குப்பைகளில் வாழும் பிலிப்பைன்ஸின் மணிலா மக்கள் : புகைப்படக்கட்டுரை!

முதலாளித்துவ பொருளுற்பத்தி சரக்குகளின் பரிவர்த்தனைக்கே பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் பாட்டிலில் தான் இயற்கையாக கிடைக்கும் நீரை கூட பரிவர்த்தனை சரக்காக மாற்றி விற்பனை செய்து வருகிறது முதலாளித்துவம். ஆனால் இதே முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தான் பிளாஸ்டிக் பொருட்களால் பூமிக்கு ஆபத்து என கூப்பாடு போடுகிறார்கள். உலகில் ஆண்டுதோறும் சுமார் 1.30 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கிறது. உலகில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களில் 50 விழுக்காடு பொருட்கள் ஒரு முறை மட்டும் […]

முதலாளித்துவ பொருளுற்பத்தி சரக்குகளின் பரிவர்த்தனைக்கே பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் பாட்டிலில் தான் இயற்கையாக கிடைக்கும் நீரை கூட பரிவர்த்தனை சரக்காக மாற்றி விற்பனை செய்து வருகிறது முதலாளித்துவம். ஆனால் இதே முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தான் பிளாஸ்டிக் பொருட்களால் பூமிக்கு ஆபத்து என கூப்பாடு போடுகிறார்கள்.

உலகில் ஆண்டுதோறும் சுமார் 1.30 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கிறது. உலகில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களில் 50 விழுக்காடு பொருட்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டு பின்னர் கழிவுகளாக மாறுகின்றன. ஆண்டுதோறும் 5 டிரில்லியன் ( 5 இலட்சம் கோடி) பிளாஸ்டிக் பைகள் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள அரசுகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, பிளாஸ்டிக் பொருட்களின் மறு சுழற்சி என அவ்வப்போது நடத்தும் நாடகத்தால் பிளாஸ்டிக் பொருட்களை ஒரு போதும் தடுத்து விட முடியாது. முதலாளித்துவ பொருளுற்பத்தி பொருட்களுக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்திக்கு தடை விதிக்காமல் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முடியாது.

ஏறக்குறைய 1 முதல் 3 விழுக்காடு மட்டுமே பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுகின்றன. சாலைகளில் தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை  சிலர் தேடி எடுப்பதை அன்றாடம் நாம் பார்த்திருப்போம். அதே போல, நீர்நிலைகளிலும், கடலிலும் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக தேடி எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரத்தில் உள்ள டோண்டா மாவாட்டத்தில் ஹேப்பி லாண்ட் எனும் ஒரு சேரியில் வாழும் மக்கள்.

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அம்மாவட்டத்தில் உள்ள மறுசுழற்சி கடைகளில் விற்று தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர். சமீபத்தில் அவர்களைப் பற்றி கார்டியன் பத்திரிக்கை புகைப்படக் கட்டுரையாக வெளியிட்டது. அதை வெளியிடுகிறோம்.

மணிலாவின் டோண்டோ மாவட்டத்தில் உள்ள ஹேப்பிலேண்டின் ஒரு உழைக்கும் மக்கள் வாழும் சேரிப் பகுதியின் நுழைவாயில்.

இது வெறும் பிளாஸ்டிக் குப்பைகளை விற்று குடும்பம் நடத்தும் உழைக்கும்  மக்களின் இருப்பிடம் மட்டுமில்லை.  கடுமையான வறுமை, கீழ்த்தரமான வாழ்க்கை நிலை என வாழத்தகுதியற்ற உழைக்கும் மக்களின் பகுதி உங்களை வரவேற்கிறது!

பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்கரை ஓரம் வசிக்கும் மக்கள் வீசியெறியும் கழிவுகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் கிடைக்கிறதா என தேடுகிறார் ஒருவர். பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு பின்பு பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இத்தொழிலாளி தனக்கான  மறுசுழற்சிகுப்பைகளை தேடவில்லை. அவர் பணக்காரர்களின் உலகை அழகுப்படுத்துகிறார். இத்தொழிலாளர்களின் உழைப்புச்சக்தியை உறிஞ்சாமல் முதலாளித்துவம் சுழல முடியாது!

பாசிக் நதி மணிலா விரிகுடாவில் இருந்து பாயும் ஒரு நதி. இந்நதி உலகளவில் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசுபட்ட நதிகளில் முதன்மையானதாக கருதப்படுகிறது.

கடலில் மிதக்கும் குப்பைகளை தடுப்பதற்காக பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒன்றாக அடுக்கி, தடுப்பணையாக வைக்கப்பட்டுள்ளன.

உலகில் உமிழப்படும் முதலாளித்துவ கழிவுகளை தடுக்கும் அரண்!

பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றப்பட்ட ஒரு மிதிவண்டி, ஹேப்பிலாண்டின் மறுசுழற்சி கடைக்கு பயணமாகிறது.
ஹேப்பிலாண்டில் உள்ள தொழிலாளர்கள் மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரிக்கிறார்கள்.
ஹேப்பிலாண்ட் பகுதி- வான் வழியே எடுத்த புகைப்படம்!
அமடோர் ஆங் எனும் தொழிலாளி, ஹாப்பிலேண்டிலிருந்து பிளாஸ்டிக் சிட்டிக்கு பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு செல்கிறார்.
G&B எனும் டீலர்களிடம் வேலைப் பார்க்கும் தொழிலாளர்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்கை பிளாஸ்டிக் நகரத்திற்கு எடுத்துச் செல்ல கயிற்றின் மூலம் கட்டுகிறார்கள், அங்கு மெட்ரோ மணிலா முழுவதும் உள்ள டீலர்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைக் கொண்டு வந்து விற்கிறார்கள்.
G&B ஸ்கிராப் டீலர்களிடம் வேலைப்பார்க்கும் ஒரு தொழிலாளி, ஒரு பிளாஸ்டிக் பை முழுவதுமாக பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துச் செல்கிறார். இதன் மூலம் தொழிலாளர்கள், ஒரு நாளைக்கு 400 பிலிப்பைன் பெசோக்கள் (550 ரூபாய்) சம்பாதிக்கிறார்கள்.
தொழிலாளர்களால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் சிட்டியில், இன்பினிட்டி எய்ட் டிரேடிங் மற்றும் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற மறுசுழற்சி நிறுவனத்திற்கு எடைபோட்டு விற்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு சிறு உருண்டைகளாக மாற்றப்படுகின்றன. இச்சிறு உருண்டைகள் மறுபடியும் பிளாஸ்டிக் தயாரிக்கும் மூலப் பொருட்களாக விற்பனை செய்யப்படுகின்றன.
ஹேப்பிலாண்டிலுள்ள ஒரு சிறுமி தன் செல்ல நாய்க்குட்டியை அணைத்தபடி புன்னகைக்கிறாள்.

செய்தி ஆதாரம் :
https://www.theguardian.com/global-development/gallery/2022/oct/24/philippines-manila-happyland-plastic-waste-pollution-recycling-in-pictures

-தாமிரபரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன