காவி பாசிஸ்டுகளின் கைப்பாவையாக மாற்றப்படும் தேர்தல் ஆணையம் – தோழர் முத்துக்குமார் உரை

மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவின் நோக்கம் என்ன?
இந்தியா மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொண்டு வந்தனர். தற்போது இந்திய தேர்தல் ஆணையர் நியமன மசோதாவை காவி பாசிஸ்டுகள் கொண்டு வந்துள்ளதன் மூலம் ஏற்கனவே இருந்த குறைந்தபட்ச ஜனநாயக நடைமுறைகளையும் புதைத்துக் கொண்டு முன்னேறுகிறார்கள்.
இம்மசோதா முலம் காவி பாசிஸ்டுகள் கூற வருவது இது தான் : எங்கள் பாசிசத் திட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும் எந்த அதிகாரியை வேண்டுமானாலும் தேர்தல் ஆணையர்களாக நாங்கள் நியமிப்போம். தேர்தல் ஆணையர்கள் நாங்கள் ஆட்டுவிக்கும் பொம்மை; இதை யாரும் தடுக்க முடியாது என்பது தான்.
இந்த மசோதாவின் நோக்கம் என்ன? இதை ஏன் நாம் எதிர்க்க வேண்டும் ? என்பதை இக் காணொளியில் மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் தோழர்.முத்துக்குமார் விளக்கிப் பேசுகிறார்.
பாருங்கள்.. பகிருங்கள் !

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன