ஆர்.எஸ்.எஸ்.-ன் ‘தேச’துரோக பார்ப்பன – பாசிச பாரம்பரியம் பாகம் – 2

இந்துமதவெறி பாசிஸ்டுகளின் தாய் அமைப்பாகிய ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்துத்துவ சித்தாந்தம், கொள்கை மற்றும் நாசவேலைகளைப் பற்றி அறித்திருக்கும் பலருக்கும் கூட அதன் வரலாற்றுப் பின்னணி மற்றும் அமைப்பு முறைகள் எப்படி பார்ப்பன – பாசிசத் தன்மை உடையன என்பது தெரியாது.

“ஒரு மராத்தா” என்கிற புனைப் பெயரில் வீர் சாவர்கர் “இந்துத்துவா! யார் இந்து?” என்ற நூலை 1923 இல் வெளியிட்டார். அதுதான் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் முதல் நூல். ‘இந்துத்துவ” ஒழுங்கு முறையின் கீழ் கொண்டு வர முடியாதபடி பல்வேறு பிரிவுகள், சடங்குகள் நிலவுவதைக் கண்ட சாவர்கர், அதையே தனது பலமாக மாற்றினார். இந்துச் சின்னம், சடங்கு எதையும் விலக்கிவிடாதவாறு அனைத்தையும் கலந்து ஒரு “பொதுக் கலாச்சாரம், பொது நாகரீகம்”, “பொது பாரம்பரியம், பெரது வரலாறு” உருவாக்கி அதையே புனிதப்படுத்துவது சரியென்று வாதிட்டார். ஒரு தேசிய மற்றும் இனக் கண்ணோட்டத்துடன் கூடியவை என்று ”தீபாவளி, ராகி, விஜயதசமி. ராமநவமி” போன்ற இந்துப் பண்டிகைகள் மற்றும் இந்து புனிதத்தலங்களைத் தெரிவு செய்தார். இவற்றை தேசியப் புண்டிகைகளாகவும், தேசியச் சின்னங்களாகவும் கொண்டாடுவதன் மூலம் இசுலாமிய, கிறித்துவ மதத்தினரை அந்தியப்படுத்த முடியும் என்று நம்பினார்.

குறிப்பாக ராமனை ஒரு தேசியச் சின்னமாக நிலை நிறுத்துவதை அப்போதே சாவர்கர் வலியுறுத்தினார். “நம்மில் சிலர் ராமனை அவதாரமாகக் கருதி வழிபடுகிறோம். சிலர் ஒரு போர் தளபதியாக, நாயகனாகக் கருதி அருமை பாராட்டுகிறோம். நமது (பூர்வகுடி) இனத்தின் புகழ்மிக்க பிரதிநிதித்துவ அரசனாகக் கருதி அனைவருமே ராமனை நேசிக்கிறோம்” என்றார்.

ஆர்.எஸ்.எஸ்.-இன் அதிகாரபூர்வ ஏடு “ஆர்கனைசர்” இருபத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்பே, முஸ்லீம்கள் ராமரைத் தமது நாயகனாக ஏற்றுக் கொள்ளட்டும். அப்புறம் வகுப்புவாதப் பிரச்சினைகள் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும்.” (ஜூன் 20, 71) என்று எழுதியது. ஆகவே, ராம ஜென்ம பூமி மீட்பு இயக்கம் என்பது நாட்டின் பெரும்பான்மை மக்களின் தன்னெழுச்சியான கோரிக்கை என்று இந்துமத வெறி பாசிஸ்டுகள் வாதிடுவது பித்தலாட்டமே. அது “இந்துத்துவ” சித்தாந்தத்தின் ஓர் அங்கமாகத் திட்டமிட்டு ஆரம்பமுதலே வளர்க்பட்டதுதான்!

இந்து பாசிசத்தின் சின்னமாக ராமனைமுன்னிறுத்தும் நோக்கத்தைக் குறிக்கும் வகையில், ராவணனை ராமன் வென்றதாகக் கருதிக் கொண்டாடப்படும் விஜயதசமி அன்று. 1925 -இல் ஆர்.எஸ். எஸ். நிறுவப்பட்டது. ராமனது பிறந்த நாளாகக் கருதப்படும் ராமநவமி அன்று. 1987-இல் அந்த அமைப்புக்கு ”ராஷ்ட்ரிய சுவயம் சேவா சங்” என்கிற பெயரும், ராமனின் கொடியாகக் கருதப்படும் காவிக் கொடியும் ஏற்கப்பட்டன. பார்ப்பன சனாதான குலதர்மத்தைக் காப்பதற்காகப் போராடியவனே ராமன் என்கிற இதிகாச அடிப்படையைப் புரிந்துகொண்டாலே அதன் சித்தாந்தமும் விளங்கிவிடும்.

சாவர்கர். இந்துத்துவத்திற்கு விளக்கமளித்த இரண்டு ஆண்டுகளில் இன்னொரு மராத்திய பார்ப்பனர் ஹெட்கேவார். நாகபுரியில் ஆர்.எஸ்.எல் அமைப்பை நிறுவி அந்தச் சமயத்தில் அதுவும் மராட்டியத்தில் ஏன்,எதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிறுவப்பட்டது என்பதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு.

1922ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திவிடுவது என்று காந்தி அறிவித்தார். அதனால் காங்கிரசு-கிளாபத் கூட்டு பலவீனமடைந்து முறிந்து போனது. அதைத் தொடர்ந்து முன்னெப்போதும் கண்டிராதவாறு 1903-27 ஆகிய நான்காண்டுகளில் வடமேற்கில் உள்ள கேஹாட் முதல் டாக்காவரை அலை அலையாக மதக் கலவரங்கள் வெடித்தன. குறிப்பாக உ.பி.யில் மட்டும் 91 மதக்கலவரங்கள் ஏற்பட்டன. கீழ்சாதி மக்களிடையே இசுலாமிய சக்திகள் ஊடுருவி விட்டன என்று கூறி இந்து மதத்தை புனிதப்படுத்தி அமைப்பாக்கும் இயக்கத்தை ஆரிய சமாஜம் துவக்கியது. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மதம் மாறுவது அப்போது பெருமளவில் நடந்தது. இதைத்தடுத்து அம்மக்களை இந்து மத ஆதிக்கத்தின் கீழ் தக்கவைத்துக் கொள்ளவும், இசுலாமிய. கிறித்துவ மற்றும் சீக்கிய மத வளர்ச்சியைத் தடுக்கவுமே ஆரிய சமாஜம் அந்த இயக்கத்தைத் துவக்கியது.

மத மாற்றங்களால் இந்து மக்கள் தொகை குறைந்துவிட்டது. இந்து (பூர்வ குடி) இனம் அழிந்து போகாமல் தடுக்க வேண்டுமானால் “தீண்டாமை” வழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று ஆரிய சமாஜத்தின் அன்றைய தலைவர் சிரதானந்த் “இந்து அமைப்பு: அழியும் (இந்து பூர்வ குடி) இனத்தின் காவலன்” என்கிற நூலை 1925-இல் வெளியிட்டார். மீனாட்சிபுரம் மதமாற்றத்தைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களைச் சமாதானப்படுத்தி, மேல்சாதி இந்துமத ஆதிக்கத்தில் தக்க வைத்துக் கொள்வதற்கு விசுவ இந்து பரிசத் மேற் கொண்ட முயற்சிகளைப் போலவே அப்போதும் நடந்தது. சாவர்கரின் ”இந்துத்துவ” விளக்கத்தை உடனடியாகவே ஏற்றுக் கொண்ட இந்து மகா சபை அதுவரை ஆண்டுதோறும் மாநாடுகள் மட் டுமே நடத்தி வந்தது. ஆனால் 1925-ல் காசியில் கூடிய இந்து மகா சபை, இந்துத் தற்காப்புப் படை திரட்டப்பட வேண்டும் என்று தீர்மானம் போட்டது.

அதாவது, கிளாபத் இயக்கத்தின் மூலம் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் இசுலாமியர்கள் பெருமளவில் பங்கேற்று முக்கியத்துவம் பெற்றதையும். விடுதலை இயக்கங்களினால் விழிப்புற்று இந்து ஆதிக்கத்தில் இருந்து விடுபட முயலும் “கீழ்சாதி” மக்களிடையே இசுலாமிய செல்வாக்கு பரவியதையும் முறியடிக்கவே இந்திய அரசியலை வகுப்புவாதமயமாக்குவது என்று இந்துமத பாசிஸ்டுகள் முடிவு செய்து பெற்றடுத்ததுதான் ஆர்.எஸ்.எஸ்.

மராட்டியத்தில் இசுலாமிய மதத்தினர் மிகச் சிறுபான்மையினர் இந்து மதத்துக்கு ஆபத்தாகவும் இல்லை; அப்போது அம்மாநிலத்தில் பெரிய அளவில் வகுப்புக் கலவரம் எதுவும் நடக்கவும் இல்லை; என்ற போதும் 1920-களில் மராட்டியத்தில் “இந்துத்து சித்தாந்தமும் அமைப்பும் தோன்றுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது என்பது பலருக்கு வியப்பாகவே இருக்கும். காரணம் இதுதான். 1870-களில் மகாத்மா ஜோதிபா பூலே ‘“சத்ய ஷேடக் சமாஜ்” என்ற அமைப்பைத் தொடங்கியதில் இருந்து பிற்படுத்தப்பட்ட சாதி மக்களது சக்தி வாய்ந்த பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களை மராட்டியம் கண்டது. 1920 களில் அம்பேத்கார் தலை மையில் தாழ்த்தப்பட்ட மக்கள் அணி திரண்டு பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களை முன்னெடுத்தனர். இவற்றை எதிர்த்து முறியடிப்பதற்காகவும், பார்ப்பன மேல்சாதி ஆதிக்கம் கைநழுவிப் போவதைத் தடுக்கவும் அவர்களுக்கு ஒரு பலமிக்க படை தேவையாக இருந்தது. காங்கிரசில் அதிருப்தியுற்றிருந்த (பார்ப்பனீய) தீவிரவாதிகளான சித்பவன் பார்ப்பன திலகரின் வாரிசுகளும், சாவர்கர், ஹெட்கேவாருடன் இணைந்தனர். இப்படிப் பார்ப்பன சனாதன குலதருமத்தைக் காப்பதற்காகத் திரண்ட கும்பல்தான் ஆர்.எஸ்.எஸ்.ஐ நிறுவியது. ஆர்.எஸ்.எஸ்.ன் நிறுவனர் ஹெட்கேவாரே பகிரங்கமாக இதை ஒப்புக்கொள்ளும் வகையில் பின்வருமாறு எழுதியுள்ளார்

“மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவாக (தேசியத்திற்கான) உற்சாகம் நாட்டில் குறைந்து கொண்டே போகிறது; அந்த இயக்கம் சமூக வாழ்வில் தோற்றுவித்த தீயசக்திகள் அபாயகரமான முறையில் தலைதூக்குகின்றன. தேசியப் போராட்டத்தின் அலை ஓய்ந்த போது ஒருவருக்கொருவர் மனத்தாங்கலும் பொறாமையும் மேலுக்கு வந்தன. எங்கும் தனிப்பட்ட பூசல்கள் வெடித்தன. பல்வேறு வகுப்புகளுக்கிடையே மோதஙல்கள் துவங்கின. பிராமணர் பிராமணர் அல்லாதார் மோதல் அப்பட்டமாகத் தெரிய வந்தது. ஒருங்கிணைந்த அல்லது ஐக்கியப்பட்ட அமைப்பு எதுவுமில்லை, ஒத்துழையாமை இயக்கம் என்கிற பாலை வார்த்து வளர்க்கப்பட்ட நச்சுப்பாம்புகள் தமது நம் நச்சுக் காற்றை ஊதி தேசத்தில் கலகங்களை மூட்டுகின்றன. – (சி.பி.பிஷிகார் எழுதிய, கேசவ்: சங்கத்தின் நிறுவனர்)

ஹெட்கேவாரின் மேற்கண்ட உரையை எழுதி பின்வருமாறு அதற்கு விளக்கம் தருகிறது ஆர்.எஸ்.எஸ்.இன் அதிகாரபூர்வ வரலாற்று நூல்,

 “நாடு முழுவதும் ஒரு மாற்றம் வந்து கொண்டிருந்தது. 1921 இயக்கத்துக்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் டாக்டர்ஜி ஹெட்கேவாருக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தின. துருக்கியில் கிளாபத் இயக்கம் கைவிடப்பட்டதும் இந்திய தேசிய சுதந்திரத்துக்கான கூட்டு இயக்கத்தில் இருந்து. இந்திய முஸ்லீம்கள் விலகிக் கொண்டதன் மூலம் அவர்கள் தாம் முதலாவதாக முஸ்னீம்கள், இரண்டாவதாக மட்டுமே இந்தியர்கள் என்று நிரூபித்தார்கள். சூழ்நிலை மொத்தமும் முஸ்லீம் வெறியினால் சூடேற்றப்பட்டது. ”அல்லாஹு அக்பர்’ என்கிற கோஷமே எங்கெங்கும் கேட்டதே தவிர ‘பாரத மாதா கி ஜே” அல்ல. உடனடியாகவே பன்னு, கேஹாப் மல்டான், நாகபுரி, கான்பூர் மற்றும் பல இடங்களிலும் முஸ்லீம் கலவரங்கள் வெடித்தன.  ”இவை இந்து முஸ்மீம் கலவரங்கள்தாம்; ஏனெனில் ஒவ்வொன்றும் முஸ்லீம்களால் துவக்கப்பட்டது. அவர்கள்தான் தாக்குதல் தன்மையுடன் இருந்தார்கள்” இந்தக் கவவரங்கள் மாப்ளா அட்டுழியமாக மாறி கொலை. கொள்ளை, சூறையாடுதல், கற்பழிப்பு, கட்டாய மதமாற்றமாக முடிந்தன. தேசமே அதிர்ச்சிக்குள்ளானது இது (ஒழுங்கை நிவைதாட்டும்) கிளாபத்தா? அல்லது (அனைவருக்கும் அழிவை விளைவிக்கும்) அகிளாபத்தா’ என்று டாக்டர்ஜி வியந்தார். பாரதத்தில் இத்துக்களே தேசம். இந்துத்துவமே நாட்டு-அரசு சித்தாந்தமாக இருக்க முடியும் என்பது நிருபணமானது. தேசிய அரசியல் கட்டுமானத்தின் மீது எழுதப்பட்டுள்ள விதியைக் காண்பதற்கு கற்பனாவாதிகள் மறுத்து நாடகமாடிய அதேசமயம் யதார்த்தவாதியான டாக்டர்ஜி ஹெட்கேவார் பகற்கனவுகளில் மூழ்கிப்போக மறுத்தார். உண்மை வெளியில் வந்தது. இந்துஸ்தானத்தை இந்துக்கள் மட்டுமே விடுவிக்க முடியும்; இந்துக் கலாச்சாரத்தை அவர்கள் மட்டுமே காத்திட முடியும். இந்துத்துவம் மட்டுமே நாட்டைக் காத்திட முடியும். இந்த உண்மையின் தர்க்கத்தில் இருந்து தப்ப வழியே கிடையாது. சொந்த – தனிப்பட்ட ஒழுக்கம் மற்றும் தாய் நாட்டின் மீது முழுப்பற்று ஆகியவற்றைக் கொண்ட இந்து இளைஞர்கள் அமைப்பாக்கப்பட வேண்டும். வேறு வழியே கிடையாது.

சிவாஜி; ஆர்.எஸ்.எஸ். வெறியர்களின் வீரநாயகன்!

மகாத்மா (ஹெட்வோர்)வின் மனவேதனைதான் ராஷ்ட்ரிய சுவயம் சேவாக் சங்கை நிறுவுவதாக வெளிப்பட்டது. ஐந்து நண்பர்களோடு ஆர்.எஸ்.எஸ். இன் அன்றான திட்டத்தை அவர் தொடங்கினார். 1925 விஜய தசமி சுபதினமே அந்த மாபெரும் நாள்” (பிஷிகார் பக்.25)

காங்கிரசின் சவசவத்துப்போன ஒத்துழையாமை இயக்கத்தை போர்க்குணமிக்க பேரெழுச்சியாக மாற்றியதே கிளாபத் இயக்கத்தினர் நுழைந்ததுதான். அது பிரிட் டிஷ் ஏகாதிபத்தியத்தைக் கடுமையாக எதிர்த்ததற்காக ஒருபுறம் நச்சுப் பாம்புகள் தலை துக்குவதாகச் சாடுகிறார் ஹெட்கேவார். பின்னர் அதே இயக்கத்தில் இருந்து இசுலாமியர்கள் விலகிக் கொண்டதாகக் கூறி துரோகப்பட்டம் கட்டுகிறார். உண்மை என்னவென்றால் ஒத்துழையாமை இயக்கம் வன்முறையுடன் கூடிய பேரெழுச்சியாக வெடித்துக் காலனிய ஆட்சிக்கே ஆபத்தாக வளர்ந்துவிட்டதைக் கண்டஞ்சி காந்திதான் போராட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தாரே தவிர, கிளாபத் இயக்கத்தினர் அதிலிருந்து பின்வாங்கவில்லை.

முஸ்லீம் கலவரங்களின் விளைவாக வெடித்ததுதான் “மாப்ளா அட்டூழியம்” என்று ஆர்.எல்.எஸ் வரலாற்றுப் புரட்டு செய்கிறது. உண்மையில் அது கிளாபத் இயக்கத்தை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயே காலனியவாதிகள் கேரள பார்ப்பன நம்பூதிரி ஜென்மிகள் – நிலப்பிரபுக்களுடன் கூட்டுச் சேர்ந்தபோது எழுந்த “மாப்ளா உழவர்களின் பேரெழுச்சி”யாக 1921-இல் வெடித்தது. அதற்குப் பல ஆண்டுகள் பின்னர் நடந்த இந்து – முஸ்லீம் கலவரங்களைக் கூடப் பட்டியலிட்டு மாப்ளா கலகத்துக்கு காரணமானவை என்று புளுகுகிறது ஆர். எஸ்.எஸ்.

ஹெட்கேவார் மூளையில் உதித்த ஒரு “அற்புத” திட்டத்தினால் நண்பர்களுடன் சேர்ந்து உருவானதுமல்ல. ஆர் எஸ் எஸ். 1923 நாகபுரி கலவரத்துக்குத் தலைமையேற்ற நாகபுரி இந்து மகா சபையின் “தொண்டர் படைகளான “இந்து சுவயம் சேவாக் சங்“ மற்றும் “இந்து சம்ரக்சன் சங்” ஆகியவற்றின் தளபதிகளுடன் சேர்ந்து துவங்கப்பட்டது.

1925 விஜயதசமி அன்று நாகபுரியில் கூடிய ஐந்து இந்து மதவெறி பாசிஸ்டுகள் ஐவரும் வசதிபடைத்த மேட்டுக்குடி பார்ப்பனர்கள் — “படித்த மேல்சாதி இந்துக்கள் தமது பாதுகாப்புக்கு கீழ்சாதி இந்துக்களைச் சார்ந்து நிற்பது சரியல்ல குறிப்பாக பார்ப்பனர்’ -பார்ப்பனரல்லாதார் மோதல்கள் அதிகரித்துவரும் இந்தச் சமயங்களில் கீழ்சாதி இந்துக்களை நம்ப முடியாது; எனவே அவர்களைச் சார்ந்து நிற்பதைக் கைவிட்டு நாமே தாக்குதல்கள் நடத்து வதற்கான பயிற்சி பெற வேண்டும்” என்று தீர்மானித்தனர். முக்கியமாக இசுவாமியர் கள் மற்றும் கீழ்சாதி இந்துக்களால் தாக்கப்படுவோம் என்கிற பயபீதியைக் கிளப்பி நடுத்தர வர்க்க பார்ப்பன – பனியா இளைஞர்களைத் திரட்டுவதையே இன்னமும் ஆர்.எஸ்.எஸ்.தனது உத்தியாகக் கொண்டிருப்பதே அதன் நிறுவனர்களின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.

“ஒவ்வொரு நாளும் 15 நிமிடம் கூட்டு வழிபாடு நடத்துங்கள்: இந்து சமூகம் வெல்ல முடியாததாகிவிடும்” என்று விவேகானந்தரின் பெண் சீடர் நிவேதிதா போதித்தார். இதையே தமது சடங்கு வழிபாடு மற்றும் உடற்பயிற்சியுடன் கூடிய அமைப்புத் திட்டத்தின் வேத வாக்காகக் கொண்டார் ஹெட்கேவார். சர்வோதயம் குறித்த நேர வழிபாடு, சடங்கு ஆகியவை மூலம் ஆன்மீக சக்தி பெறுவது என்பது கண்ணுக்குப் புவப்படாத சக்தியை மதவழிபாடு முலம் அடைவது என்கிற கண்ணோட்டத்தைக் கொண்டு வகுக்கப்பட்டது.

அதேபோல அமைப்புக்கான ஆள் சேர்ப்பும். பயிற்சியும் சடங்கு மற்றும் குரு குல அடிப்படையிலானது. வளர்ச்சியடைந்த மனிதர்கள் பல்வேறு சிந்தனையும் குடும்பப் பொறுப்புகளில் சிக்கியவர்களாகவும் இருப்பார்கள் என்பதால் விடலைப் பருவத்தினரைத்ை தெரிவு செய்வதில் கவனம் செய்வது என்று ஹெட்கேவார் கும்பல் முடிவு செய்தது. துணிச்சலான அதிரடித் தாக்குதல்களில் அவர்களைத்தான் நம்பி விட முடியும்; மத குருமார்கள் மற்றும் பயங்கரவாதிகள் பின் பற்றிய அதே உடற்பயிற்சியோடு இந்து ஆரிய மகிமைகளையும் அவர்களுக்கு ஊட்டி வளர்ப்பது என்றும் தீர்மானித்தார்.

பயிற்சிப் பொறுப்பேற்ற ஹெட்கேவர் 2 முதல் 15 வயது வரையிலான பார்ப்பன பனியா பள்ளிச் சிறுவர்களைக் குழு ஒன்றை உருவாக்கினார். உணர்ச்சிபூர்வமான, பாசமுடைய, கேள்விகிடமற்ற விசுவாசிகளாக, குருபக்திமிக்கவராக அவர்களை வளர்க்கத் திட்டமிட்டார் ஆரம்பத்தில் பெயரோ, தகுதியோ, அதிகாரபூர்வ சடங்கோ, பதவிப் பொறுப்புகளோ கிடையாது. உடற்பயிற்சியோடு முஸ்லீம்களை எதிர்த்துப் போரிட்ட இந்து நாயகர்கள் சிவாஜி,  ரானா பிரதாப் போன்றவர்களின் கதைகள் போதிக்கப்பட்டன. 1925 ராமதவமி அன்று ஆர்.எஸ். என்ற பெயரும் முன்பு ராமனாலும், சிவாஜியாலும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காவிக் கொடியும், மாரத்தி கலந்த ஒரு வழிபாட்டுப் பாட்டும் தெரிவு செய்யப்பட்டன. அப்பாட்டோடு “தேசிய குரு சமார்த் ராமதாசுக்கு ஜே”பாரத மாதாவுக்கு ஜே” என்கிற முழக்கங்களும் முழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது; சிவாஜி, அவரது குரு ராமதாஸ், அவரது கொடி முதலியவற்றுக்கு ஆர்.எஸ்.எஸ் சடங்கில் முக்கியத்துவமளிப்பதன் மூலம் ஒரு சக்தி வாய்ந்த மராத்திய சாயம் பூசப்பட்டது. 1927 இல் முதன்முறையாக ஒரு 20 ஆர்.எஸ்.எஸ் குண்டர்களுக்கான பயிற்சி நடத்தப்பட்டது கம்பு, வாள், ஈட்டி முதலிய ஆயுதங்களில் பயிற்சி தரப்பட்டது. இந்த ஆயுதங்கள் எதுவும் இராணுவத்தையோ, போலீசையோ எதிர்த்துப் போரிடப் போதுமானது அல்ல. அதே சமயம் தமது சக இந்திய நாட்டினரை எதிர்த்துத் தெருச்சண்டை கலவரங்களை நடத்துவதற்கானவை என்பது குறிப்பிடத்தகுந்தது. அக்குண்டர்கள் கபாடி போன்ற உள்ளூர் விளையாட்டுக்களில் ஈடுபடுத்தப்பட்டனர், இந்து தேசியம்,இந்து அல்லாதவர்களின் விசுவாசமின்மை, காந்தியிசத்தின் கையாலாகாத் தன்மை, இந்துக்களின் கடந்தகால வீரதீர சாகசம் பற்றி சொற்பொழிவுகள் நடத்தினர். அமைப்பு ரீதியில் திரளாதது, தாராள சிந்தனை, அமைதி வழி ஆகியவை இந்துக்களின் துயரங்களுக்குக் காரணம் இந்துக்கள் போர்குணமிக்க. பலம் வாய்ந்த சக்தியாக வளர வேண்டும்: அதற்காகத் தான் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பு தேவை என்பன திரும்பத் திரும்ப போதிக்கப்பட்டன. அந்த ஆண்டு மீண்டும் காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன.

 

 

சைமன் கமிசன் எதிர்ப்பு, மாணவர்-இளைஞர் மற்றும் தொழிலாளர்களின் எழுச்சி ஆகியவற்றை நாடு கண்டது. இவை எதிலும் ஆர்.எஸ்.எஸ் கலந்து கொள்ளவில்லை. மாறாக 1927 செப்டம்பரில் நாகபுரியில் “முஸ்மீம்களின் தாக்குதல் சதியை இந்து இளைஞர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர், தக்க பதிலடி கொடுத்தனர்; இந்து சமூகத்தின் ஒற்றுமையும் போர்க்குணமும் சுயநம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது” என்று ஆர்.எஸ்.எஸ். நடத்திய முதல் மத வெறிக் கலவரம் பற்றி அதன் வரலாறு பீற்றிக் கொள்கிறது.

அந்த “வெற்றியை” உறுதிப்படுத்திய ஹெட்கேவார் நாகபுரியைச் சுற்றி மட்டு மல்ல, வேறு மாநிலங்களிலும் ஆர்.எஸ் எஸ். அமைப்பின் கிளைகளைப் பரப்பத் துவங்கினார். அமைப்புக்கும், இந்து தேசியத்துக்கும் உயிரையே தியாகம் செய்வதாக உறுதிமொழி எடுக்கும் வழக்கத்தையும் புகுத்தினர். வல்லபாய் படேல் போன்ற காங்கிரசில் இருந்த இந்து வெறியர்கள் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களுக்கு அழைக்கப்பட்டனர். காசி இந்துப் பல்கலைக் கழகத்துக்கு போய்ஆர்.எஸ்.எஸ் கிளைகளை நிருவுவதற்கு நாகபுரியில் இருந்து மூன்று “சுவயம் சேவகர்கள்” அனுப்பப்பட்டனர்.பணக்காரர்கள் பலர் நிதியும், இன்னொரு காங்கிரசு இந்து வெறியர்மதன் மோகன் மாளவியா இட வசதியும் தந்து ஊக்குவித்தனர்.

நாட்டின் பிற பகுதிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பரவத் தொடங்கியதை அடுத்து, வெவ்வேறு மட்டத் தலைமைப் பிரச்சினை எழுந்தது. அதற்கு உடற்பயிற்சி திட்டத்தை வகுத்தளித்த அண்ணா கோஹனி அமைப்பில் இருந்தே விலகினார். அதன் பிறகு 1929 நவம்பரில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் கூடி அமைப்பு முறை பற்றி முடிவு செய்தனர்.இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் வாழ்க் கை முறைக்குப் பொருந்தமாக அதி உயர் இயக்குநர் (சர் சங் சலக்} ஒருவர் ஆயுள் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். அவருக்கு பின்னர், அடுத்த தலைவர் வாரிசு முறைப் படி நியமிக்கப்படுவாரே தவிர தேர்ந்தெடுக்கப்பட மாட்டார். ஜனநாயக முறைக்கு மாறாக முற்றிலும் மத்தியத்துவமாக்கப்பட்ட சர்வாதிகார முறையைத் தெரிவு செய்து கொண்டதற்குக் காரணமே இராணுவ மற்றும் மத குருபீட அடிப்படையிலான நிறுவனமாகக் காட்டும் நோக்கம்தான்.

1929 டிசம்பரில் லாகூர் காங்கிரசு “பூரண சுதந்திரத்” தீர்மானம் நிறைவேற்றிய போது, ”நமது இலட்சியத்தை காங்கிரசு ஏற்றுக் கொண்டு விட்டது” என்று ஆர்.எஸ்.எஸ் பீற்றிக் கொண்டது. ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு காங்கிரசு துவக்கிய சட்டமறுப்பு, உப்பு சத்தியாகிர கங்களில் கலந்து கொள்ள மறுத்தது. அதே சமயம் ”இராணுவ” வலிமை திரட்டிய ஆர்.எஸ்.எஸ், தானாகவும் காலனிய எதிர்ப்புப் போராட்டம் எதையும் நடத்த வில்லை. அது தனது பலம் முழுவதையும் இசுலாமிய எதிப்புப் போருக்காகக் காத்து வந்தது. சட்ட மறுப்பு இயக்கம் தோல்வியடைந்ததைப் பயன்படுத்தி காங்கிரசு தொண்டர்களை ஈர்த்து ஆர்.எஸ்.எஸ்-ஐ விரிவுபடுத்தியது. அதன் மீதும், இந்து மகா சபா வின் மீதும் காங்கிரசு சந்தேகம் கொண்ட தைத் தொடர்ந்து தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் சமரசம் செய்து வைக்க முயன்றார். இருப்பினும் தமக்குப் போட்டி அமைப்புகளாக காங்கிரசு கருதிய ஆர்.எஸ்.எஸ்., இந்து மகா சபா. முஸ்லீம் லீக் ஆகியவற்றில் சேருவதற்கு காங்கிரசாரைத் தடை செய்தது

ஹெட்கேவாருடன் மராட்டியம் முழுவதும் சுற்றி ஆர்.எஸ்.எஸ்.-ஐ உருவாக் கிய நாதுராம் கோட்சே, கலாச்சார, சித்தாந்த வேலைகள் மட்டும் போதாது, தீவிர அரசியல் ஈடுபாடும் வேண்டும் எனக் கோரி அதிலிருந்து விலகி இந்து மகா சபாவில் இணைந்தார். இவர்தான் பின்னாளில் காந்தியைச் சுட்டுக் கொன்றவர். மராட்டியத்தில் அதிக அளவு பரவியிருந்த ஆர் .எஸ்.பிறகு ‘ஆரிய சமாஜ”த்துடன் கூடிக் குலாவி இந்தி பேசும் மாநிலங்களிலும் பரவியது. இதற்கு “ஆரிய சமாஜ” த்தின் கல்வி சாலைகள் பெரிதும் உதவின.

1940-இல் ஹெட்கேவார் இறந்து போய் கோல்வால்கர் ஆர்.எஸ்.எல் குருவானார். அதற்குள்ளாகவே தமிழ்நாடு, காஷ்மீர் உட்பட நாடு முழுவதும் 400 மையங்களில் ஒரு லட்சம் பேரைக் கொண்ட அமைப்பாக அது வளர்ந்து விட்டது. சாவார்கரும் ஹெட்கேவாரும் ஊன்றி விட்டுப்போன அந்த நச்சுச் செடியை பெரும் இந்து மதவெறி நச்சு மரமாகவே வளர்த்தெடுத்தார் கோல்வால்கர். நாட்டுப் பிரிவினையையொட்டி மதவெறிப் படு கொலை நடத்தி நாலுகால் பாய்ச்சலில் வளர்வதற்கான சாதக நிலைமையோடு காந்தி கொலையைத் தொடர்ந்து நெருக்கடியான நிலைமையிலும் ஆர்.எஸ் எஸ்-ஐ கோல்வால்கர் எப்படிக் காத்து வளர்த்தார் என்பதைப் பிறகு பார்ப்போம்,

தொடரும்…

நன்றி: புதிய ஜனநாயகம் 1993 ஜூன்1-15

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன