எரிவாயு விலைகுறைப்பு! வாக்குக்கு விரிக்கும் வஞ்சக வலை!

கிள்ளித்தரும் இந்த குறைப்பு அன்றாடம் ஏறிவரும் பருப்பு, கோதுமை, அரிசி, தக்காளி, வெங்காயம், காய்கறிகள் மற்றும் எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களின் 11.5% விலையேற்றமும், GST இன் வரி உயர்வும் அள்ளிச்செல்லும் மொத்த செல்வத்தை விட இவை மிக மிக சொற்பமானது.

 

 

1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் ‘சுதந்திரம்’ வழங்கிய பரங்கி தலைகளைப் போல, பாசிச மோடி தலை(மை)யிலான அரசு 2023 ஆகஸ்டு 30 இல் எரிவாயு விலையில் ரூ.200 ஐ குறைத்தும், உஜலாலாவில் வழங்கும் எரிவாயு’க்கு ரூ.400 ஐ குறைத்தும் நள்ளிரவு நாடகத்தை நடத்தியுள்ளது.

வழக்கம் போல, இதற்கு “என் சகோதர்களின் மகிழ்ச்சிக்கு ஆதரவு” என்று பட்டயைக் கிளப்பியுள்ள மோடிக்கு, மணிப்பூர் மெய்தேய் ஆதிக்க சாதிவெறியர்கள், குக்கி இனப் பெண்களான சாகோதரிகாளை நிர்வாணப் படுத்தி அடித்து, துன்புறுத்தி, இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய போது, உதிரம் கொதிக்க வில்லையே! கொதிக்காது, வன்கொடுமையின் வாரிசுகளாக வலம்வரும் பாசிஸ்டுகளுக்கு கொதிப்பு எப்படி வரும்?

எதிர்க் கட்சிகள் கூறுவது போல கர்நாடக தோல்வியும், இதையொட்டி எழுந்த இந்தியா என்கிற கூட்டணியும் அடுத்து வரவிருக்கும் மத்திய பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஸோரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் தேர்தலும், மத்திய பிரதேச காங்கிரசு அரசு எரிவாயு ரூ.500 க்கு வழங்குவதும், 2024 இல் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலும் எரிவாயு விலை குறைப்பு (“‘சுதந்திர’ தின மிட்டாயைப் போல, இது தேர்தல் மிட்டாய்”) மிட்டாய்க்கு காரணமாக இருக்கலாம்.

கிள்ளித்தரும் இந்த குறைப்பு அன்றாடம் ஏறிவரும் பருப்பு, கோதுமை, அரிசி, தக்காளி, வெங்காயம், காய்கறிகள் மற்றும் எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களின் 11.5% விலையேற்றமும், GST இன் வரி உயர்வும் அள்ளிச்செல்லும் மொத்த செல்வத்தை விட இவை மிக மிக சொற்பமானது. பாசிச RSS, பிஜேபி மோடி கும்பல் 2014 இல் அட்சியில் அமர்ந்த போது ரூ.417 ஆக இருந்த எரிவாயு விலையை, கடந்த 9 ஆண்டுகளில் படிப்படியாக ரூ.1150 வரை உயர்த்தியது.

எரிவாயு விலையை ஒவ்வொரு முறையும் உயர்த்திய போதும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டியது. ஆனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், எரிவாயு விலையைக் குறைக்க வில்லை.

இப்பொதும் கூட, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்பவோ, இரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு வாங்குவதற்கேற்பவோ எரிவாயு விலையை நிர்ணயிக்க வில்லை. தற்போது கூட சர்வதேச கச்சா எண்ணெய் 1 பேரல், 80 டாலர் மட்டுமே. இதற்கேற்ப எரிவாயுவின் விலையை ரூ.300 ஆக நிர்ணயிக்க முடியும். தரவும் முடியும்.

ஒன்றிய தகவல் ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறுவது போல “ஓணம் – இரக்க்ஷா பந்தனையொட்டி பெண்களுக்கு அளித்த பரிசாக” இருக்கட்டும். மோடி கூறுவது போல “என் சகோதரிகளின் மகிழ்ச்சிக்கு ஆதரவாக” இருக்கட்டும். இவர்கள் கூறுவது உண்மையாக இருப்பினும் இந்த விலை குறைப்பு ரூ.820 இருந்திருக்க வேண்டும்.

மோடி அரசும், கார்ப்பரேட் அம்பானியும் சேர்ந்து இதுவரை அடித்த கொள்ளை ரூ.820 லிருந்து ரூ.200 ஐ மட்டும் கிள்ளிக் கொடுத்து விட்டு மீதி ரூ.620 ஐ அள்ளிக் கொண்டு போகிறார்கள். மேலும் சிவசேனாவின் சாம்பிரான் பத்திரிக்கையின் தலையங்கத்தின் தகவல் படி கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு எரிவாயு மூலம் தினமும் 1 இலட்சம் கோடி வரை பூமியை பாயாக சுருட்டி அக்கத்தில் வைத்துக் கொண்டது போல், சுருட்டி அரசு கஜானாவில் திணித்துள்ளது.

GST வரியின் மூலம் 6 மாதத்திற்கு ஒருமுறை 1½ இலட்சம் கோடியையும், பெட்ரோல், டீசல் மூலம், ஒரு லிட்டருக்கு ரூ.103 வரை உயர்த்தியது மூலம், கோடிக்கணக்கான ரூபாயையும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தில் அடித்தக் கொள்ளையையும், சி.ஏ.ஜி வெளிப்படுத்தியுள்ள 7 துறைகளின் ஊழல்களையும் ஊத்தி மூட அறிவிக்கப் பட்டதே எரிவாயு விலை குறைப்பு.

வாக்கு வங்கி அரசியலை ஒழிக்கப் போவதாக சவடால் அடித்த பாசிச மோடி கும்பல், இப்போது அறிவித்துள்ள எரிவாயு விலை குறைப்பும், குஜாராத்தில் வருடத்திற்கு இரு சிலிண்டர்கள் இலவசம் என்று அறிவித்ததும், 5 சட்டமன்ற தேர்தலில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை வாரிச் சுருட்ட விரித்த வஞ்சக வலையை தவிர வேறென்ன?

விலைவாசி உயர்வால பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் எரிவாயு விலையை குறைத்திருப்பதாக நடிக்கும் மோடி அரசு இப்போது மட்டும் அரக்க பறக்க அதுவும் நடு இரவில் அறிவிப்பது பெண்களின் ஓட்டைப் பொறுக்குவதற்கு இல்லையா?

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் விலையைக் குறைக்காமல் GST வரியை மேலும், மேலும் உயர்த்தி மக்களின் உயிர் நாடியை அறுத்துவரும் மோடி அரசின் இந்த விலை குறைப்பு பித்தலாட்ட – நாடக பம்மாத்து வேலையை புரிந்துக் கொள்ளாத அளவிற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. மோடி அரசு எதை சொன்னாலும் இனி ஏமாறுவதற்கு மக்கள் ஒன்றும் கேனைகளும் அல்ல. வேண்டுமானால் பாசிஸ்டுகளும் – இவர்களின் அடிவருடிகளும் – அடிமைகளும் பிழைப்புக்காக கேனைகளாக நடிக்கலாம். ஏனெனில் இவர்கள் அடுத்தவர்கள் உழைப்பை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிக் கூட்டம். மக்களோ உழைத்து வாழும் கூட்டம்.

காவி கார்ப்பரேட் பாசிச கும்பலுக்கு நன்றாக நடிக்கவும் தெரியும். நடிப்பதற்கேற்ப கதைக்கவும் தெரியும். வண்ணங்களுக்கேற்ப நிறம் மாறும் பச்சோந்திகளான இவர்களை – பல மடங்கு எரிவாயு விலையை உயர்த்தி கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை வாட்டி வதைத்து வரும் இவர்களை – பாசிஸ்டுகளான இவர்களை – “தேர்தல் அரசியலில் மட்டுமல்ல, களத்திலும் காலூன்ற விடாமல் செய்வது மிக, மிக அவசியம்! இது மக்கள் திரள் அரசியலால் மட்டுமே முடியும்! என்பதை நினைவில் பதியவைத்துக் கொண்டு பயணிப்போம்..!”

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன