“கம்யூனிசமே வெல்லும்!” புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சிநாள் விழா சூளுரை

இன்று நவம்பர் 7 ரஷ்ய சோசலிச புரட்சி நாள். இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி வர்க்கம், உலகையே ஆளப்பிறந்ததாக இருமாந்திருந்த முதலாளித்துவ வர்க்கத்தின் முதுகெலும்பை உடைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நாள். அதே முதலாளித்துவம் பாசிசமாகப் பரிணமித்து மனித குலத்தின் எதிரியாக நின்ற போது, மிகப் பெரிய ஏகாதிபத்தியங்கள் எல்லாம் கை கட்டி வாய் பொத்தி நின்ற போது, சோசலிசத்தால் தான் பாசிசத்தை வீழ்த்த முடியும் என நிரூபித்ததற்கு அச்சாரம் இட்ட நாள்.  மாபெரும் ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து தாங்கள் செயல்படும் பகுதிகளில் எழுச்சியோடு கொண்டாடின.

ஹிட்லரின் பாசிசத்திற்கு மட்டுமல்ல, காவி கார்ப்பரேட் பாசிசத்திற்கும் முடிவுரை எழுத வல்லது பாட்டாளி வர்க்கம் தான் என தோழர்கள் செங்கொடி ஏற்றிச் சூளுரைத்தனர்.

ஒசூர்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக ரஷ்ய புரட்சி நாளை ஒட்டி, ஒசூர் – பாகலூர் கிளையில் கொடியேற்றி, கொடி வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தோழர். இரவிச்சந்திரன். மாவட்டத் தலைவர் (பு.ஜ.தொ.மு) அவர்கள் தலைமை தாங்கி நவ – 7 ரஷ்ய புரட்சியின் சாதனை இருந்தும் இந்தியாவில் காவி – கார்ப்பரேட் பாசிச அபாயத்தை குறித்தும் விளக்கி பேசினார். தோழர் ஜெயராமன் கொடியேற்றி வைத்தார்.

 

பென்னாகரம்

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கொடியேற்றி, கொடி வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தோழர் சத்தியமூர்த்தி வட்டார குழு உறுப்பினர், அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் அருண் மாநில குழு அவர்கள் கொடியேற்றி வைத்தார். தோழர் கோபிநாத், மாநில இணைச் செயலாளர், புரட்சிகர மக்கள் அதிகாரம் அவர்கள் விளக்கி உரையாற்றினார். பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுக்கப்பட்டது.
 
May be an image of 12 people and tree
 

கூத்தபாடி கிளையில் கொடியேற்றி, கொடி வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தோழர் ராஜா மாவட்ட குழு உறுப்பினர் அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் மாதப்பன் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.

 
கள்ளிபுரம் மேற்கு கிளையில் கொடியேற்றி, கொடி வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தோழர் அருண் மாநில குழு உறுப்பினர் அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் மாரியப்பன் வட்டார துணைச் செயலாளர், கொடியேற்றி வைத்தார். தோழர் கோபிநாத் மாநில இணைச் செயலாளர், புரட்சிகர மக்கள் அதிகாரம், அவர்கள் விளக்கி உரையாற்றினார்.
 
 
 
அண்ணாநகர் கிளையில் கொடியேற்றி, கொடி வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தோழர் சேட்டு கிளைச் செயலாளர், அவர்கள் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்தார். புரட்சிகர மக்கள் அதிகாரம் மாநில குழு உறுப்பினர், தோழர் அருண், அவர்கள் விளக்க உரையாற்றினார்.
 
May be an image of 12 people and tree
 
 
K. அக்ரகாரம் பகுதியில் கொடியேற்றி, கொடி வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தோழர் சத்தியநாதன், வட்டார செயலாளர், தலைமை தாங்கினார். தோழர் வெங்கடேசன் அவர்கள் கொடியேற்றி வைத்தார். இதில் திரளாக தோழர்கள் கலந்து கொண்டனர்.
 
May be an image of 9 people and tree
 
கிருஷ்ணகிரி
 
நாட்ராம்பாளையம் பேருந்து நிலையத்தில் கொடியேற்றி கொடி வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தோழர் முனியப்பன் புரட்சிகர மக்கள் அதிகாரம் அவர்கள் தலைமை தாங்கினார்.
சிறப்புரையாக தோழர் சரவணன் மாநில குழு உறுப்பினர் அவர்கள் உரையாற்றினார்.
நன்றியுரை தோழர்சென்னப்பன், வட்டார குழு உறுப்பினர், அவர்கள் உரையாற்றினார்.
இறுதியாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
 
 
 
 
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன