பட்ஜெட் 2022-23: சமூக-பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதியை கணிசமான அளவு குறைத்துள்ள மோடி அரசு!

நூறு நாள் வேலைத் திட்டம் (MGNREGA), சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்கள் மற்றும் மகப்பேறு நலன் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தையும் கூட்டினால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில், கடந்த பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதியைவிட மிகக் குறைந்த அளவு நிதியையே தற்போதைய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

திருவள்ளுவர் வழியில் மோடி இந்தியாவை ஆட்சி செய்வதாகவும் ஏழைகள் பழங்குடியினர் என அனைத்து சமூகத்தினரின் கனவுகளையும் அரசு நனவாக்கி வருவதாகவும் அரசுத் தலைவர் முர்மு சமீபத்திய பட்ஜெட் உரையில் பேசியுள்ளார். பத்தாவது படிக்கும் மாணவர்களுக்குக் கூடத் தெரியும் முர்மு பேசியது வடிகட்டியப் பொய்யென்று. திமுக அரசின் சட்டமன்ற உரையில் விவரப் பிழையிருப்பதாக கூச்சல் எழுப்பிய வானரக் கூட்டங்கள் தற்போது முர்மு பேசியது  உலகமகா உருட்டு என்று தெரிந்தும் வாலைச் சுருட்டிக் கொண்டு இந்தியா வளர்கிறது என்று கோஷ்டிகானம் பாடுகின்றனர்.

பட்ஜெட் மக்களுக்கானது என்பதை தங்களது எம்.பி. களுக்கே விளக்குவதற்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பொருளாதாரப் புலி நிர்மலாவைக் கொண்டு ஒரு வகுப்பை பாஜக ஏற்பாடு செய்திருக்கிறதாம். என்ன செய்ய ஏதாவது சொல்லி மக்களை நம்பவைக்க வேண்டுமே! 

 

 

இது 2024 தேர்தலுக்கு முந்தைய மோடியின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் பரவலான எதிர்பார்ப்புகள் பட்ஜெட்டை ஒட்டி இருந்தது. பட்ஜெட்டை ஆதரித்து பரவலாக பத்திரிக்கைகளில் செய்தி வந்தாலும் பட்ஜெட் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள  நிதி ஒதுக்கீடுகளிலிருந்து பார்க்கும் போது இது பெரும்பான்மை மக்களுக்கு நன்மை பயக்காத பட்ஜெட் என்று கூறலாம். 2023-24 பட்ஜெட்டில் சமூக-பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதி கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக நூறு நாள் வேலைத் திட்டம் (MGNREGA), சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்கள் மற்றும் மகப்பேறு நலன் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தையும் கூட்டினால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதியைவிட மிகக் குறைந்த அளவு நிதியே ஒதுக்கியுள்ளது மோடி அரசு. இந்தத் திட்டங்களுக்கான மொத்தச் செலவினை உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கையில் இருபது ஆண்டுகளுக்குப் முன்பு எந்த விகிதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததோ (0.20%) ஏறத்தாழ அதே விகித அளவே (0.36%) தற்போதைய பட்ஜெட்டில் மோடி அரசு ஒதுக்கியுள்ளது.

உதாரணமாக, வேலைவாய்ப்பு உத்தரவாதத்திற்கான மக்கள் நடவடிக்கை (PAEG) கணக்கீட்டின்படி, 2023-24 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில், MGNREGA திட்டத்தில் பதிந்துள்ள அனைவருக்கும், நூறு நாட்கள் வேலைக்காக  2,71,000 கோடியை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால், தற்போதைய பட்ஜெட்டில் MGNREGA-வுக்கு 60,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகை முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட 89,400 கோடியுடன் ஒப்பிடும் போது  (Revised Estimate) 33% குறைவாகும். விவசாயம், மதிய உணவுத் திட்டம், முதியோர் பென்சன் போன்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் இதே கதிதான்.

இந்த பட்ஜெட்டைத்தான் ஏழைகள் மற்றும் பழங்குடியினருக்கான பட்ஜெட் என காவி கும்பல் பிரச்சாரம் செய்து வருகிறது. உண்மையில் இது பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது. 

அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன