செங்கனல்

செங்கனல்

தேர்தல் நன்கொடை பத்திரம் – உச்ச நீதிமன்ற தீர்ப்பும், பாசிச மோடி அரசின் பிரம்மாஸ்திரமான ‘CAA’வும்!

    அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடைகள் பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடைமுறையானது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் – அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)-இன் கீழ் பேச்சுரிமை – கருத்துரிமையை மீறும் வகையில் உள்ளது. இதனடிப்படையில் உச்ச நீதிமன்றம் மேற்கண்ட நடைமுறையை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15 அன்று தீர்ப்பளித்தது. மேலும், அரசிடம் கணக்கு கேட்கும்…

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். வேண்டாம் சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது என்பதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சி.ஏ.ஏ. சட்டமானது நடைமுறைக்கு வருவதாக பாசிச மோடி கும்பல் கடந்தவாரம் அறிவித்தது. இசுலாமியர்கள் மட்டுமின்றி பெரும்பான்மை மக்களது குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கி நாட்டை இரண்டாகப் பிளந்து இந்துராஷ்டிரத்தை அமைக்கத் துடிக்கும் பாசிச மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்தனத்தை…

மீண்டும் சி.ஏ.ஏ. – மதவெறியே பாசிஸ்டுகளின் பிரதான ஆயுதம்

சிஏஏ என்பது மூன்று நாடுகளில் இருந்து மதஒடுக்குமுறை காரணமாக வெளியேறி இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது, இதனை எப்படி நீங்கள் தவறெனக் கூறலாம். தற்போது அமுலுக்குக் கொண்டுவந்திருக்கும் சட்டவிதிகளில் கூட இஸ்லாமியர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்துவது போல ஒன்றும் இல்லையே என்று ஏற்கெனவே கேட்கப்பட்டு முறியடிக்கப்பட்ட பழைய வாதத்தை மீண்டும் காவிகள் கடைவிரிக்கிறார்கள்.

ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்கம் : ஆசிரியர்கள், கல்வியாளர்களை நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டல்!

ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்கம் : ஆசிரியர்கள், கல்வியாளர்களை நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டல்! 10.03.2024 கல்வி செயற்பாட்டாளர் ஆசிரியர் சு.உமா மகேஸ்வரி அவர்களை பள்ளிக் கல்வித்துறை இடைநீக்கம் செய்துள்ளது‌. செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் சு. உமா மகேஸ்வரி அவர்கள் தொடர்ந்து அறிவியல் பூர்வமான, ஜனநாயகப் பூர்வமான…

அரசியலற்ற போராட்டங்களின் பின்னே வால்பிடித்துச் சென்று, அதை வானளாவப் புகழும் அரசியலற்ற லும்பன் கும்பல்

வர்க்கமாகப் பிளவுண்டுள்ள ஒரு சமூகத்தில் நடுநிலை என்பது இல்லை. இல்லவே இல்லை. வர்க்கப் போராட்டத்தின் துலக்கமான வெளிப்பாடு அரசியல் கட்சிகளுக்கிடையிலான போராட்டமாகும். சுரண்டும் வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கம் இவையிரண்டும் தத்தமது நலன்களுக்கான அரசியல் கட்சியின் மூலமே அரசியல் அரங்கில் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்கின்றன. கொள்ள முடியும். எனவே, அரசியலற்ற, கட்சி சார்பற்ற தன்மை என்பது நடுநிலையான ஒரு கருத்தல்ல. அது தெளிவாக ஆளும் வர்க்கத்தின் கருத்தாகும்.

பெண்களை முன்னிறுத்தும் அரசின் திட்டங்களும் அதிகரிக்கும் உழைக்கும் மகளிர் மீதான சுரண்டலும் ஒடுக்குமுறையும்.

பெண்கள் என்றால் ஆண் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைவிடக் குறைவாக கொடுக்கலாம். வேலை நேரத்தை அதிகரிக்கலாம். சம்பளம் இல்லாத ஓவர்டைம் வேலை வாங்கலாம். பெண் தொழிலாளர்களுக்கு என தனியான வலுவான தொழிற்சங்கங்கள் கிடையாது. அவர்கள் எதிர்த்துப் போராட மாட்டார்கள். அதுவும் கிராமங்களிலிருந்து படிப்பை முடித்தவுடன் நகரங்களுக்கு வரும் இளம் பெண் தொழிலாளர்கள் என்றால், நிர்வாகம் கொடுக்கும் குருவிக் கூடுபோன்ற அறையில் அடைத்துவைத்து வேலைவாங்கலாம். இதுதான் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெண் தொழிலாளர்களைப் பணிக்கமர்த்த முன்னுரிமை கொடுப்பதன் ரகசியம்.

போர்க்களத்தில் வேலை செய்யும் இந்திய இளைஞர்கள் – மோடி அரசின் சாதனை

வேலையின்றி பசியில் வாடுவதை விட போர் நடக்கும் நாடுகளுக்குச் சென்று செத்துப்போவதே மேல் எனும் நிலைக்கு இந்திய இளைஞர்களைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது மோடி அரசு.

தேர்தலுக்கு தேர்தல் முளைக்கும் ரஜினி, விஜய் போன்ற காளான்களைப் பிடுங்கி எறிவோம்! மக்களுக்கான அதிகாரத்தை மீட்டெடுக்கும் வழியில் பயணிப்போம்!

நடிகர் விஜய் திரையில் வசனம் பேசுவதைத் தாண்டி இந்த மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக இதுவரை என்ன செய்துள்ளார்? அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து நான்கு வார்த்தைகள் பேசக் கூடத் துப்பில்லாமல் நான் அடுத்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவேன் அதுவரை மவுனமாகத்தான் இருப்பேன் என்கிறார். இவரது அரசியல் கொள்கை என்ன? பொருளாதாரக் கொள்கை என்ன?

தோழர் ஸ்டாலினும், ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அவரது போராட்டமும்! – பாகம் – 1

ஸ்டாலின் மீதான அனைத்து அவதூறுகளிலும் பொய்களிலும் ஒரு ஒற்றுமை உள்ளது.  "ஸ்டாலினின் மீதான குற்றங்கள் தனியானது இல்லை; இது கம்யூனிச சித்தாந்தத்தில்; பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தில் இருக்கும் குற்றங்கள்; கம்யூனிச சித்தாந்தம், தவிர்க்கமுடியாமல் ஒரு கொடுங்கோன்மைக்கு தான் வழிவகுக்கும்" என்பதை பிரச்சாரம் செய்யும் நோக்கம் தான் அந்த ஒற்றுமை.

விவசாயிகள் கோரிக்கை பற்றிய மெத்த படித்த அரை வேக்காட்டு முதலாளித்துவ அறிஞர்களின் பொய்கள்

குறைந்த பட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க, இந்திய அரசுக்கு பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை என வாதிடும் இப்பொருளாதார புலிகளில் யாரும் விவசாயிகள், தங்களது விளைப் பொருட்களை குறைந்தப் பட்ச ஆதார விலைக்கு கீழே விற்பதனால் அடையும் நட்டக் கணக்கைப் பற்றி ஒருபோதும் வாய் திறப்பதில்லை.