்க்கவில்லை.

மக்கள் அதிகாரம் 2 – வது அரசியல் – அமைப்பு மாநில பொதுக்குழு மற்றும் மாநாடு

2 – வது அரசியல் – அமைப்பு மாநில பொதுக்குழு மற்றும் மாநாடு பத்திரிகை செய்தி தேதி 25-02-2024 அன்பார்ந்த பத்திரிகையாளர்களே! ஜனநாயக சக்திகளே! உழைக்கும் மக்களே! வணக்கம்!!. 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எமது அமைப்பான மக்கள் அதிகாரம் இந்த அரசு கட்டமைப்புக்கு வெளியே தீர்வுகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை எடுத்து மக்களிடம் செல்வாக்கு…

போராடும் விவசாயிகள் பற்றிய
காவி பாசிஸ்டுகளின் பொய்கள்!

விவசாயிகளின் போராட்டத்தையும், விவசாயிகளையும் எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவு அவதூறுகளை பரப்பி விடுவதே இவர்களின் நோக்கம். முகநூல் வாட்ஸாப் டிவிட்டர் என எல்லா சமூக ஊடகங்களிலும் பதிவுகளாகவும், காணொளிகளாகவும் இந்தப் பொய்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.

விவசாயிகளின் போராட்டமும், நிறைவேறாத கோரிக்கைகளும்!

இதற்கெல்லாம் அடிப்படையாக விளங்கும் கார்ப்பரேட்களின் மறுகாலனியாக்க நடவடிக்கையின் ஒருபகுதியாக திணிக்கப்பட்ட, மூன்று வேளாண் சட்டங்கள் இதுவரை ரத்து செய்யப்படவில்லை, ரத்து செய்யவும் மாட்டார்கள். ஏனெனில், இவை தனியார்மய - தாராளமய - உலகமய அரசியல் பொருளாதார அடிப்படையைக் கொண்ட மறுகாலனியாக்கக் கொள்கை என்ற சுருக்குக் கயிரோடு இறுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவும் பாசிச மோடி அரசைக் கண்டித்து – மறியல்! ஆர்ப்பாட்டம்!

பென்னாகரம் பிப்ரவரி 16 – 2024 நாடு தழுவிய தொழிலாளர்கள் – விவசாயிகள் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக பென்னாகரம் இந்தியன் வங்கி முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பாக நேற்று (16.2.2024) காலை 10 மணிக்கு நடைபெற்றது.   இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக…

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளின் கல்விச் சிக்கல்களும் தீர்வுகளும் – வெளியீடு – முன்னுரை

    ‘‘கல்வி, எதிர்காலத்திற்கான கடவுச்சீட்டு. ஏனெனில் நிகழ்காலத்தில் தயாராக இருக்கும் ஒருவருக்குத்தான் எதிர்காலம் சொந்தமாகும் என்றார் கறுப்பினப் புரட்சியாளர் மால்கம் எக்ஸ். அதனால்தான் நாட்டின் எதிர்காலம், இன்றைய வகுப்பறையில் தீர்மானிக்கப் படுகிறது எனக் குறிப்பிடுகிறோம்.   கல்வி என்பது வெறும் செய்திச் சேகரிப்பல்ல! அது உயர் விழுமியங்களை உருவாக்கும் உன்னத நிகழ்வாகும். அனைத்து வகையான அடிமைச் சங்கலிகளையும் தகர்த்தெறிந்து, விடுதலைக்கான சாவியாகத் திகழ்வது கல்வி. அதனால்…

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கல்வி சிக்கல்களும் தீர்வுகளும் – நூல் வெளியீடு மற்றும் கலந்தாய்வு

நாளை (17/2/2024) சனிக்கிழமை மக்கள் கல்வி கூட்டியக்கம் சார்பாக தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கல்வி சிக்கல்களும் தீர்வுகளும் – என்ற சிறு நூல் வெளியீடு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இடம்: பத்திரிக்கையாளர் மன்றம் சேப்பாக்கம்.

பொது சிவில் சட்டம் – காவிகளின் தேர்தல் நாடகம் ஆரம்பம்

பெண் விடுதலை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், சம உரிமை வழங்குதல் என்ற பெயரில் இதுவரை பாஜக கொண்டுவந்த முத்தலாக் ஒழிப்பு, புர்கா தடைச் சட்டம் போன்றே தற்போது கொண்டுவந்துள்ள பொது சிவில் சட்டமும் உண்மையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர்களின் மீதான அக்கறையிலிருந்து கொண்டுவரப்பட்டதல்ல. இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாக கொண்ட இந்த நடவடிக்கைகளுக்கு முற்போக்கு முகமூடியை கொடுக்கிறது பாஜக.

பட்ஜெட் 2024: தேர்தல் நேரத்திலும் முதலாளிகளுக்கான சேவையில் சமரசம் செய்யாத காவி பாசிஸ்டுகள்

2014ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்த போது மோடியும் பாஜகவும் நாட்டின் வளர்ச்சியை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்களது பத்தாண்டுகால ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி மிகவும் பின்தங்கிப் போயுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விவசாயக் கூலிகள் நகரங்களை நோக்கிப் படையெடுக்கின்றனர். ஆனால் இம்முறை பாஜக வளர்ச்சியப் பற்றிப் பேசவில்லை, அது மதவெறியைப் பேசுகிறது.

பட்ஜெட் 2024 : பாசிஸ்டுகளின் பொய் மூட்டைகள்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக இவர்கள் அளித்த வாக்குறுதி, மோடியின் அனைவருக்கும் 15 லட்சம் வாக்குறுதியைப் போல வெறும் வெற்று முழக்கம், மக்களை ஏமாற்றும் ஜூம்லா என்பது நாம் அறிந்ததே. கடந்த முறைவரை பட்ஜெட்டில் இந்த வெற்று முழக்கத்தையாவது கூறிவந்தார்கள் ஆனால் இம்முறை அதையும் நிறுத்திவிட்டு விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை கமுக்கமாகக் குறைத்துவிட்டார்கள்.