ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – சேலம்

GST வரி உயர்வு உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக 23.8.2022 இன்று சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு 22.08.2022 அன்று இரவு அனுமதி மறுத்து எழுத்து பூர்வமாக தகவல் கொடுத்தது காவல்துறை. அனுமதி எழுத்து பூர்வமாக மறுத்தாலும், நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கொள்ளுங்கள் என வாய்வழி உத்திரவை காவல் ஆய்வாளர் அளித்தார். தமிழகத்தில் ஜனநாயகமாக நடக்கும் போராட்டத்திற்கு தற்போது நிலை இதுதான். அதன்படி திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டத்தை தொடங்கும் போது, முதலில் தப்படிக்க அடிக்க கூடாது நீங்க ஆர்ப்பாட்டத்தில் உரையாற்ற மட்டும் அனுமதி என்றார் பழனிவேலன் இன்ஸ்பெக்டர். மற்றொரு இன்ஸ்பெக்டர் வந்து நீங்கள் நடத்த அனுமதி இல்லை என்று அடாவடியாக மறுத்து பேசி கைது செய்துள்ளனர்.

மண்டல குழு உறுப்பினர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தோழர்.கந்தம்மாள் அவர்கள் காவல் நிலையத்தில் அனுமதி கேட்க சென்றபோது பெட்டிசனை வாங்கி கொண்ட இன்ஸ்பெக்டர் ஒருவாரம் அனுமதி மறுப்பதும், பின்பு நடத்திக் கொள்ளுங்கள் என வாய்வழியாக தெரிவிப்பதும், பின்பு இசை முழுங்க கூடாது என்பதும், பேச மட்டும் அனுமதிப்பதும், பிறகு கைது செய்வதும் என கார்ப்பரேட் சேவை செய்கிறது காவல்துறை, GST வரி உயர்வு பற்றி பேச கூடாது என்கிறது திமுக போலீசு. ஜனநாயக நாடு சுதந்திர நாடு என்று வாய்கிழிய பேசும் திமுக அரசுதான் போலீசை ஏவி காவிக்கும், கார்ப்பரேட்டுக்கும் சேவை செய்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட ம.ஜ.இ.க., மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி, தேசிய மக்கள் உரிமை போன்ற இயக்க தோழர்களும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைத்துள்ளனர்.

தோழர்.ராஜா
மண்டல செயலாளர்
தருமபுரி மண்டலம்
மக்கள் அதிகாரம்.
9790138614

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன