செங்கனல்

செங்கனல்

காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த
தேர்தல் என்பது ஏமாற்று!
மக்கள் படையே ஒரே மாற்று!

    அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! நமது நாடு ஒரு கொடிய இருண்ட காலத்தை நோக்கிப் பயனப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் வெட்டிப் புதைத்துவிட்டு முதலாளித்துவத்தின் அப்பட்டமான சர்வாதிகார ஆட்சியை, பாசிச ஆட்சியை நிறுவுவதை நோக்கி மோடி – ஆர்.எஸ்.எஸ்.  தலைமையிலான காவி பாசிசக் கும்பல் வெறித்தனமாக முன்னேறி வருகிறது.…

காங்கிரஸ் கட்சியால் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா?

பாசிச மோடி அரசு கடந்த பத்து ஆண்டுகளாக மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்திவரும் நவீன தாராளவாதக் கொள்கைகள் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் மத்தியில் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை அறுவடை செய்யும் பொருட்டு காங்கிரஸ் கட்சி இது போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறது. ஆனால் காவி பாசிஸ்டுளின் அதே பொருளாதாரக் கொள்கைகளைத்தான் காங்கிரசும் கொண்டிருக்கிறது என்பதால் தனது தேர்தல் வாக்குறுதிகளை அதனால் நிறைவேற்ற முடியாது என்பதுதான் உண்மை.

பாலஸ்தீனம் : இஸ்ரேல் யூதவெறி இனப்படுகொலையின் உச்சக்கட்டம்!

பூர்விக அமெரிக்க குடிகளை வெள்ளையர்கள் அழித்தொழித்ததைப் போல, நாஜிக்கள் யூதர்களை அழித்தொழித்ததைப் போல தற்போது இஸ்ரேல் யூதவெறி அரசால், பாலஸ்தீனர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகிறார்கள். இம்முறை பாலஸ்தீனர்களின் இனப்படுகொலை நம் கண்முன்னே நேரலையாக ஒளிப்பரப்படுகிறது.

ஆனந்த் மகிந்தராவின் கல்வி சேவைக் கனவும் சீரழிக்கப்படும் அரசு பல்கலைக்கழகங்களும்

“நிலைமைகள் தங்களுக்கு தகுந்தவாறு மாறியுள்ளதாக” ஆனந்த் மகிந்தரா கூறுகிறார்.  தற்போதைய நிலையில் இந்திய தரகு முதலாளிகள் ஒவ்வொருவரும் அரசின் சலுகைகளுடன் பலநூறு கோடிகளை முதலீடு செய்து தனக்கென ஒரு பல்கலைக்கழகத்தினை உருவாக்கி வைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது மகிந்திராவின் பல்கலைக்கழகமும் இணைந்துள்ளது.

தேர்தல் என்பது ஏமாற்று!
தெருவில் இறங்குவதே ஒரே மாற்று!

  காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த தேர்தல் என்பது ஏமாற்று! தெருவில் இறங்குவதே ஒரே மாற்று! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம், பொதுக்கூட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி பென்னாகரம் ஏப்ரல் 14, மாலை 4 மணி அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியைத் தோற்கடித்துவிட்டால் “பாசிசம் வீழ்ந்து” வசந்தகாலம் வந்துவிடும் என்பதாக “இந்தியா”…

போராடும் ஜனநாயக சக்திகளின் மீது ஒடுக்குமுறை
ஒன்றிய அரசிடம் சரணடைவு :
இதுதான் திமுகவின் பாசிச எதிர்ப்பு

பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் இணைவதன் மூலம் தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த ஒப்புக் கொண்டு ஒன்றிய அரசிடம் சரணடைவது ஒருபுறம், என்றால் மறுபுறம் இதனை அம்பலப்படுத்தும் ஜனநாயக சக்திகள் மீது திமுக அரசு அடக்குமுறையை ஏவிவருகிறது.

மோடியின் இதயம் யாருக்காக துடிக்கிறது?

உலகப் பணக்காரர்களும் இந்தியக் கூத்தாடிகளும் முதலாளிகளும் எவ்வித சிரமும் இல்லாமல்  அம்பானி வீட்டு திருமண முன் கூடல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இவ்வளவு ஏற்பாடுகளை மெனக்கட்டு செய்துள்ளது மோடி அரசு. ஒன்றிய மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து, அரசுத் துறைகள் அனைத்தும் துரிதமாக வேலை செய்ய முடுக்கி விடப்பட்டு இந்த வேலைகள் அனைத்தும் மிகக் குறைந்த காலத்தில் முடிக்கப்பட்டுள்ளன.