கதிர்

கதிர்

பாசிச மோடி அரசின் அடுத்தகட்ட இலக்கு நகர்ப்புற நக்சல்களும் – மக்களுமே!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டின் ‘வளர்ச்சித்’ திட்டங்களுக்கு  ‘நகர்ப்புற நக்சல்கள்’ தடையாக உள்ளனர் என்று மாநில சுற்றுச் சூழல் அமைச்சர்கள்  மாநாட்டில் திருவாய் மலர்ந்துள்ளார் பாசிச மோடி. மேலும் அரசின் ஏனைய திட்டங்களுக்குத் தடையாக இருப்பதால், அவர்களின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டும் என மாநில சுற்றுச் சூழல் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இத்துடன், குஜராத்…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீதான தடை – ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பல் காவி பாசிச நடவடிக்கையின் அடுத்தக் கட்ட நகர்வு

பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா(PFI)  மற்றும் அதோடு சேர்ந்த எட்டு அமைப்புகளை ஊபா சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒருவாரமாக பி.எப்.ஐ,  எஸ்.டி.பி.ஐ அலுவலங்களில் நடந்து வரும் சோதனைகளை அடுத்து இத்தடையை அறித்துள்ளது. கடந்த வாரம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ )மற்றும்  அமலாக்கத் துறை பத்து…

மா.பெருமாள் கவுண்டர் எலும்பு முறிவு சட்ட விரோத மருத்துவமனையை இழுத்து மூடு!

பென்னாகரம் வட்டம் நல்லாம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள மா.பெருமாள் கவுண்டர் எலும்பு முறிவு மருத்துவமனை என்ற போலி மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் திருப்பதி என்ற 29 வயது இளைஞரின் கால் அகற்றம் ! சட்ட விரோத மருத்துவமனையை இழுத்து மூடு! போலி மருத்துவர்களை கைது செய்! பென்னாகரம் வட்டாட்சியர் அலுலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்! மேற்கண்ட…

மதவெறியைக் கிளப்புவதன் மூலம் தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் காவி கும்பல்

மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற வேண்டும் என்றால் பாஜக மக்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்துப் போராட வேண்டும். ஆனால் விலைவாசி உயர்வு தொடங்கி வேலைவாய்ப்பின்மை வரை எந்தப் பிரச்சனையை எடுத்தாலும் ஒன்றியத்தில் தாங்கள் காவி கார்ப்பரேட் நலனுக்காக கொண்டுவந்த திட்டங்கள்தான் அதற்கு மூல காரணமாக இருக்கிறது அவற்றைப் பேசினால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போவோம் என்று மக்கள் பிரச்சனைகள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.

தமிழகம் முழுவதும் கலவரத்தை தூண்டும் நோக்கில் நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தடை செய் – மக்கள் அதிகாரம்.

    வருகிற அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும், 51 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு செப்டம்பர் 28ம் தேதிக்குள் ஊர்வலம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்குமாறு தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நடந்த வழக்கு விசாரணையில் ஆர்.எஸ்.எஸ்.…

மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி!

  மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி! நேற்று (19-09-2022)  கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளி குறித்து செய்தி சேகரிக்க சென்ற நக்கீரன் நிருபர் பிரகாஷ் மற்றும் புகைப்பட கலைஞர் அஜித் ஆகியோர் மீது பள்ளி முதலாளி ரவிக்குமார் கும்பல் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளது. அதிமுக கவுன்சிலர் ராஜசேகர் மூலம் கொலையை மறைக்க பண பேரம்…