20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயத்தால் பலி!
ஊழல் போலிசு அதிகாரிகளை தூக்கில் போடு!

 

மக்கள் அதிகாரம் – கண்டனம்

20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயத்தால் பலி! 
ஊழல் போலிசு அதிகாரிகளை தூக்கில் போடு! 
டாஸ்மாக் கடைகளை மூடு! போதையிலிருந்து மக்களை மீட்டெடு!

16.05.2023.

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 20 க்கும் மேற்பட்டோர் பலி! இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மரணங்கள் அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் வெளிக்கொண்டுவருகின்றன.
டாஸ்மாக் கடைகளை திறக்கும்போதெல்லாம் இதை நியாயப்படுத்த ‘‘கள்ளச்சாராயம் பெருகிவிடும்’’ என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் கதை அளக்கிறார்கள். இது பொய் என்பதை இந்த கள்ளச்சாராய மரணங்கள் வெளிக்கொண்டுவந்துள்ளது. ஏழைகளின் உயிர் பறிக்கப்பட்ட பின்னர்தான் நாட்டில் உண்மைகள் வெளிவருகின்றன. இதற்காக இன்னும் எத்தனை ஏழைகள் தங்களின் உயிர்களை விட வேண்டும் என்று தெரியவில்லை.
கள்ளசாராயம், ‘நல்ல’ சாராயம் என்று வேறுபடுத்தி பார்க்கப்படுகிறது. மக்களை போதைக்கு அடிமையாக்கி அதன் மூலம் வருமானம் பார்ப்பது கேவலம் இல்லையா? வருமானத்தை திரட்டுவதற்கு அரசுகளுக்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கும்போது ஏழைகளின் தாலியை ஏன் அறுக்கவேண்டும்? மக்களை ஏன் மது போதையில் ஆழ்த்த வேண்டும்? இதுதான் இந்த மரணங்களுக்கு காரணம்? டாஸ்மாக்கை மூடு என்பதுதான் விஷச்சாரயத்திற்கு கணவனை இழந்த மனைவி மக்களின் கோரிக்கை. இதுதான் தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கோரிக்கை. இது மக்கள் விரோத அரசுகளுக்கு உறைப்பதில்லை.
திராவிட மாடல் என்று பீற்றிக்கொண்டு பேசிவருவதன் முகத்திரையை ஓர் நொடியில் கிழித்துதொங்கவிட்டுவிட்டது இந்த ஏழைகளின் மரணங்கள். எல்லா அரசுகளும் ஒடுக்குமுறை அரசுகளே. மக்களை தார்மீக ரீதியில் அடிமைபடுத்தினால் தான் இவர்கள் ஆட்சி செய்யமுடியும். அதைத்தான் திமுக அரசும் செய்துவருகிறது. பாஜகவிற்கு மத போதை என்றால் திமுகவிற்கு மது போதை. இத்தனைக்கும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது டாஸ்மாக்கிற்கு எதிராக குரல்கொடுத்தார். மக்களை முட்டாளாக்க இதை விட என்ன சான்று வேண்டும்.
மேலும் மேலும் டாஸ்மாக் மதுபானத்தை விற்க திருமண மண்டபம், விளையாட்டு அரங்கங்கள் என்று திமுக அரசின் மது போதை நீள்கிறது. ஊருக்கு ஊரு சாராயம் என்றிருந்த நிலை மாறி இன்று தெருவுக்கு தெரு சந்துகடை சாராயம் கொடிகட்டி பறக்கிறது.
எமது தோழர்கள் மீது போடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நடத்திய போராட்ட வழக்குகள் இன்றும் நடந்துவருகின்றன. இன்றும் நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்துகொண்டிருக்கிறோம். போராட வேண்டிய அவசியம் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் பாசிசம் தடுக்கப்படும் என்று திமுக ஆட்சியை பலர் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த ஆட்சி நமக்கு பாடை கட்டிக்கொண்டு இருக்கிறது.
ஊழல் அரசமைப்பை கட்டி மாரடித்துகொண்டு எந்த போதை பொருளையோ, மதுவையோ ஒழிக்க முடியாது. மக்களின் எந்த பிரச்சினையும் தீராது.
ஆகவே, திமுக மீதான மாயையை உதறி எறிந்துவிட்டு டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை கட்டியமைப்போம். இப்போராட்டம்தான் மதவெறிக்கு எதிராக மட்டுமல்ல, பாசிசத்திற்கும் பாடை கட்டும்.
இப்படிக்கு
முத்துக்குமார்
மாநில செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
97901 38614

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன