பொய் வழக்கிலிருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் இங்கு தான் எழுத்துரிமையோ, பேச்சுரிமையோ போராடுகிற உரிமையோ வாசனைக்கு கூட கிடையாது. ஜனநாயக முறைபடி போராடினால் கூட பொய் வழக்கு போடுவது, பிரசுரம் கொடுத்தால் சிறையில் தள்ளுவது என எந்த சட்ட விழுமியங்களையும் போலீசு பின்பற்றுவது கிடையாது, மாறாக அடக்குமுறை கருவியாகவே போலீசு உள்ளது.
நீதிமன்றமோ போலீசு என்ன சொல்கிறதோ அதனை அப்படியே  ஏற்றுக்கொண்டு வேலை செய்கிறது, மாறாக இது சட்ட விரோதம், ஜனநாயக மறுப்பு என்றெல்லாம் பேசுவதில்லை. வழக்கை நடத்துவது என்ற பெயரில் இழுத்தடிப்பது, சொல்லபோனால் போலீசின் பொய் வழக்கிற்கு துணையாக நிற்கிறது என்பதுதான் உண்மை. கடந்த நான்காண்டுகளில் மக்களுடைய பல்வேறு பிரச்சனைகளுக்கு குறிப்பாக டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடங்கி, CAA, NRC, நீட், காவிரி பிரச்சினை போன்ற பல போராட்டங்களுக்கும் தர்மபுரியில் உடனுக்குடனே வினையாற்றி போராடியது மக்கள் அதிகாரம் அமைப்பாகும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், தர்மபுரி போலீசாரால் 30க்கும் மேற்பட்ட பொய் வழக்கு பதியப்பட்டு தற்போதுவரை எதிர்கொண்டு வருகிறோம். அவற்றில் தற்போது இரு வழக்குகளில் தர்மபுரி நீதிமன்றத்தில் பொய் வழக்கு என நிரூபிக்கப்பட்டு 17 தோழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தோழர். பாலசுப்ரமணியன் வழக்கறிஞர், தோழர்.ஆசிய ஜோதி வழக்கறிஞர், தோழர்.பிரசாத் வழக்கறிஞர் ஆகிய தோழர்கள் திறன்பட வழக்காடி பொய் வழக்குகளை உடைத்தெறிந்தனர்.
போலீசாரின் பொய் வழக்கிற்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம். தொடர்ந்து மக்கள் பிரச்சினைக்காகவும், பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் களத்தில் நிற்போம்.
தகவல்
தோழர்.முத்துக்குமார்
மாநிலச் செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
9790138614

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன