GST வரி உயர்வு: உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு! – கண்டன ஆர்ப்பாட்டம்

GST வரி உயர்வு - மக்கள் அதிகாரம் - கண்டன ஆர்ப்பாட்டம்

GST வரி உயர்வு: உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு! என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ராம்நகரில் 21.08.22 காலை 10.00 மணிக்கு அத்தியாவசிய பொருட்கள் மீதான GST வரியை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.ஜெயராமன் மாவட்டக்குழு உறுப்பினர் தலைமை தாங்கினார். அடுத்து கண்டன உரையாக தமிழ் தேசிய குடியரசு இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர். விக்னேஷ் அவர்கள் பேசுகையில் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் பொழுது ஜிஎஸ்டியை அமல்படுத்த மாட்டேன் என பேசி வந்தது. ஆட்சிக்கு வந்த உடனே எல்லா பொருட்களின் மீதும் வரியை போட்டு கார்ப்பரேட் கொள்ளையை தீவிரப்படுத்தி வருகிறது. அதற்கெதிராக போராட வேண்டும் என மக்கள் அதிகாரம் ஒரு அரசியல் நிலையை உருவாக்கி மக்களுக்காக போராடி வருகிறது. அதற்காக உறுதுணையாக நின்று போராடுவோம் என்று விளக்கிப் பேசினார்.

அதன்பிறகு பேசிய IYF-ன் மாவட்ட தலைவர் தோழர். சொன்னப்பா பேசுகையில் வரிக்கு மேல் வரியை போட்டு மக்களை படாதபாடு படுத்துகிறது பாசிச மோடி அரசு என்ற கோணத்தில் தெலுங்கில் விளக்கி பேசினார்.

 

அதனைத் தொடர்ந்து மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர். கோபிநாத் பேசுகையில் பொதுவாக வரி என்பது ஏற்கனவே போட்டு வந்ததுதான். ஆனால் மக்கள் சேவைக்கே சேவை வரி என புதிதாக இணைத்து அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அரிசி, கோதுமை போன்ற பொருட்களுக்கு வரியை ஏற்றி பகற் கொள்ளையிகிறது மோடி அரசு. இதில் மக்கள் நல அரசு என்று சொல்வதற்கு துளியும் அருகதை இல்லை. எனவே இந்தியாவை ஆளக்கூடிய பாசிச மோடி அரசு என்பது கார்ப்பரேட்-ன் நலன்களுக்காக தொழிலாளர்களுக்கு தொழிலாளர் சட்டங்களை திருத்தி நிரந்தர வேலை என்பதை ஒழித்துவிட்டது. விவசாயிகளின் விவசாய இடுப்பொருளுக்கு GST போட்டதால் விவசாயம் செய்ய முடியவில்லை. நீட் என்ற பெயரில் மாணவர்களுடைய கல்வி உரிமையை பறித்து விட்டது.மொத்த இந்தியாவையும் கார்ப்பரேட்டின் கையில் கொடுத்துவிட்டு மக்களை கேள்வி கேட்க முடியாத அளவிற்கு நீதிமன்றத்தையும் போலீசையும் பலப்படுத்தி மக்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. எனவே மக்கள் எப்போதும் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு வருகிறது. இலங்கை போராட்டம் நமக்கு உணர்த்திய அனுபவம் என்னவென்றால் ஒரு மக்கள் எழுச்சி என்பது ஒரு புரட்சிகர தலைமையின் கீழ் போராட வேண்டுமே ஒழிய அப்படி இல்லாத போராட்டம் மீண்டும் கார்ப்பரேட்டின் கையில் தான் கொண்டு செல்லும். ஆகவே உழைக்கின்ற மக்கள் அனைவரும் மக்கள் அதிகாரத்தின் கீழ் திரள வேண்டிய கட்டாயத்தை அரசு ஏற்படுத்தி உள்ளது. என்ற விஷயத்தை ஆழமாக பதிவு செய்து உரையை நிறைவு செய்தார்.

 

 

இறுதியாக மக்கள் அதிகாரத்தின் தோழர். முருகேசன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். கூட்டத்தில் பெரும்பாலான தோழர்கள் இறுதிவரை நின்று ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்
தோழர்.ஜெயராமன்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர்.
தமிழ்நாடு
9790138614

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன