மாடுகளே ஜாக்கிரதை! ஆர்எஸ்எஸ் காரன் வர்றான்!

மாட்டு மூத்திரத்தைக் குடித்துக் கொண்டிருப்பதிலிருந்து மாட்டுக்கு முத்தம் தரும் பதவி உயர்வு கிடைத்திருப்பதால் சங்கிகள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும் அரசு சுற்றறிக்கையில் பொதுவாக மாடு என்று குறிப்பிட்டுள்ளதால் எருமையைக் கட்டிப் பிடிப்பதா அல்லது பசுவைக் கட்டிப்பிடிப்பதா என்ற குழப்பம் சங்கிகளிடம் நீடிப்பதாகவும் அதே வேளையில் மோடியின் அறிவிப்பைக் கேட்டு மாடுகள் பீதியில் இருப்பதாகவும் என்ன செய்வதென்றுத் தெரியாமல் தடுமாறிகொண்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த பசு பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பு: சமூக வலைதளங்களில் எழுந்த கடும் எதிர்ப்பால், மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, பசு அரவணைப்பு தின அறிவிப்பை, இந்திய விலங்குகள் நல வாரியம் 10.02.2023 அன்று திரும்பப் பெற்றுள்ளது.

காதலர் தினம் (பிப்ரவரி 14) வந்தாலே காவி-காளிகளுக்கு கை அரிக்க ஆரம்பித்துவிடும். பூங்காக்களில் பேசிக் கொண்டிருக்கும் ஆண்-பெண் க்கு திருமணம் செய்து வைப்பது, இளைஞர்கள் நிறைந்திருக்கும் உணவு விடுதிக்குள் சென்று பெண்களிடம் வம்பிழுப்பது, கழுதைக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற அளப்பரிய சமூக சேவைகளைச் செய்ய ஆயத்தமாகிவிடுவர். ஆனால் இந்த வருடமோ தங்களது சமூகக் கடமையை ஆற்றவிடாது தனது சாகாக்களின் கைகளை கட்டி போட்டுவிட்டார் இந்து ஹிருதய சாம்ராட்டான அதானி புகழ் மோடி.  

 

 

கொஞ்சம் பொறுங்கள்! காதலர்களிடம் வம்பிழுப்பதற்கு பதிலாக பசுக்களிடம் வம்பிழுக்க (பசுக்களை கடியணைக்க) வழிகாட்டியிருக்கிறார் பசுபாதுகாவலரான திருவாளர் மோடி அவ்வளவுதான். செய்தி அறிவிப்பு வந்த உடனே சங்கிகள் புல்லுக்கட்டை நோக்கி படையெடுத்திருப்பதாகவும் இதனால் புல்லுகட்டுக்கு அதிக கிராக்கியும் ரோஜாவின் விற்பனை சரிய வாய்ப்பிருப்பதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மருத்துவமனைகளில் எலும்பு முறிவு சிகிச்சைக்கான முன்பதிவுகள் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாட்டு மூத்திரத்தை குடித்துக் கொண்டிருப்பதிலிருந்து மாட்டுக்கு முத்தம் தரும் பதவி உயர்வு கிடைத்திருப்பதால் சங்கிகள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும் அரசு தனது சுற்றறிக்கையில் பொதுவாக மாடு என்று குறிப்பிட்டுள்ளதால் எருமையைக் கட்டிப் பிடிப்பதா அல்லது பசுவைக் கட்டிப் பிடிப்பதா என்ற குழப்பம் சங்கிகளிடம் நீடிப்பதால் இது குறித்து இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும் நமது அரசியல் பிரிவு செய்தியாளர் தெரிவித்துள்ளார். என்ன இருந்தாலும் அவர்கள் தேவபாசை பேசுபவர்களாயிற்றே எருமைகளிடம் வருவார்களா என்ன? வாய்ப்புக் குறைவுதான். இருந்தாலும் மோடியின் அறிவிப்பைக் கேட்டு மாடுகள் பீதியில் இருப்பதாகவும் என்ன செய்வதென்றுத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த பசு பாதுகாப்பு ஆர்வளர்கள் கூறியுள்ளனர்.

மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்திய விலங்கள் நலவாரியம் இரு நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள சுற்றரிக்கையில்,  பிப்ரவரி 14 ம் தேதியை “மாடு அணைப்பு தினம்” அதாவது மாடுகளை கட்டியணைக்கும் நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளது. அதற்கு அதற்கு எதிர்வினையாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகளிகளின் அடிப்படையிலேயே மேலே உள்ளவை எழுதப்பட்டது.

மாடு அணைப்பு தினம் ஏன் கொண்டாட வேண்டும் என்பதற்கு காரணமாக தன்னுடைய சுற்றரிக்கையில் “மேற்கத்திய கலாச்சாரத்தின் முன்னேற்றம் காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய நாகரீகத்தின் தாக்கத்தினால் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டது” என்று அமைச்சகம் கூறியுள்ளது. 

பிரிட்டீஷார் இந்தியாவை காலனிப்படுத்திய காலத்திலிருந்து இன்று வரை மேற்கத்திய  நாடுகளுக்கு சொம்பு தூக்கியும் இடைத்தரகர் வேலைகள் செய்தும் High Net-worth Individual (அதிக சொத்துள்ள நபர்கள்)  ஆகவும் அந்நாடுகளிலேயே குடியுரிமை பெற்றும் வாழ்பவர்களில்   பெரும்பான்மையினராக, வேதத்திற்கு நாங்கள் தான் அத்தாரிட்டி எனக் கூறிகொள்ளும் பார்ப்பனர்களே உள்ளனர். பசுவின் கறியில் எந்தப் பகுதி சுவைமிகுந்தது எனக் கண்டறிந்து அதனை மட்டுமே பிச்சையாகப் பெற்று வயிறு புடைக்க பார்ப்பனர்கள் தின்றார்கள் என்பதை வேதங்களிலிருந்தே பல அறிஞர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். ஆனால் நம்மிடம் வந்து வேதக் கலாச்சாரம், கோமாதா என்று கதையளக்கின்றனர். தாங்கள் பேசுவது படு பைத்தியக்காரத்தனமானது என்று பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு தெரியாமல் இல்லை. குஜராத் படுகொலையை ஒட்டி பிபிசி வெளியிட்ட ஆவணப்படச் சர்ச்சை, அதானியின் பங்குச் சந்தை முறைகேடு இவைகளை ஒட்டி நாடாளுமன்ற அமலிகள் ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசைத்திருப்பவே இந்தக் கோமாளித்தனத்தை மோடி-அமித் ஷா கும்பல் கிளப்பி விட்டிருக்கிறது.

ஹரியானா மாநிலத்தின் முதல்வரான மனோகர் லால் கட்டார் என்ற சங்கி, மாவட்டங்கள் தோறும் பசுக்களுக்கு மருத்துவமனை கட்டவேண்டும் எனவும் அதில் ஒரே நேரத்தில் 50 பசுக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பாதிப்புகளின் போது தேவையான சிகிச்சைகள் கிடைக்காமல் பல லட்சம் மக்கள் இறந்து போயினர். ஆனாலும் பொது மருத்துவத்திற்காக தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை. மனிதர்களை விட இவர்களுக்கு மாடுகளின் மீது காதல் அதிகம் போல காட்டிக் கொள்கின்றனர். காவி பாசிஸ்ட்டுகளுக்கு பசுக்களின் மீது காதல் கொப்பளிப்பது இயல்பானதுதானே அது இந்து-முஸ்லீம் மத முனைவாக்கத்திற்கான செயலூக்கமிக்க குறியீடு அல்லவா!

 

 

சமீபத்தில் வட இந்தியாவில் பரவிய லும்பி தொழு நோயினால் பல லட்சம் மாடுகள் இறந்துபோயின. ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான மாடுகள் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றன. தெரு மாடுகள் (Stray cattle) பயிர்களை நாசப்படுத்துவதால் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் இழப்புகள் ஏற்படுவதாகவும் தெரு மாடுகளைப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என உத்திரபிரதேச விவசாயிகள் கோருகின்றனர். ஆனால், மோடியோ, ஆதித்தியநாத்தோ அல்லது வேறுபல சங்கி முதலமைச்சர்களோ இவற்றை தடுப்பதற்காக சீரிய நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கவில்லை. காவி பாசிஸ்ட்டுகளை பொருத்தவரை மனிதர்களோ அல்லது பசுக்களோ தங்களது பார்ப்பனிய மேலாதிக்கம் மற்றும் கார்ப்பரேட் நலனுக்கான கருவிகள்தான் என்பதில் தெளிவாக உள்ளனர். மற்றபடி அவர்கள் பேசுவதெல்லாம் மக்களையும், பசுக்களையும் ஏமாற்றுவதற்கான வெற்று வாய்ச் சவடால்கள் தான்.

அழகு 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன