மணிப்பூர் – புரட்சிகர அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மணிப்பூர்: குக்கி பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்!
போலீஸ் துணையோடு நடந்த கொடூரம்!
ஆர்எஸ்எஸ் பிஜேபி பாசிஸ்டுகளே குற்றவாளிகள்!
 
 
தர்மபுரி
மணிப்பூரில் குக்கி பழங்குடி பெண்கள் நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து  மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகில் 23.7.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் சிவா வட்டார செயலாளர் தலைமை தாங்கினார். கண்டன உரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தோழர் பாண்டியன், மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் பென்னாகரம் பகுதி தோழர் திருமலை, சிபிஐ எம் எல் மாவட்டச் செயலாளர் தோழர் வில் கிருஷ்ணன், தமிழ் தேச மக்கள் முன்னணி தோழர் சித்தானந்தம், தர்மபுரி வழக்கறிஞர் தோழர் பாலசுப்பிரமணியன், இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கத்தின் தலைவர் தோழர் தமிழ்வாணன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தோழர் சின்னசாமி, மக்கள் அதிகாரத்தின் மாநில இணை செயலாளர் தோழர் கோபிநாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கொண்ட அமைப்பின் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக தோழர் சத்தியநாதன் வட்டார குழு உறுப்பினர் நன்றியுரை ஆற்றினார்.
 
பாகலூர்
கொட்டும் மழையிலும் மணிப்பூர் மக்களுக்கு நீதிகேட்டு பாகலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து ஆளும் பிஜேபி ஆட்சியை கலைத்திடு! என்ற தலைப்பில் இன்று 24.07.23 மாலை 5.00 மணிக்கு பாகலூர் சர்க்கலில் ஆர்ப்பாட்டம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகாரம் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் தோழர். நாகராஜ் பு.ஜ.தொ.மு,
தோழர் ரவிச்சந்திரன் மக்கள் அதிகாரம், அவர்கள் கண்டன உரையாற்றினர் கூட்டத்தில் நமது தோழர்கள் போட்ட முழக்கம் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மணிப்பபூர் சம்பவத்தை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உற்று கவனிக்க வைத்தது.
ஓசூர்
மணிப்பூர் குக்கி பழங்குடி பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வராததற்கும் பொறுப்பேற்று மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரையும் பதவி விலக கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது
அதன் ஒரு பகுதியாக ஒசூர் இரயில் நிலையம் முன்பு நிலையத்தில் 25.7.2023 அன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.தோழர். இரா.சங்கர் பு.ஜ.தொ.மு பேசும்போது பாரத்மாதா முன்னிறுத்தும் BJP, அந்த கட்சி பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. இவர்களால் சமூக மக்களை, பெண்களை எப்படி அவர்களால் பாதுகாக்க முடியும். ஆகவே ஜனநாயக சக்திகள் முற்போக்கு அமைப்புகள் ஓர் கூட்டமைப்பை உருவாக்கி கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதை விளக்கி பேசினார். தோழர்கள் போட்ட முழக்கம் மணிப்பூரில் நடந்த கொடுமைகளை கண்முன் நிறுத்தியதாகயிருந்தது என பல தோழர்கள் கருத்து தெரிவித்தனர்.
 
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன