முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் III
பொருளாதார அழுத்தத்திற்கு மத்தியில் செல்வத்தை குவித்தல்

ஒருபுறம், கார்ப்பரேட்டுகள் மற்றும் வங்கிகள் மலையளவு பணத்தை குவித்து வைத்திருப்பதையும்; மறுபுறம், பெரும்பாலான உழைக்கும் மக்கள் நெருக்கடியை எதிர்கொண்டு, அவர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்துகொள்ளக் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதையும் முதல் இரண்டு பாகங்களில் பார்த்தோம்.