மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி!

 

மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி!

நேற்று (19-09-2022)  கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளி குறித்து செய்தி சேகரிக்க சென்ற நக்கீரன் நிருபர் பிரகாஷ் மற்றும் புகைப்பட கலைஞர் அஜித் ஆகியோர் மீது பள்ளி முதலாளி ரவிக்குமார் கும்பல் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளது.

அதிமுக கவுன்சிலர் ராஜசேகர் மூலம் கொலையை மறைக்க பண பேரம் பேசுவது, இதற்கு சோரம் போகாமல் நீதிக்காக போராடும்போது, தற்கொலை கடிதம் என்ற ஒன்றை காவல்துறை மூலம் காட்டி அதை மறைக்க முறயன்றது,  மேலும் இதற்காக நீதி கேட்டு போராடும் போது அவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து போலிசு மூலம் கடுமையான வழக்கில் கைது செய்தது.

இச்சம்பவம் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டுவர முயலும் ஊடகங்களை மிரட்டுவது, மாணவி ஸ்ரீமதி மீதும் அவரது தாயாரையும் இழிவு படுத்தும் வகையில் சவுக்கு சங்கர், கார்த்திக் பிள்ளை ஆகிய பொறுக்கிகளை ஏவிவிடுவது, இதன் மூலம் அக்கொலையை தற்கொலை என்று கதை கட்டுவது என்று செயல்பட்டுவந்த அக்கும்பல் அதிகார போதை தலைக்கேறி இப்போது அது கொலைதான் என்று நிரூபணம் செய்யும் வகையில்  ஊடகவியலாளர்கள் மீது  கொலை வெறித்தாக்குதல் செய்துள்ளது.

ஆர்எஸ்எஸ்- பிஜேபி பின்புலம் உள்ள ரவிக்குமார், சாந்திக்கு பிணை கொடுத்த உயர்நீதி மன்றம், புலன் விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே ‘இது கொலை அல்ல, தற்கொலை’ என்று தீர்ப்பு வழங்கிவிட்டது.

இவ்வாறு பணபலம், அரசியல்- அதிகார பலம் கொண்டவர்கள் எது வேண்டுமானாலும் செய்துவிட்டு தப்பிக்கொள்ள முடியும் என்பதைத்தான் இதற்கு முன் சமூகம் கண்டுள்ளது. இந்த வழக்கிலும் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.

எனவே, ஆர்எஸ்எஸ்- பிஜேபி பின்புலம் கொண்டவர்களுக்கு அரசின் அனைத்து உறுப்புக்களும் ஒருங்கிணைந்து செயல்படும்போது, உழைக்கும் மக்களுக்கு என்று இருப்பது நீதிக்காக போராடும் மன உறுதி மட்டுமே! இந்த போராட்டம்தான் நீதியை வெளிக்கொண்டுவரும். பல வழக்கறிஞர்கள் நீதியை சட்ட ரீதியாக  நிலைநாட்ட நீதி மன்றத்தில் போராடி கொண்டிருக்கும் அதே நேரத்தில் பொதுமக்களாகிய நாம் வீதியில் இறங்கி போராடுவதன் மூலமே நீதியை பெற முடியும்.

இப்படிக்கு
முத்துக்குமார்,
மக்கள் அதிகாரம்,
மாநில செயலாளர்,
97901 38614

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன