சட்டத்திற்குக் கட்டுப்படாத ஆளுநர்.
நீதிமன்றம் அல்ல மக்கள் மன்றமே சரியான தீர்ப்பை தரமுடியும்.
உச்ச நீதிமன்றத்தால் ஆளுநருக்கு எதிராக எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த விசயத்தில் கருத்துத் தெரிவிக்க மட்டுமே முடியும். அரசியல் சாசனத்தின் 361வது பிரிவு நீதிமன்ற உத்தரவுகளில் இருந்து மாநில ஆளுநர்களைப் பாதுகாக்கிறது. அந்தப் பிரிவின் படி ஆளுநரோ, ஜனாதிபதியோ தங்களது நடவடிக்கைகள் குறித்த எந்த நீதிமன்றத் தீர்ப்பிற்கும் கட்டுப்படத் தேவையில்லை.