மோடி-அமித்ஷா கும்பலின் பொருளாதார வளர்ச்சி என்ற மோசடி!

கடந்த ஐந்து ஆண்டுகளில் (2017-18 மற்றும் 2022-23) இந்திய தொழிலாளர்களின் சராசரி மாத ஊதியம் அவர்களின் உண்மை ஊதியத்தை விட 20% க்கும் மேல் குறைந்துள்ளது. வருமானங்கள் குறைந்ததின் காரணமாக இந்தியக் குடும்பங்கள் தங்களது குடும்ப செலவினங்களுக்காக தங்கள் சேமிப்பை(பணம் மற்றும் சொத்துகள்) விற்பது அதிகரித்துள்ளதாக RBI அறிக்கை கூறுகிறது. பட்டதாரிகளின் வேலையின்மை விகிதம் 42 சதவீதமாக உள்ளது.

தன்னை முன்றாவது முறையாக தேர்ந்தெடுத்தால் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக உயர்த்திக் காட்டுவேன் என்றார் ‘உத்தமர்’ பிரதமர் மோடி. இது அமைச்சர்கள் தொழிலதிபர்கள், பத்திரிக்கை முதலாளிகள், சிஇஒ கள் மத்தியில் கடந்த ஜூலையில் நடைபெற்ற பாரத்மண்டபம் திறப்பு விழாவில் மோடி பேசியது. இக்கும்பல், மோடியின் ஆட்சிகாலத்தில் இதற்கு முன்பு இருந்ததை விட இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது என்று தொடர்ச்சியான பிரச்சாரங்கள் செய்கிறது. இதனை செய்தி ஊடகங்களும் ஊதிப்பெருக்குகின்றன.

தான் பேசியதையே மறுக்கும் விதமாக, சட்டீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, இலவச உணவு தானிய  வழங்கும் திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்வதாக அறிவித்திருந்தார். இதன் மூலம் 80 கோடி மக்கள் பலனடையப்போவதாகவும் பெருமையாகச் சொன்னார். இத்திட்டம் கொரோனா காலத்தில் உணவு பற்றாக்குறையை சமாளிக்க கொண்டுவரப்பட்டத் திட்டமாகும். இக்கும்பல் கொரோனாவிற்குப் பிறகு பொருளாதார நிலைமைகள் பழைய நிலைக்கு வந்துவிட்டதாகவும் பேசிவருகிறது.

ஆனால், உலகின் மூன்றாவது பொருளாதாரத்தை நோக்கிய வளர்சிப்பாதையில் உள்ள ஒரு நாடு தனது மக்கள் தொகையில் 60 சதவிதம் பேரின் உணவு பஞ்சத்தை போக்குவதற்காக கஞ்சித் தொட்டிகளை திறப்பதற்கு சமமான திட்டத்தினை ஏன் நீட்டிக்க வேண்டும்? மோடி-அமித் ஷா கும்பல் கூறும் பொருளாதார வளர்ச்சி என்ற உருட்டுக்கு பின்னால் உள்ள உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட உலக பட்டினி குறியீட்டு பட்டியலில் (GHI) இந்தியா 111 வது இடத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து. மொத்தம் கலந்து கொண்ட 125 நாடுகளில் இந்தியா 111 இடம். இலங்கை(60), பாக்கிஸ்தான்(102), நேபாளம்(69), வங்க தேசம்(81) போன்ற நாடுகள் கூட GHI ல் இந்தியாவிற்கு மேலே உள்ளது. இந்த பட்டினிக் குறியீட்டை மறுத்த மோடி கும்பல் வழக்கம் போல, ‘இது மேற்கத்திய சதி’, ‘முறையான  வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை’ என்று அறிக்கை வெளியிட்து. மத்திய குழந்தைகள் நலத்துறை அமைச்சரான ஸ்மிதி இரானியோ, ஒருபடி மேலே சென்று “இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களில் 3,000 பேரை அழைத்து அவர்களுக்குப் பசிக்கிறதா என்று கேட்டு பட்டியலை உருவாக்குகிறார்கள். இந்தியாவை விட பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுகிறது என்று அந்த குறியீடு கூறுகிறது, இதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?  

“நான் காலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள எனது வீட்டை விட்டு வெளியேறினேன். 5 மணிக்கு கொச்சிக்கு செல்ல விமானம் ஏறினேன். நான் அங்கு நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 5 மணி விமானத்தைப் பிடித்தேன். நான் உணவு என்று எதையாவது பெறும்போது, ​​அது 10 மணியாக ஆக இருக்கும். நீங்கள் பகலில் எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிட்டு, எனக்குப் பசிக்கிறதா என்று கேட்டால், ‘ஆமாம், என்று தான்” என்று சொல்வேன்!”

 

 

இந்தியாவில் பட்டினி என்பதும் ஊட்டசத்து குறைபாடு என்பதும் எதார்த்தம். இந்திய அரசின் புள்ளிவிவரங்களே இதை ஒப்புக்கொண்டுள்ளன. உதாரணமாக “இந்தியாவில் 36 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், சுமார் 19 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாகவும், 32 சதவீதம் பேர் எடை குறைவாகவும் உள்ளனர்.”இத்தரவுகள் தேசிய சுகாதார கணக்கெடு வெளியிட்டவை. 36% வளர்ச்சி குன்றியர்கள் என்பதன் பொருள்-ஐந்து வயதிற்குட்பட்ட 100 குழந்தைகளில் 36 குழந்தைகள் அந்த வயதுக்கு தேவையான உயரத்தில் இல்லை என்பதாகும். இவையனைத்துமே நீண்டகாலமாக இந்தியாவில் நிலவிவரும் பட்டினியின் விளைவுகளாகும். நிலைமை இப்படி இருக்க ஸ்மிதி இரானியோ அப்பட்டமாக பொய்பேசுவதோடு மக்களின் வறுமையை பொறுப்பில்லாமல் நக்கலடிப்பதையும் பாக்கிஸ்தானோடு ஒப்பிட்டும் பாசிச திமிரோடு பேசியிருந்தார்.

காவி-கார்பரேட் கும்பல் சொல்லிக் கொள்வது போல இந்தியப் பொருளாதாரம் மக்களின் வாழ்நிலையும் சிறப்பாகவா உள்ளது? இக்கேள்விக்கான பதிலை அவர்களின் புள்ளிவிவரங்களே மறுக்கின்றன. உதாரணமாக முதலாளித்து பொருளாதாரவாதிகளின் கூற்றுப்படி இந்தியா முன்னேறிய நாடாக வளர ஆண்டுக்கு 8 சதவிகித வளர்ச்சி வேண்டும் என்கின்றனர். ஆனால் மோடி-அமித் ஷா கும்பலின் கடந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் சராசரியாக 5.7 சதவிகித வளர்ச்சியே இருந்துள்ளது. இது வேலை உருவாக்கம், நலன்புரி நடவடிக்கைகள், குடும்ப சுவிகரிப்பு, சேமிப்பு, வறுமை ஒழிப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்தில் மேம்பாடுகள் ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ளதாக் கூறுகின்றனறர்.

 

 

கடந்த ஐந்து ஆண்டுகளில் (2017-18 மற்றும் 2022-23) இந்திய தொழிலாளர்களின் சராசரி மாத ஊதியம் அவர்களின் உண்மை ஊதியத்தை விட 20% க்கும் மேல் குறைந்துள்ளது. வருமானங்கள் குறைந்ததின் காரணமாக இந்தியக் குடும்பங்கள் தங்களது குடும்ப செலவினங்களுக்காக தங்கள் சேமிப்பை(பணம் மற்றும் சொத்துகள்) விற்பது அதிகரித்துள்ளதாக RBI அறிக்கை கூறுகிறது. (குடும்பங்களின் நிகர நிதிச் சொத்துக்களின் அளவு 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.) கடந்த 10 ஆண்டுகளில், ஒரு வருடத்தைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும் வேலையின்மை விகிதம் 7 சதவீதத்திற்கு மேல் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டதாரிகளின் வேலையின்மை விகிதம் 42 சதவீதமாக உள்ளது. இளைஞர்களிடையே (15-24 இடையிலான வயது) வேலையின்மை விகிதம் 2022 இல் 23.22 சதவீதமாக இருந்தது. சமீபத்திய PLFS தரவுகளின் படி 2022-23 காலத்தில் பெரும்பாலான ‘வேலைவாய்ப்பானது’ சுய வேலைவாய்ப்பு (57 சதவீதம்) ஆகும். இதில் பெரும்பான்மை விவசாயம் சார்ந்த சுயவேலைகளாகும். ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் 70 சதவிகித்திற்கும் மேலான மக்கள் மேற்சொன்ன நிலையிலேயே உள்ளனர்.

அதேவேளையில் மேட்டுக்குடிகளின் (10%) விலையுயர்ந்த பொருட்களின் சுவீகிரிப்பு அதிகரித்துள்ளதாகவே புள்ளிவிவரங்கள் கூறுகின்றனர். ஏறத்தாழ இவர்களின் பங்களிப்பைக் கொண்டே பொருளாதாரம் வளர்ந்து வருவதாக வடைசுட்டு வருகிறது ஆளும்வர்க்க கும்பல். கூடவே மோடி ஆட்சிகாலத்தில் தான் இதுவரை இல்லாத அளவில் கார்பரேட்டுகளுக்கான வரித்தள்ளுபடிகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பும் கார்பரேட்கள்/நிதிமூலதங்களின் லாபமும் அதிகரித்துள்ளன. ஒரு அறிக்கையின் படி, இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2026 ஆம் ஆண்டளவில் இரட்டிப்பாகும் என்றும், அதன் ஆடம்பர சந்தை 2030 ஆம் ஆண்டளவில் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறுகிறது. மோடி-அமித் ஷா கும்பல் கூறுகின்ற வளர்ச்சி என்பது இதுதான்.

இந்த காவி-கார்பரேட் பாசிட்கள் மூன்றாவது முறை ஆட்சியமைப்பதென்பதன் பொருள் நமது கோவணத்தையும் உருவ தயாராகி வருகின்றன என்பதுதுதான்.

அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன