முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் II
நிலைகுலைந்துவரும் மக்களின் நிதிநிலை

ரூபே (RUPE) இணையத்தில் வெளியிட்ட ஓர் கட்டுரையில் சமீபத்திய ஆண்டுகளில் மக்களின் உண்மை வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை பற்றியும், சாதாரண நுகர்வு பொருட்களின் (சோப்புகளில் இருந்து துணி மற்றும் காலணிகள் வரை) விற்பனை குறைவதற்கு இந்த வீழ்ச்சி எவ்வாறு வழிவகுத்தது என்பதைப் பற்றியும் நாங்கள் விவரித்திருந்தோம். பின்வரும் பகுதியில், மக்களின் நிதி நிலைமையை சற்று விரிவாகப் பார்ப்போம்.