ரேசன் கடைகளை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க சதி செய்யும் காவி கார்ப்பரேட் பாசிசம்!

இந்திய அரசு உணவு தானியங்களைக் கொள்முதல் செய்து அதனை நாடு முழுவதும் உள்ள பொது விநியோக முறையின் கீழ் (ரேசன் கடைகளில்) மலிவு விலையில் விற்பனை செய்வதன் காரணமாக சந்தையில் சுதந்திரமான போட்டிக்குத் தடை ஏற்படுத்துவதாக உள்ளது எனவே அதனை இந்தியா உடனடியாகக் கைவிட வேண்டும். பொது விநியோக முறைக்கு மாற்றாக தனியார் முதலாளிகளின் கைகளில் மக்களுக்கான உணவுப் பொருட்களை வழங்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியாவிற்கு எதிரான மனுவில் அமெரிக்கா கூறியுள்ளது.

நாடு முழுவதும் மக்களுக்கு உணவு தானியங்களையும், மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய், சக்கரை உள்ளிட்டப் பொருட்களை இலவசமாகவும், மலிவு விலையிலும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ரேசன் கடைகளை மூடிவிட்டு அந்த பொறுப்பை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் வேலையில் இறங்கியுள்ளது காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு.

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு “உதவும் வகையில்” மலிவு விலையில் அரிசி பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களை பாரத் என்ற புதிய பிராண்டை ஒன்றிய அரசு சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்த பிராண்ட் வரிசையில் முதலில் கோதுமை மாவும், பின்னர் அரிசியும் மலிவு விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

சராசரியாக கிலோ ஒன்றுக்கு 50 முதல் 60 ருபாய் வரையில் விற்பனை செய்யப்படும் அரிசியை கிலோ 29 ருபாய் என்ற விலையிலும், 40 ருபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ கோதுமை மாவினை 27 ருபாய்க்கும் விற்பனை செய்யவிருப்பதாக கூறப்பட்டது.

இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் இருந்து இதற்கென விடுவிக்கப்படும் உணவு தானியங்களை கேந்திரிய பந்தர், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு மற்றும் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகிய மூன்று அரசு நிறுவனங்கள் மூலமாக மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்[1].

ஆனால் தற்போது இந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்திடம் ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன[2]. இனி ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தனது 17,000 கிளைகளில், சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் உணவு தானியங்களை விற்பனை செய்யவிருக்கிறது.

அரசு நிறுவனங்கள் மூலமாக மக்களுக்குப் மலிவு விலையில் பொருட்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கு பதிலாக அம்பானியின் இலாபத்தை உறுதி செய்வதற்காக அதனை ரிலையன்ஸ் நிறுவனத்தின் கையில் ஒப்படைப்பது என்பது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் இந்தியாவின் ரேசன் கடைகளை முற்றிலுமாக மூடிவிட வேண்டும் என்ற ஏகாதிபத்தியங்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வேலையில் காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு இறங்கியுள்ளது.

விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் மானியத்தை இந்தியா நிறுத்த வேண்டும் என்று  உலக வர்த்தக கழகத்தில் இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா புகார் கொடுத்துள்ளது. இது குறித்துப் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்திய அரசு உணவு தானியங்களைக் கொள்முதல் செய்து அதனை நாடு முழுவதும் உள்ள பொது விநியோக முறையின் கீழ் (ரேசன் கடைகளில்) மலிவு விலையில் விற்பனை செய்வதன் காரணமாக சந்தையில் சுதந்திரமான போட்டிக்குத் தடை ஏற்படுத்துவதாக உள்ளது எனவே அதனை இந்தியா உடனடியாகக் கைவிட வேண்டும். பொது விநியோக முறைக்கு மாற்றாக தனியார் முதலாளிகளின் கைகளில் மக்களுக்கான உணவுப் பொருட்களை வழங்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியாவிற்கு எதிரான மனுவில் அமெரிக்கா கூறியுள்ளது. இந்திய அரசு உணவு தானியங்களைக் கொள்முதல் செய்து அதனை நாடு முழுவதும் உள்ள பொது விநியோக முறையின் கீழ் (ரேசன் கடைகளில்) மலிவு விலையில் விற்பனை செய்வதன் காரணமாக சந்தையில் சுதந்திரமான போட்டிக்குத் தடை ஏற்படுத்துவதாக உள்ளது எனவே அதனை இந்தியா உடனடியாகக் கைவிட வேண்டும். பொது விநியோக முறைக்கு மாற்றாக தனியார் முதலாளிகளின் கைகளில் மக்களுக்கான உணவுப் பொருட்களை வழங்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியாவிற்கு எதிரான மனுவில் அமெரிக்கா கூறியுள்ளது.[3][4].

அமெரிக்காவின் இந்த உத்தரவை தலைமேல் ஏற்று நிறைவேற்றும் வேலையைத்தான் மோடி அரசு செய்து வருகிறது. முதலில் இது போல் மலிவு விலையில் மக்களுக்குக் கொடுப்பதாக கூறி அரசின் களஞ்சியத்தில் இருந்து உணவுப் பொருட்களை தனியார் முதலாளிகளுக்குக் கொடுப்பது. பின்னர் ரேசன் கடைகளை மூடிவிட்டு, தனியார் முதலாளிகளின் கடைகளில் மக்கள் பொருட்களை வாங்கிகொள்ளலாம் என்றும் அதற்கான தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அறிவிப்பது. அந்த மானியத் தொகையை படிப்படியாக குறைத்து பின்னர் எதுவுமே கொடுக்காமல் மொத்தமாக தனியார் முதலாளிகளின் கொள்ளைக்கு திறந்து விடுவது. இதுதான் ரேசன் கடைகளை ஒழிப்பதற்காக போடப்பட்டுள்ள திட்டம். அதன் முதற்கட்டமாகத்தான் தற்போது மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்கும் பொறுப்பு அம்பானியின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி வெளியானவுடன், பலரும் மலிவு விலையில் அரிசி, கோதுமை கிடைக்கிறதே என வரவேற்று பேசியும், எழுதியும் வருகின்றனர். ஆகையால் இந்த நடவடிக்கையின் பின்னால் ஒழிந்திருக்கும் சதியை அனைவரும் உணரும் வகையில் கொண்டு சேர்ப்பதும், மக்களைத் திரட்டி இதற்கெதிராக போராடி, பொது விநியோக முறையை ஒழித்துவிடாமல் பாதுகாப்பதும் உடனடிக் கடமையாகும்.

 

  • மகேஷ்

 

தகவல் உதவி

[1] https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2003160

[2]https://economictimes.indiatimes.com/industry/services/retail/govt-in-talks-with-reliance-retail-to-sell-bharat-products/articleshow/114437831.cms?from=mdr

[3] https://www.iatp.org/public-stocks-wto

[4]https://www.business-standard.com/world-news/wto-ministerial-draft-proposes-solution-on-issue-of-food-security-124022500372_1.html

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன