சூத்திரர்கள் ஆகமவிதிப்படியிலான கோவில்களில் அர்ச்சகராவதைத் தடுக்கும் – சென்னை உயர் நீதி மன்றத் தீர்ப்பு

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பது குறித்து  2020ல் கொண்டுவரப்பட்ட இந்து சமய நிறுவன ஊழியர்கள் சட்டம் 2020ஐ (Hindu Religious Institutions employees (service condition) Act 2020) எதிர்த்து போடப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளிள்ளது. அத்தீர்ப்பில் இந்து சமய நிறுவன ஊழியர்கள் சட்டம் 2020 செல்லும். ஆனால் அதில் அர்ச்சகர் நியமனம் குறித்து சொல்லப்பட்டுள்ளவைகள் தனிநபர் வழிபாட்டு உரிமைக்கு எதிராக இருப்பதால், அக்குறிப்பிட்ட விதிகளின் உள்ள சமூகநீதி உள்ளடக்கத்தை சிதைத்து, ஆகமவிதிகளை பின்பற்றும் கோவிகளில் ஆகமவிதிகளுக்கு உட்பட்டுத்தான் அர்ச்சகர்களை நியமிக்க முடியும் என்று கூறியுள்ளது.

இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ள காரணம், இந்து சமய நிறுவன ஊழியர்கள் சட்டம் 2020 ல் அர்ச்சகர் நியமனம் குறித்து விதி எண் 7 மற்றும் 9 ல் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகள் படி அரசு நடத்தும் அர்ச்சகர் படிப்பை முடித்து பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கோயில்களில் அர்ச்சர்களாக ஆக முடியும்.

 

 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25 மற்றும் 26 ல் ஒவ்வொருவரும் சுகந்திரமாக சமயநெறி ஓம்புதல் ஒழுகுதல் ஓதிப்பரப்புவதற்கும் சமயம் சார்ந்த காரியங்களை நிர்வகிப்பதற்கும் சுகந்திரம் உண்டு எனக் கூறப்பட்டுள்ளது.

சைவ/வைணவ கோவில்களில் ஆகமவிதிகள் பின்பற்றப்பட்டு வருகிறதாம். அதில் கோயிகளில் மணியடிக்கின்ற உரிமை பார்பனர்களுக்கு மட்டுமே என்று சொல்லப்பட்டுள்ளதாம். உதாரணமாக வைணவக் கோயிகளில் வைஹனச மற்றும் பஞ்சரத்ர என்ற ஆகமங்கள் பின்பற்றப்படுகிறது. வைஹனச சாஸ்திரம் படி ரிகு, அத்ரி, மரிசி மற்றும் கஸ்யப என்ற நான்கு ரிசி பரம்பரையில் வந்த வைஹனச பெற்றொருக்கு பிறந்தவர்கள் மட்டுமே வைஹனச ஆகமங்கள் பின்பற்றப்படுகின்ற வைணவக் கோயிகளில் அர்ச்சகராவதற்கு தகுதியானவர்கள் என்று உச்ச நீதி மன்ற அரசியல் சட்ட அமர்வே கூறியுள்ளது.

ஆகையால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற தமிழக அரசின் வழிகாட்டுதல்கள், இ.அ.ச. 25 & 26 கூறுகின்ற பார்ப்பனர்கள் மணியடிக்கும் உரிமைக்கு எதிராக உள்ளதாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி தீர்ப்பு எழுதியுள்ளார். அதாவது கருவறை தீண்டாமைக்கு ஆகமத்தை முட்டுக்கொடுத்து சட்ட விளக்கத்தைக் கொடுத்துள்ளனர் இந்த நீதியரசர்கள்.     

 

இத்தீர்ப்பின் விளைவாக தமிழ்நாடு அரசு நடத்துகின்ற அர்ச்சகர் பள்ளிகளில் பயிற்சி பெற்ற மாணவர்களை(சூத்திரர்களை), ஆகமங்கள் பின்பற்றுப்படுவதாக சொல்லப்படுகின்ற சைவ/வைணவ கோவில்களில் இனி அர்ச்சகர்களாக பணியமர்த்த முடியாது. அக்கோவில்களில் மணியடிக்கின்ற உரிமை ஆகமங்கள் சொல்லுகின்ற பார்பனர்களுக்கு மட்டுமே உண்டு.  ரோட்டோரங்களில் உள்ள கோவில்களில் அர்ச்சகர் மாணவர்களைப்(சூத்திரர்களை) தமிழக அரசு பணியமர்த்திக் கொள்ளலாம் என்பதே இதன் பொருள்.

கூடவே தமிழகத்தில் எந்தெந்த கோவில்களில் ஆகமங்கள் பின்பற்றப்படுகின்ற என்பதைக் கண்டறிந்து பட்டியல் தயாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட கமிட்டியை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது. இதில் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் வேந்தரான என். கோபால்சாமியை உறுப்பினராக உயர்நீதி மன்றம் முன்மொழிந்துள்ளது. இவர் உலகறிந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர். பள்ளி/கல்லூரிகளின் பாடதிட்டங்களில் வேதம்/சமஸ்கிருதத்தை புகுத்துவது பற்றி மோடி அரசு அமைத்த கமிட்டியின் தலைவர் தான் இந்த கோபால்சாமி. இதிலிருந்தே உயர்நீதி மன்றத்தின் நோக்கம் என்ன என்பதை ஊகிக்கமுடியும்.

இந்து அறநிலையத்துறையை ஒழித்து கோவில்கள் அனைத்தையும் பார்பனர்களின் நேரடி தலைமையின் கீழ் கொண்டுவருவதே சங்கப்பரிவாரங்களின் திட்டம்.  இதற்காக அர்ஜுன் சம்பத் போன்ற ரவுடிகள் தொடங்கி கிராம பூசாரிகள் சங்கம்,  உள்ளூர் கோயில் பிர்ச்சனைகளில் தலையீடுவது அரசு அதிகாரிகள்-நீதிமன்றங்களின் ஆதரவு என பலவகைகளில் ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பல் முயற்சித்து வருகிறது. இன்றோ வெளிப்படையாகவே ஒரு ஆர் எஸ் எஸ் காரர் இந்து அறநிலையத்துறையின் மேல் உட்கார்ந்து கொண்டு அதன் முடிவுகளை தீர்மானிக்கின்ற அளவிற்கு வந்துள்ளனர். இனி தமிழகத்திலுள்ள சொத்துள்ள/ வருமானம் வரக்கூடிய கோயில்கள் அனைத்தும் ஆகம விதிப்படிதான் கட்டப்பட்டுள்ளது என்று கோபால்சாமி அறிக்கை எழுதுவார். அக்கோயில்களில் பிராமணர்களை மட்டுமே அர்ச்சரகராக நியமிக்க உயர்நீதி மன்றம் ஆணையிடும். அதை தமிழக அரசு அமல்படுத்தும்.

சூத்திரர்களுக்கு கோவில் கருவறைக்குள் நுழையவோ  பூஜை செய்யவோ தகுதி கிடையாது என்று வெளிப்படையாக சொல்லுகிறது உயர்நீதிமன்றம். அதை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்பதே நம் முன்னால் உள்ள கேள்வி?

அழகு  

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன