செங்கனல்

செங்கனல்

சத்துணவுப் பணியாளர்களை வஞ்சித்து மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் திராவிட மாடல் அரசு!

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு பணியாளர்களில், சமையலர், சமையல் உதவியாளர்கள், அமைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக நிரப்பப்படாமல் இருக்கிறது. இப்பணியாளர்களின், குறிப்பாக பெண் பணியாளர்களின் உழைப்புச் சக்தியை அரசு, ஒட்ட சுரண்டி வருகிறது. ஆனாலும் அப்பணியாளரகள் கடின உழைப்புச் சக்தியை செலுத்தி மாணவர்களுக்கு வாஞ்சையாக உணவு தயாரித்து கொடுத்து வருகின்றனர்

சட்டத்திற்குக் கட்டுப்படாத ஆளுநர்.
நீதிமன்றம் அல்ல மக்கள் மன்றமே சரியான தீர்ப்பை தரமுடியும்.

உச்ச நீதிமன்றத்தால் ஆளுநருக்கு எதிராக எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த விசயத்தில் கருத்துத் தெரிவிக்க மட்டுமே முடியும். அரசியல் சாசனத்தின் 361வது பிரிவு நீதிமன்ற உத்தரவுகளில் இருந்து மாநில ஆளுநர்களைப் பாதுகாக்கிறது. அந்தப் பிரிவின் படி ஆளுநரோ, ஜனாதிபதியோ தங்களது நடவடிக்கைகள் குறித்த எந்த நீதிமன்றத் தீர்ப்பிற்கும் கட்டுப்படத் தேவையில்லை.

உத்திரகாசி சுரங்கப்பாதை 41 தொழிலாளர்கள் மீட்பு
மதவெறி – ஊழல் – சுற்றுச்சூழல் அழிப்பு
தோழர் முத்துக்குமார் காணொளி

இந்தக் காணொளி 27.11.2023 அன்று பதிவு செய்யப்பட்டதாகும். 28.11.2023 இரவு 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த காணொளியில் பேசியுள்ள கருத்துக்களின் அரசியல் முக்கியத்துவம் கருதி இதைப் பதிவிடுகிறோம். பார்வையாளர்கள் இதைக் கருத்தில் கொண்டு பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.    

பாடபுத்தகங்களில் இராமயணமும் மகாபாரதமும்
மாணவர்களிடம் இந்து தேசவெறியை திணிக்கும் காவி பாசிஸ்ட்கள்!

ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் படித்தால் ராமனையும் கிருஷ்ணனையும் போல சூது-வாதும் வர்ண-சாதி-மதத்திற்காக கொலை செய்வதையும் பல பெண்களோடு கூத்தடிப்பதையும் ஒருவர் கற்றுக் கொள்ள முடியுமே ஒழிய நாட்டுப்பற்று எப்படி உருவாகும்? மாணவர்களிடம் இந்து தேசிய வெறியை தூண்ட முடியுமே ஒழிய இந்திய மக்களின் விடுதலைக்காக மாணவர்களை சிந்திக்க வைக்கமுடியாது.

அரசு உதவி பெறும் கல்லூரிகளை கை கழுவும் திராவிட மாடல் அரசு!

பல்துறைசார் பல்கலைக்கழகங்களை அமைக்க வேண்டும் என்பது தேசிய கல்விக்கொள்கையின் பரிந்துரைகளில் ஒன்று. அதாவது, ஒரு கல்லூரிக்குள் பொறியியல்-தொழில்நுட்ப படிப்புகள். அறிவியல் படிப்புகள், கலை-அறிவியல் படிப்புகள், வணிகம்-மேலாண்மை படிப்புகள். திறன் சார்ந்த படிப்புகள், மருத்துவப்படிகள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. தமிழ்நாட்டிலுள்ள பல அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழங்களாக மாறுவதற்கு முயற்ச்சித்து வருகின்றன. இதன் மூலம்…

ஐந்தாம் இடத்தில் இந்தியப் பொருளாதாரம்!
ஆனால் ஆம்புலன்ஸ் வர சாலை இல்லை!

    மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில்  25 வயதான மாமோனி ராய் என்ற இளம்பெண், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மருத்துவ அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) நாடுகிறார். குடும்பத்தினர் எவ்வளவு போராடியும் அவரது கிராமத்தின் மோசமான சாலை கட்டமைப்பை காரணம் காட்டி எந்த ஒரு அவசர ஊதியும் வர மறுத்துவிட்டது. வேறுவழியின்றி உறவினர்கள் அவரை  மரக்…

பருவமழையால் இந்திய நகரங்கள் ஏன் சீரழிவின் விளிம்பிற்கு தள்ளபடுகின்றன?

முதலாளிகளைப் பொருத்தவரை பெருநகரங்கள், தொழிலாளர்களை மிக அதிக அளவில் ஒரே இடத்தில் குவித்து, அதன் மூலமாக மலிவான கூலிக்கு அவர்களைச் சுரண்டும் வாய்ப்பை அவர்களுக்கு  வழங்குகின்றன. முதலாளித்துவத்துவம் இதன் பொருட்டே தனது அனாதிக்காலம் தொட்டு பெருநகரங்களை உருவாக்கி வந்துள்ளது.

“மக்கள் அதிகாரம்” அமைப்பை தேர்தல் அரசியலுக்குக் கேடாக பயன்படுத்தும் கலைப்புவாத மருதையன், கோவன், காளியப்பன் கும்பலின் சதியை தோலுரிப்போம்!

“மக்கள் அதிகாரம்” அமைப்பை தேர்தல் அரசியலுக்குக் கேடாக பயன்படுத்தும் கலைப்புவாத மருதையன், கோவன், காளியப்பன் கும்பலின் சதியை தோலுரிப்போம்! மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி 20.11.2023. உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! போலிகள் எச்சரிக்கை! எமது அமைப்பான மக்கள் அதிகாரம் மற்றும் எமது தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய…